Latest Updates
-
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க -
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஏப்ரல் மாதம் இந்த 5 ராசிக்காரங்க ஆரோக்கியம் மோசமாக இருக்கப்போகுதாம்... இவங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...!
நம் கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லையெனில் அது வீண்தான். அதனால்தான் 'ஆரோக்கியமே சிறந்த செல்வம்' என்று கூறப்படுகிறது. நமது ராசியும் அதன் கிரக நிலைகளும் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உதவிகரமாக இருக்கிறது.
ஒவ்வொரு மாதத்தையும் தொடங்குவதற்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்வது நல்லது. ஏப்ரல் மாதம் உங்கள் ராசிப்படி உங்கள் ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஏப்ரல் மாதத்திற்கான உங்கள் ஆரோக்கிய கணிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் தங்கள் முதுகு மற்றும் கீழ் முதுகு பகுதியை கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், உங்கள் உடலின் இந்தப் பகுதிகளில் கடுமையான வலி இருக்கலாம். எனவே நீங்கள் கடுமையான எந்த உடல் செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள். போதுமான ஓய்வும், சில யோகாசனங்களும் இந்த மாதம் உங்களை பாதுகாக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் செரிமானம் தொடர்பான சில பிரச்சினைகளால் எழலாம். இதன் அர்த்தம் உங்கள் உணவில் பல பழங்கள் மற்றும் நார்ச்சத்து இருக்க வேண்டும். மேலும், நிறைய தண்ணீர் குடிப்பதால் உங்கள் செரிமான சாறுகள் உங்கள் குடல் மற்றும் வயிற்றில் பாயும். இந்த மாதம் நொறுக்குத் தீனிகளிடம் இருந்து விலகி இருங்கள். மேலும் இந்த மாதம் கடுமையான தலைவலி அல்லது மார்பு எரிச்சல் ஏற்படலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த மாதம் வயிற்றின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்கள் உணவின் மீது அதிக கவனமாக இருங்கள் மற்றும் கோடைகாலம் ஆரம்பித்து விட்டதால் அதிக தண்ணீர் குடிப்பது நல்லது. இந்த மாதம் வேலைப்பளு அதிகரிக்கும், எனவே அதற்கு தயாராக இருங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த மாதம் அதிக சோர்வை சந்திக்க நேரிடும். அவர்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரை ஆலோசிக்காமல் தாங்களாகவே மருந்து எடுத்துக்கொள்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஆரோக்கியத்தில் இந்த சிக்கலும் இருக்காது. இருப்பினும், நீரிழிவு தொடர்பான அறிகுறிகள் இருந்தால் அதில் அலட்சியம் காட்டக்கூடாது. அலைச்சலால் சாப்பிடுவதை ஒருபோதும் தவிர்க்கக்கூடாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் மனஅழுத்தத்தால் நிறைய சிக்கல்களை சந்திக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையாலும், தொழில் வாழ்க்கையாலும் இந்த மாதம் அதிக மனஅழுத்தம் ஏற்படலாம். முடிந்தவரை மனஅழுத்தமிக்க சூழலைத் தவிர்க்கவும். மோசமான சூழ்நிலையில் மருத்துவரை அணுகத் தயங்காதீர்கள்.
துலாம்
இந்த மாதம் துலாம் ராசிக்காரர்கள் கடுமையான தலைவலியால் பாதிக்கப்படலாம். மேலும் கண்களில் அமிலத்தன்மை மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதிக பணிச்சுமை மற்றும் அதிக நேரம் ஸ்க்ரீன் பார்ப்பதைத் தவிர்க்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனாலும் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த மாதம் சருமம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். இந்த மோசமான வெயில்காலம் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அதிக தண்ணீர் குடிக்கவும் மற்றும் சருமத்திற்கு சரியான பொருட்களைப் பயன்படுத்தவும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த மாதம் அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம். மேலும் சளி, இருமல் போன்ற சுவாசம் தொடர்பான பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்
இந்த மாதம் நீங்கள் கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் உங்கள் மனஆரோக்கியத்தைப் பாதிக்கும் எந்த செயலிலும் ஈடுபடாதீர்கள். உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க தியானம், யோகாசனம் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த மாதம் உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருப்பார்கள். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் இந்த மாதம் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருக்கும்.



Click it and Unblock the Notifications

