Latest Updates
-
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க..
5000 ஆண்டுகளுக்கு முன் புதைத்த மம்மிக்கள் இப்போதும் ப்ரெஷான வாசனையுடன் இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா?
உலக வரலாற்றில் எகிப்தியர்களுக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அவர்களின் கலாச்சாரமும், தொழில்நுட்பமும் உலக வரலாற்றில் அவர்களுக்கு ஒரு தவிர்க்க முடியாத இடத்தை வழங்கியுள்ளன. எகிப்தியர்களின் பிரமிடுகள் இன்றும் உலக அதிசயமாக கம்பீரமாக நிற்கிறது மற்றும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கிறது.
பிரமிடுகளில் ஒளிந்திருக்கும் ரகசியங்களும், அதிசயங்களும் முடிவில்லாதது. நவீன தொழில்நுட்பத்தால் கூட செய்ய முடியாத பல விஷயங்களை எகிப்தியர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சாதித்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அடக்கம் செய்யப்பட்ட எகிப்திய மம்மிகள், இன்னும் 'புதிய' வாசனையுடன் இருப்பதை, எகிப்திய அரச குடும்பங்களின் பண்டைய மம்மி எச்சங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒன்பது பண்டைய எகிப்திய மம்மிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் குழு, இந்த பண்டைய சடலங்கள் சுமார் 5000 ஆண்டுகளாக ஒரு சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட பிறகும், இன்னும் "நல்ல" வாசனையுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வாசனையின் தீவிரம் ஒரு மம்மியிலிருந்து மற்றொன்றுக்கு மாறுபடும், ஆனால் குழுவில் பணிபுரியும் அனைத்து விஞ்ஞானிகளும் அந்த நறுமணத்தை 'woody', 'spicy' மற்றும் 'sweet' என்று விவரித்தனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மம்மிஃபிகேஷன் செயல்முறையின் போது பயன்படுத்தப்படும் பைன் மற்றும் ஜூனிபர் பிசின்களிலிருந்து மலர் வாசனை வெளிப்படலாம், இது பண்டைய எகிப்திய நம்பிக்கைகளின்படி, இறந்தவர்கள் மறுபிறவியில் மீண்டும் பிறக்க உடலைப் பாதுகாப்பதற்கான ஒரு கடினமான செயல்முறையாகும்.
வாசனையின் மீளுருவாக்கம்
ஆராய்ச்சி குழு இப்போது தங்கள் ஆய்வகத்தில் அந்த வாசனையை வேதியியல்ரீதியாக மீண்டும் உருவாக்க முயற்சிக்கிறது, இதனால் மக்கள் ஒரு மம்மியின் "வாசனையை" தெரிந்து கொள்ள முடியும். "நாங்கள் ஒரு மம்மியை நுகரும் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அதனால்தான் நாங்கள் ஒரு ஆய்வகத்தில் வாசனையை மீண்டும் உருவாக்கி, கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் எங்கள் கண்டுபிடிப்புகளை வழங்குகிறோம்," என்று ஆராய்ச்சி குழுவை வழிநடத்தும் தலைமை ஆராச்சியாளர் கூறினார்.
மம்மிஃபிகேஷன் செயல்முறை
பண்டைய எகிப்தியர்கள், மம்மிஃபிகேஷன் செயல்முறையின் போது, உடல் அழுகுவதைத் தடுக்க உடலில் ஒரு வாசனை திரவிய பேஸ்ட்டைப் பூசினர் என்று கூறப்படுகிறது. ஏனெனில், இந்த செயல்முறையின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் இறந்தவர்களின் ஆன்மாவை மறுமை வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் என்று அவர்கள் நம்பினர். இந்த காரணத்திற்காக, எகிப்திய மன்னர்கள் மற்றும் பிரபுக்களின் உடல்கள் மம்மிஃபிகேஷன் போது எண்ணெய், மெழுகு மற்றும் தைலம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டன.
அமெரிக்க கெமிக்கல் சொசைட்டி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின்படி, மம்மியின் வாசனையை மீண்டும் உருவாக்குவதற்கான சோதனை அந்த மம்மிக்கு தீங்கு விளைவிக்காமல் எடுக்கப்பட்டது. எந்தவொரு உடல் மாதிரியையும் எடுக்காமல், வாசனையை அளவிட ஆராய்ச்சியாளர்கள் ஒரு சிறிய குழாயைச் செருகினர் என்று தலைமை ஆராச்சியாளர் தெரிவித்தார், மேலும் மாதிரிக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்க பாரம்பரிய விஞ்ஞானிகளால் புதிய முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இந்த சோதனை வெற்றிபெற்றால் விரைவில் மம்மி வாசனை திரவியம் உலகம் முழுவதும் கிடைக்கவும் கூட வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications

