Latest Updates
-
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம்
சாணக்கிய நீதி படி இந்த 3 நபர்களிடம் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் உதவி கேட்டுற கூடாதாம்...!
Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியர் இந்தியாவின் முதல் சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் தத்துவஞானி ஆவார். மௌரிய வம்சத்தின் வெற்றிக்குப் பின்னால் சாணக்கியரின் புத்திக்கூர்மையும், இராஜதந்திரமும் இருந்தது. சிறந்த இராஜதந்திரியும், பொருளாதார நிபுணருமான சாணக்கியர் தனது கொள்கைகளின் பலத்தால் நந்த வம்சத்தை அழித்து, ஒரு எளிய குழந்தையான சந்திரகுப்த மௌரியரை மகதத்தின் பேரரசர் ஆக்கினார்.
சாணக்கியருக்கு அரசியல் மட்டுமின்றி சமூகத்தின் பெரும்பாலான விஷயங்களில் ஆழ்ந்த ஞானமும், அனுபவமும் இருந்தது. பொருளாதாரம், அரசியல், இராஜதந்திரம் தவிர, ஆச்சார்ய சாணக்கியர் நடைமுறை வாழ்க்கை பற்றியும் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். இன்றும் மனிதனின் இக்கட்டான காலங்களில் அவரது வார்த்தைகளும் கொள்கைகளும் பெரிதும் உதவுகின்றன.

சாணக்கிய நீதியை ஒருவர் சரியாகப் பின்பற்றினால், அவர் வாழ்க்கையில் ஒருபோதும் ஏமாற்றமடைய வேண்டியதில்லை. சாணக்கியக் கொள்கையின்படி, மனிதர்களுக்கு மற்றவர்களை சரியாக எடை போடும் திறன் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டார்கள்.
தீயவர்களைப் பற்றி சாணக்கிய நீதி என்ன சொல்கிறது?
சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி, நம்மைச் சுற்றி பாம்பு, தேள் மட்டுமல்ல அவற்றை விட ஆபத்தான சிலர் இருக்கிறார்கள். எனவே அத்தகையவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து விலகியிருக்கும் திறன் நமக்கு இருக்க வேண்டும். மேலும், வாழ்க்கையில் அப்படிப்பட்டவர்களிடம் உதவியை ஒருபோதும் பெறக்கூடாது.
யாரெல்லாம் தீயவர்கள்?
சாணக்கிய நீதியின் படி, பிறப்பால் பார்வையற்ற ஒருவரால் எதையும் பார்க்க முடியாது என்பது போல, காமம், கோபம் மற்றும் போதை ஆகியவற்றால் நிறைந்தவர் அதைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. அதே சமயம் சுயநலவாதிகளும் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு அனைவருமே சமம். அதனால் தான் சுயநலமான ஒருவருடன் நட்பு கொள்ளவோ, உதவி கேட்கவோ கூடாது.
சுயநலவாதிகளிடமிருந்து விலகி இருங்கள்
ஆச்சார்ய சாணக்யா, தவறுதலாகக் கூட சுயநலவாதிகளை நம்பக்கூடாது என்று கூறுகிறார். ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு ஒருபோதும் நன்மை செய்ய முடியாது, மாறாக அவர்கள் உங்களை சிக்கலில் ஆழ்த்துவார்கள்.
சாணக்கியரின் கூற்றுப்படி, எதிரி எதிரில் இருந்து தாக்குவார்கள், அவருடைய தாக்குதலை கவனமாக இருந்து நாம் சமாளிக்கலாம். ஆனால் சுயநலவாதிகள் மற்றும் மோசமானவர்கள் முதுகுக்குப் பின்னால் தாக்குகிறார்கள். அத்தகையவர்களை ஒருபோதும் நம்பக்கூடாது. ஒரு சுயநலவாதி தன் சொந்த நன்மையைத் தவிர வாழ்க்கையில் எதையும் நினைப்பதில்லை. மேலும் தன் சுயநலத்திற்காக மற்றவர்களை சிக்க வைப்பார்கள்.
அதிகளவு கோபப்படுவார்கள்
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, மூர்க்க குணம் கொண்டவரிடமிருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும், ஏனெனில் கோபமே மனிதனின் மிகப்பெரிய எதிரி. கோபத்தில் இருக்கும்போது ஒருவரின் சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் செயலிழக்கிறது. கோபப்படுவதால், ஒருவர் தனக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு செய்கிறார். கோபத்தில், ஒரு நபரின் சரி மற்றும் தவறு பற்றிய புரிதல் குறைந்து, அவர் தனது மகிழ்ச்சியைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார். அத்தகையவர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்கள்.
தந்திரம் மற்றும் பேராசைக் கொண்டவர்கள்
சாணக்கிய நீதியின் படி, ஒரு மனிதன் தனது சொந்த நலனுக்காக, பேராசை மற்றும் பொறாமை கொண்ட நபரிடமிருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இக்கட்டான சமயங்களில் கூட அப்படிப்பட்டவர்களிடம் உதவியை நாடக்கூடாது. ஏனென்றால் பேராசை மற்றும் பொறாமைக் கொண்டவர்கள் உங்களுக்கு நல்லதுக்கு பதிலாக தீங்கு விளைவிப்பர்கள்.
உண்மையில், பொறாமை குணம் கொண்டவர்களுக்கு சரி மற்றும் தவறு பற்றிய புரிதல் இருக்காது. மற்றவர்களின் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியடைவதில்லை. பொறாமையும், பேராசையும் கொண்டவர்கள் மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்பட்டு அவர்களுக்குத் தீங்கு செய்ய முயற்சிப்பார்கள்.



Click it and Unblock the Notifications
