Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
ஏப்ரலில் குரு-ராகு-சூரியனால் உருவாகும் 2 விஷ யோகங்கள்: இந்த 4 ராசிக்காரங்க ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கணும்...
Guru Chandal-Grahan Yoga In April 2023: வேத ஜோதிடத்தின் படி, 2023 ஏப்ரல் மாதத்தில் குரு, சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் தங்களின் ராசிகளை மாற்றுகின்றன. அதுவும் பல கிரகங்கள் மேஷ ராசியில் ஒன்றாக இணைந்து பயணிக்கின்றன. அதில் 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த மேஷ ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருகிறார். இதனால் சூரிய பெயர்ச்சிக்கு பின் மேஷ ராசியில் ராகு-சூரிய சேர்க்கையான கிரகண யோகம் உருவாகிறது.
அதைத் தொடர்ந்து 2023 ஏப்ரல் 22 ஆம் தேதி குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பின் மேஷ ராசிக்கு செல்கிறார். முன்பே கூறியது போல், ஏற்கனவே மேஷ ராசியில் ராகு உள்ளார். இதனால் குரு பெயர்ச்சிக்கு பின், மேஷ ராசியில் குரு-ராகு சேர்க்கையால் குரு சண்டல் யோகம் உருவாகும். ஜோதிடத்தில், இந்த இரண்டு யோகங்களுமே தீங்கை விளைவிக்கும் விஷ யோகங்களாக கூறப்படுகின்றன.

இந்த இரண்டு யோகங்கள் ஏப்ரல் மாதத்தில் உருவாவதால், அந்த விஷ யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த 4 ராசிக்காரர்களுக்கு பாதிப்பானது சற்று கூடுதலாக இருக்கும். இப்போது ஏப்ரல் மாதத்தில் உருவாகும் கிரகண யோகம் மற்றும் குரு சண்டல் யோகத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் உருவாகும் இரண்டு விஷ யோகங்களால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் வேலை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களின் நிதி நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
ஆடம்பரமாக செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனையில் சிக்கக்கூடும். வணிகர்கள் இக்காலத்தில் பண இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளதல், முதலீடுகளை இக்காலத்தில் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகங்களால் ஏப்ரல் மாதமானது கடினமாக இருக்கும். எதிரிகள் வீழ்த்த/அழிக்க முயற்சிப்பார்கள். உங்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்க பல விஷயங்களை செய்வார்கள். எனவே இக்காலத்தில் யாரையும் நம்பாதீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
குடும்ப வாழ்க்கை பதட்டங்கள் நிறைந்து இருக்கும். அதற்கு பண பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். இந்த காலத்தில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையை நம்புங்கள். இல்லாவிட்டால் திருமண வாழ்க்கை மோசமாகிவிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த இரண்டு விஷ யோகங்கள் தொழில் வாழ்க்கையி பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். அலுவலகத்தில் உங்களின் நிதானத்தை கைவிட்டுவிடாதீர்கள். இல்லாவிட்டால் உங்களின் நடத்தையால் பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இக்காலத்தில் பண பரிவர்த்தனைகள் அல்லது கடன் வாங்குவது அல்லது கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லையெனில் நிதி இழப்பு ஏற்படும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்க, அவருடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு சண்டல் மற்றும் கிரகண யோகங்கள் படாதபாடு படுத்தும். வேலை தேடிக் கொண்டிருந்தால், இன்னும் காத்திருக்க வேண்டும். இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியம் உங்களுக்கு நிறைய செலவை வைக்கும். இதைத் தவிர்க்க வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும், வழக்கமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற அதிக முயற்சி எடுக்க வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக இக்காலம் சவால் நிறைந்ததாக இருக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications