கணவரைக் கொன்று 18 ஆண்டுகளாக உடலை வீட்டிற்குள்ளேயே மறைத்து வைத்த பெண்... அப்புறம் நடந்த ட்விஸ்ட் என்ன தெரியுமா?

கணவன்-மனைவி உறவு என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. கணவன் -மனைவி ஒருவருக்கொருவர் துணையாகவும், அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். ஆனால் எதார்த்தம் என்பது இந்த வரையறைகளுக்கு பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கணவன் மனைவியை கொடுமைப்படுத்துவதையும், மனைவி கணவரை கொடுமைப்படுத்துவதையும் நாம் தினம்தோறும் செய்திகளில் பார்க்கிறோம். சில சமயங்களில் இந்த கொடுமை எல்லை மீறி உயிரையே பறிக்கும் சம்பவங்கள் பலவற்றையும் நாம் பார்த்துள்ளோம். அந்த வகையில் உலக நாடுகளையே உலுக்கிய ஒரு சம்பவம் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

How a UK Woman Killed Her Husband And Hid His Body For 18 Years

நவம்பர் 2015 இல், வேல்ஸின் பெடாவ் நகரில் ஒரு அதிர்ச்சியூட்டும் கொலை வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. ஜான் சபீன் என்பவரின் எலும்புக்கூடு ஒரு தோட்டத்தில் பிளாஸ்டிக் பையி ல் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஜான் அக்டோபர் 2015 இல் இறந்த அவரது மனைவி லீ ஆன் சபீனால் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

பிரபலமாக "மேட் லீ" என்று அழைக்கப்படும் லீ ஆன், தனது கணவரைக் கொன்று அவரது உடலை 18 ஆண்டுகளாக அவர்களது வீட்டிற்குள் பல்வேறு இடங்களில் மறைத்து வைத்திருந்தார், இந்த காலகட்டத்தில் அவர் தனது ஐந்து குழந்தைகளையும் கைவிட்டுவிட்டார்.

ஜான் சபீன், 67 வயதான அக்கவுடன்ட், 1997 இல் அவரது வீட்டில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போனார். அவரது மனைவி அவர் தன்னை விட்டு ஓடி விட்டதாகக் கூறி நடத்தி அனைவரையும் தவறாக வழிநடத்தினார், அதே நேரத்தில் அவர் ஒரு கல் தவளையால் தாக்கி அவரைக் கொன்றார். அனால் யாருக்கும் தெரியாத வகையில் நுணுக்கமாக ஜானின் உடலை பிளாஸ்டிக் மற்றும் ஷாப்பிங் பைகளில் சுற்றி, வெவ்வேறு மறைவிடங்களுக்கு இடையே நகர்த்தினார், சில சமயம் படுக்கையின் கீழ், சில சமயம் தொட்டது வீட்டில், இறுதியில் அவரது மாடியில் என பல்வேறு இடங்களில் உடலை மறைத்து வைத்திருந்தார்.

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக, லீ ஆன் ஜானின் ஓய்வூதியத்தை தொடர்ந்து வாங்கி வந்தார். அக்டோபர் 30, 2015 அன்று அவர் மூளை புற்றுநோயால் இறக்கும் வரை அவரது ரகசியம் கண்டுபிடிக்கப்படவில்லை. சில வாரங்களுக்குப் பிறகு, அவரது தோழி மிஷெல் தனது உடைமைகளை மாடியில் அடுக்கிக்கொண்டிருந்தார். அங்கே அவர் ஒரு பெரிய பொட்டலத்தைக் கண்டார். அதில் என்ன உள்ளது என்பது தெரியாமலேயே, மிஷெல் அதை வெட்டி ஜானின் மம்மி செய்யப்பட்ட சடலத்தைக் கண்டுபிடித்தார்.

தடயவியல் நிபுணர்கள் நடத்திய பிரேதப் பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட பலமான தாக்குதல்தான் மரணத்திற்குக் காரணம் என்று தீர்மானிக்கப்பட்டது. "ரசாயன மம்மிஃபிகேஷன்" காரணமாக உடல் நன்கு பாதுகாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். ஜானின் தலையில் உள்ள காயங்களின் குறிப்பிட்ட வடிவமானது தவளை வடிவ ஆபரணத்தின் மீது சரியாக பொருந்தியது. லீ ஆன் தனது தோழி மிஷெலுக்கு கொடுத்த டிரிங்கெட் பெட்டியில் இந்த ஆபரணத்தை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, லீ தனது சிகையலங்கார நிபுணரிடம், "நான் போன பிறகு மக்கள் என்னைப் பற்றி பேசுவார்கள். நான் பிரபலமாகலாம்" என்று கூறினார். அவர் ஏன் என்று கேட்டதற்கு, "பையில் உடல் இருப்பதால்" என்று அவர் பதிலளித்தார்.

லீ ஆன் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு அவரை சந்தித்த புகைப்படக் கலைஞர் ஜூலியட் ஈடன், "லீ மிகவும் புத்திசாலி, மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அனைவரையும் 'டார்லிங்' என்று அழைத்து தனது ரகசியங்களை ஒரு அட்டகாசமான நடத்தைக்குப் பின்னால் மறைத்து வீட்டார். மக்கள் எதையாவது மறைக்க விரும்பினால், அவர்கள் அமைதியாக இருப்பார்கள், ஆனால் லீ அதற்கு நேர்மாறாக இருந்தார் " என்று கூறினார்.

ஜூலியட் ஈடன் "Frog Murderer" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார், இது லீ ஆன் சபீனுடனான அவரது அனுபவங்களை விளக்குவதாக உள்ளது.

ஜான் சபீனின் கொலை மற்றும் அவரது மனைவியின் ரகசியம் வெளிப்படுத்தப்பட்ட கதை "தி பாடி நெக்ஸ்ட் டோர்(The Body Next Door)" என்ற மூன்று பகுதி ஆவணத் தொடரில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் கடந்த தசாப்தத்தில் மிகவும் வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் உண்மையான குற்றக் கதைகளில் ஒன்றாக விளங்குகிறது.

Story first published: Tuesday, August 20, 2024, 16:59 [IST]
Desktop Bottom Promotion