Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
விநாயகர் சதுர்த்தியில் 16 படி பூஜை என்றால் என்ன? இன்னும் அறியப்படாத பல தகவல்கள்...
Ganesh Chaturthi 2023: ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி என்பது கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல வண்ணங்களில் பல உருவங்களில் நாம் விநாயகர் வழிபாட்டை காண முடியும். விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. வெகு விமர்சையாக மக்கள் விரதம் இருந்து விநாயகருக்கு பூஜை செய்து வழிபடுகின்றனர்.
விநாயகர் நம் குடும்பங்களில் மிக முக்கியமான தெய்வமாக கருதப்படுகிறார். விநாயகர் சதுர்த்திக்கு சில மாதங்களுக்கு முன்பு இருந்தே விநாயகரின் சிலை வடிவமைக்க ஆரம்பித்து விடும். ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில், இந்த பண்டிகை பரவலாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவைத் தவிர, நேபாளம், அமெரிக்கா, மொரிஷியஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆமாம் இது போன்று விநாயகர் சதுர்த்தி குறித்து நாம் அறியப்படாத ஏராளமான விஷயங்கள் உள்ளன. அதைப்பற்றி தான் நாம் இக்கட்டுரையில் காணப் போகிறோம்.
விநாயகர் சதுர்த்தியும் பாலகங்காதர திலகர்
மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆடம்பரமான பந்தல்களுடன் அழகான சிலைகளுடன் இதை கொண்டாடுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு விநாயகர் சதுர்த்தி என்பது வீடுகளில் மட்டுமே கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தது. ஆனால் நம் இந்திய தேசியவாதியும் சுதந்திர போராட்ட வீரருமான பாலகங்காதர திலகர் முயற்சியால் தான் இந்த பண்டிகை வெளியே தெருக்களில் 1893 ஆம் வருடம் கொண்டாடப்படத் தொடங்கியது.
சிவாஜியின் புரவலர் தெய்வம்
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் மராட்டிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சத்ரபதி சிவாஜி மகாராஜரின் காலத்திலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. மகாராஜரின் குடும்பம் விநாயகரை குடும்ப தெய்வமாக கருதி வழிபட்டு வருகின்றனர்.
விநாயகப் பெருமானும் மகாபாரதமும்
விநாயகப் பெருமானுக்கும் மகாபாரதத்திற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த மகாபாரதத்தை எழுதியதே விநாயகப் பெருமான் தான் என்று வரலாறு கூறுகிறது. ஒரு நாள் வியாச முனிவர், நம்ம விநாயகப் பெருமானை மகாபாரதத்தைப் புரிந்து கொள்ளத் தகுதியானவர் என்பதை கண்டறிந்து, அதை எழுதச் சொன்னார்.
அதன்படி விநாயகரும் எழுதிக் கொண்டு இருக்கும் போதே மை தீர்ந்து விட்டதால் தனது தந்தத்தை உடைத்து எழுத பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. அதனால் தான் விநாயகப் பெருமான் ஒரு பக்கம் உடைந்த தந்தத்தை பெற்றுள்ளார்.
விநாயகப் பெருமானுக்கு மோதகம் மட்டுமல்ல இதுவும் பிடிக்கும்
விநாயகர் பெருமானுக்கு மோதங்கள் மட்டுமல்ல உருண்டையான இனிப்புகள் கூட மிகவும் பிடிக்கும். பாரம்பரிய மராத்திய இனிப்புகளான பூரன் போளி, கரஞ்சி போன்றவை பிடிக்கும்.
விநாயகப் பெருமானுக்கான 16 ஆம் படி பூஜை
இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகப் பெருமானுக்கு 16 ஆம் படி பூஜையும் நடத்தப்படுகிறது. விழாவின் நான்கு முக்கிய சடங்குகளில் ஷோடசோபச்சாராவும் ஒன்றாகும். இந்த 16 படிகளில் ஆவாஹனம், பிரதிஷ்டாபன், ஆசன சமர்ப்பணம், அர்க்கிய சமர்ப்பணம், அச்சமன, மதுபர்கா, ஸ்னானம், வஸ்த்ர சமாபனம், யக்யோபவித், காந்தா, புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் தாம்பூலம் ஆகியவை அடங்குமாம்.
மிக நீளமான விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
இந்தியாவின் பழமையான மண்டலங்களில் ஒன்றான லால்பாக்சா ராஜா மண்டல் 1934 ஆம் ஆண்டு பெரு சால் பகுதியில் நிறுவப்பட்டது. 1932 ஆம் ஆண்டு அங்கிருந்த மீனவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அந்தப் பகுதியில் பெரிய விநாயகர் சிலையை அமைக்க ஏற்பாடுகள் செய்தனர்.
1935 ல் லால்பாக்சா ராஜா என்ற உயரமான விநாயகர் சிலை முதன்முதலில் மீனவர்களால் நிறுவப்பட்டது. இந்த விநாயகர் சிலை இந்தியாவில் மிகவும் பிரமாண்டமான சிலையாக பார்க்கப்படுகிறது. இங்கு விநாயகர் சதுர்த்தி அன்று மிகப்பெரிய ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலம் காலை 10 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை 8 மணி வரை நடைபெறுமாம்.
விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்க கூடாது
விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்ப்பது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. புராணத்தின் படி, ஒருமுறை, விநாயகப் பெருமான் விருந்தில் இருந்து திரும்பும் போது, அவர் எலி மீது சவாரி செய்தார்.
அப்போது திடீரென பாம்பைக் கண்ட எலி, பயத்தில் விநாயகப் பெருமானை தரையில் இறக்கியது. விநாயகப் பெருமான் தனது பெரிய வயிற்றுடன் கஷ்டப்படுவதை கண்ட சந்திர பகவான் அப்போது விநாயகப் பெருமானின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் வேடிக்கை பார்த்து நகைத்தார்.
இதனால் கோபம் கொண்ட விநாயகப் பெருமான் சந்திர பகவானுக்கு சாபம் விடுத்தார். நீ பாதி நாட்கள் தேய்ந்து போவாய், உன் ஒளி குன்றி போய் காணப்படுவாய் என்று சாபமிட்டார். இறுதியாக சந்திரன் மன்னிப்பு கேட்டதை அடுத்து விநாயகர் அவருக்கு சாப விமோசனம் கொடுத்தார்.
அதன் படி மனிதர்கள் எல்லா நாளும் சந்திரனை பார்க்கலாம் ஆனால் பாத்ரபாத சதுர்த்தி அன்று மட்டும் சந்திரனை பார்க்க கூடாது. அந்த நாளில் சந்திரனை பார்ப்பது நல்லது கிடையாது தீங்குகள் தேடி வரும் என்று விநாயகர் கூறினார் என்று புராணங்கள் கூறுகின்றன.



Click it and Unblock the Notifications











