Latest Updates
-
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 5 குணம் இருக்கும் பெண்கள் ஆண்களின் தலைவிதியை மாற்றும் சக்திவாய்ந்தவர்களாம்...!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவர் சாணக்கியர், சந்திரகுப்த மௌரியரை மன்னராக மாற்றியதில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது. ஆச்சார்ய சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆச்சார்ய சாணக்கியர் என்ற சிறந்த வியூகவாதி சொன்னது எல்லாம் நிகழ்காலத்திற்கு சரியாகப் பொருந்துகிறது. சாணக்கியர் தனது நெறிமுறைகளில் ஒவ்வொரு விஷயத்தையும் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆச்சார்ய சாணக்கியர் பெண்களைப் பற்றி பல விஷயங்களை விளக்கியுள்ளார். ஆச்சார்யாவின் கூற்றுப்படி, சில பெண்கள் ஒரு நபரின் தலைவிதியையே மாற்ற முடியும், இந்த 5 குணங்களைக் கொண்ட ஒரு பெண் எந்தவொரு நபரையும் எளிதில் அதிர்ஷ்டசாலியாக மாற்ற முடியும்.
தாய், சகோதரி, தோழி, மனைவி அல்லது காதலி என எந்த வடிவத்திலும் இந்த குணம் கொண்ட பெண் ஒருவரின் வாழ்க்கையில் அவசியம் இருக்க வேண்டும். அந்த குணங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கடவுள் நம்பிக்கை உள்ள பெண்
எந்தவொரு நபரின் வாழ்க்கையிலும் கடவுள் நம்பிக்கையுடைய ஒரு பெண் இருந்தால், அவரது விதி மாறும். கடவுள் நம்பிக்கை உள்ள பெண்கள் ஒவ்வொரு நாளும் கடவுளை வழிபடுகிறார்கள். பெண்கள் தினமும் பூஜை செய்து வழிபடும் வீடுகளில் கடவுள் வசிக்கிறார்.
அத்தகைய பெண்கள் ஒருவர் வாழ்க்கையில் இருக்கும்போது, ஒரு நபரின் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சினையும் அகற்றப்படுகிறது.
திருப்தியுணர்வு உள்ள பெண்
பெண்களுக்கு இருக்க வேண்டிய மிகவும் முக்கியமான உணர்வுகளில் ஒன்று திருப்தியுணர்வு. தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி திருப்தியுடன் இருக்கும் பெண், ஒவ்வொரு நல்ல மற்றும் கெட்ட சூழ்நிலையிலும் தங்கள் துணையை ஆதரிக்கிறார்.
இத்தகைய பெண்கள் மிகப்பெரிய பிரச்சனைகளில் கூட தங்கள் துணையை திருப்தியுடன் ஆதரிக்கிறார்கள்.
பொறுமையுள்ள பெண்
வாழ்க்கையில் அனைத்து சூழ்நிலையிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கும் பெண்கள் தங்கள் திருமணத்திலும், வாழ்க்கையிலும் தோல்வியடைவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் தனது வாழ்க்கையில் ஒரு பொறுமையான பெண்ணைக் கொண்டவர்கள், எப்போதும் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்.
கோபமில்லாத பெண்
கோபம்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் மிகப்பெரிய எதிரி என்று சொல்லப்படுகிறது, இந்த உணர்வை கட்டுப்படுத்த தெரிந்தபெண் கோபம் கொள்ளாமல், வாழ்க்கையில் எப்போதும் அமைதியாக வீட்டை நடத்துகிறார். அமைதி இருக்கும் வீடுகளில் கடவுள் வசிக்கிறார். அத்தகைய வீடுகளில் பெரிய தடைகளும், துன்பங்களும் வருவதில்லை.
இனிமையாக பேசும் பெண்
இனிமையான மற்றும் மென்மையான வார்த்தைகளைப் பேசும் ஒரு பெண் ஒருவரின் வாழ்க்கையில் இருந்தால், அவர்களுடைய அதிர்ஷ்டம் எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் அவர்களை ஆதரிக்கிறது.
இந்த குணம் கொண்ட பெண்கள் எப்போதும் தங்கள் வீட்டின் சூழ்நிலையை இனிமையாக வைத்திருப்பார்கள், அவர்கள் இருக்கும் இல்லத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications