Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
இந்த 4 ராசிக்காரங்க தங்கம் அணிவது தூங்கிட்டு இருக்கும் அவங்க அதிர்ஷ்டத்தை எழுப்பி விடுமாம்... உங்க ராசி என்ன?
உலகம் முழுக்க மக்கள் தங்கத்தின் மீது தனி ஆர்வம் கொண்டுள்ளனர், ஆனால் இந்திய மக்களின் தங்கம் மீதான மோகம் என்பது அளவிட முடியாதது. இந்தியாவில் கடவுள்கள் கூட தங்கத்தால்தான் அலங்கரிப்படுகின்றனர், அந்த அளவிற்கு தங்கம் புனிதமானதாகவும், மதிப்பு மிக்கதாகவும் கருதப்படுகிறது. தங்கம் அணிவது பல ஜோதிடரீதியாக நற்பலன்களை அளிப்பதுடன், பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஆள்காட்டி விரலில் தங்க மோதிரத்தை அணிவதன் மூலம் ஆற்றல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. தங்க ஆபரணங்கள் அணிவதும் ராஜயோகத்தைப் பெற உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு தங்கம் அணிவது அவர்களின் தூங்கிக்கொண்டிருக்கும் அதிர்ஷ்டத்தை எழுப்பிவிட உதவும்.

தங்க மோதிரம் அணிவதன் நன்மைகள்
மோதிர விரலில் தங்க மோதிரம் அணிவதன் மூலம் குழந்தை பாக்கியம் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அடைவதில் தங்க ஆபரணங்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன. திருமணத்திற்குப் பின் தங்கம் அணியும் வழக்கம் நம் சமூகத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தங்கம் அதிக அதிர்ஷ்டம் தரும் என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தங்க ஆபரணங்களை அணிய வேண்டும். சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு தங்க உலோகம் அவர்களின் அதிர்ஷ்டத்திற்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. அவர்கள் குறைந்தபட்சம் தங்க மோதிரத்தையாவது அணிய வேண்டும். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் தங்கத்தின் அதிபதியான வியாழன் கிரகத்துடன் நட்பான உறவைக் கொண்டுள்ளார், இதன் காரணமாக தங்கம் அவர்களுக்கு அதிர்ஷ்டமானதாகிறது. இது அவர்களின் ஆற்றலையும் உற்சாகத்தையும் அதிகரிப்பதன் மூலம் நன்மைகளைத் தருகிறது.
கன்னி
அனைவருமே செல்வத்தை விரும்புகிறார்கள், மக்கள் அனைவருமே செல்வா செழிப்புடன்தான் வாழவே விரும்புகிறார்கள். கன்னி ராசியில் பிறந்தவர்களின் இந்த ஆசையை நிறைவேற்றுவதில் தங்க ஆபரணங்கள் பெரும் பங்கு வகிக்கும். அவர்கள் செயின் அல்லது தங்க காப்பு அணியலாம். ஒருவேளை அதனை அணிய முடியவில்லை என்றால், குறைந்தபட்சம் ஒரு மோதிரத்தை அணிய வேண்டும். கன்னி ராசிக்கு, வியாழன் ஏழாவது மற்றும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி, எனவே இந்த வியாழனின் உலோகத்தை அணிவது அவர்களுக்கு அதிர்ஷ்டமானது.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் தங்க ஆபரணங்களை அணிந்தால் அவர்களின் தூங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டம் விழித்துக் கொள்ளும் என்பது நம்பிக்கை. குறிப்பாக தங்க மோதிரம் அணிவது அவர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். உங்கள் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன் மற்றும் தங்கத்தின் அதிபதியான வியாழன் கிரகம் இரண்டு கிரகங்களும் பரஸ்பர பகை கொண்டவர்களாக கருதப்பட்டாலும், தங்கம் உங்களுக்கு சுப பலன்களைத் தருகிறது. வியாழன் உங்கள் ஜாதகத்தில் மூன்று மற்றும் ஆறாம் இடங்களுக்கு அதிபதியாக இருந்து உங்களுக்கு பலம் தருகிறார். மேலும் இது நோய்கள் மற்றும் எதிரிகளிடமிருந்து உங்களைப் பாதுகாக்கவும் உதவும்.
தனுசு
ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிவதால் சுப பலன்கள் கிடைக்கும். இதனால் அவர்களின் பணிகள் விரைவாக முடிவடையும், ஆனால் உங்கள் காலில் தங்க நகைகளை அணியக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்குக் காரணம் உங்கள் ராசியை ஆளும் கிரகம் வியாழன். தங்கம் என்பது வியாழனுடன் மட்டுமே தொடர்புடைய உலோகம். எனவே காலில் தங்கம் அணிவது வியாழனை அவமதிப்பதாகக் கருதப்படும்.
தங்கம் அணியக்கூடாத ராசிகள்
மிதுன ராசிக்காரர்கள் தங்க ஆபரணங்களைத் தொடர்ந்து அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறது. தங்க உலோகம் உங்களுக்கு நல்லதாக கருதப்படுவதில்லை, ஏனெனில் உங்கள் ராசியானது புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. தங்கம் என்பது வியாழன் கிரகத்துடன் தொடர்புடைய உலோகமாகும். வியாழனும் புதனும் ஒன்றுக்கொன்று முற்றிலும் நேர் எதிரான கிரகங்கள். இந்த காரணத்திற்காக, இந்த உலோகம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தராது.



Click it and Unblock the Notifications
