Latest Updates
-
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம்
சாணக்கிய நீதி படி இந்த 5 வகை நபர்களுடன் தெரியாம கூட நண்பரா இருக்கக்கூடாதாம்...இல்லனா உங்களுக்குதான் ஆபத்து...!
Chanakya Niti: சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றி எழுதியுள்ளார். சாணக்கிய நீதியில் கூறியுள்ளதை பின்பற்றுபவர்கள் தனது வாழ்க்கையில் நிச்சயம் வெற்றியை அடைகிறார். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நண்பர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தனக்கு ஆதரவாக இருக்கும் நண்பர்களையே எல்லோரும் விரும்புகிறார்கள்.

இருப்பினும், பலர்ரும் சற்றும் யோசிக்காமல் நிறைய நண்பர்களை உருவாக்குகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பிற்காலத்தில் அதிக வருத்தப்பட வேண்டியிருக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் எப்போதும் தனது நண்பர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு புத்திசாலி எப்போதும் சரியான பாதையைக் காட்டுகிறார். நட்பை உருவாக்கும் போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்கிறார். அப்படிப்பட்டவர்களிடம் நண்பர்களாக இருக்கவே கூடாது என்கிறார் சாணக்கியர்.
சுயநலமான நண்பர்
சாணக்கியரின் கூற்றுப்படி, எதிரி மற்றும் நண்பரை வேறுபடுத்த முடியாத ஒருவர் பின்னர் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். மற்றவர்களுடன் நட்பு கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுயநலம் கொண்ட நண்பர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். சுயநல நண்பர்கள் தங்கள் சொந்த நோக்கங்களுக்காக உங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள் மற்றும் தேவை ஏற்படும் போது உங்களை நிராகரிப்பார்கள்.
பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நண்பன்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவரின் பதவி, குணங்கள் மற்றும் செல்வத்தைப் பார்த்து பழகுபவர்களுடன் ஒருபோதும் நட்பு கொள்ளக்கூடாது. அத்தகையவர்களுடன் ஒருபோதும் நட்பு கொள்ளாதீர்கள். ஏனென்றால், உங்கள் பணமும் புகழும் இல்லாமல் போனால், அவர்கள் உங்களை விட்டுப் போய்விடுவார்கள்.
ஆபத்தில் கைவிட்ட நண்பன்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு உண்மையான நண்பர் உங்களை மோசமான காலங்களில் விட்டுவிடமாட்டார். உங்கள் மோசமான காலங்களில் அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உண்மையான நண்பர்கள் உங்கள் தைரியத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உங்களுக்கு சரியான ஆலோசனைகளையும் வழங்குவார்கள். ஆனால் கெட்ட நேரம் வரும்போது, தவறான நண்பன் உன்னைக் கைவிட்டுவிடுவார்கள். எனவே கெட்ட நேரத்தில் தான் சரியான நண்பன் யார் என்பதை உணர முடியும்.
மோசமான குணமுள்ள பெண்
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்த காரணமும் இல்லாமல் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களுடன் ஒருபோதும் நட்பு கொள்ள வேண்டாம். அப்படிப்பட்டவரின் சகவாசம் உங்கள் குணத்தையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே கெட்ட குணம் கொண்ட ஒருவருடன் நீங்கள் ஒருபோதும் நட்பு கொள்ளக்கூடாது.
முதுகில் குத்துபவர்கள்
முகத்திற்கு நேராக இனிமையாகப் பேசிவிட்டு பின்னால் இருந்து உங்களுக்கு எதிராக செயல்படுபவர்களுடன் ஒருபோதும் நட்பு கொள்ளாதீர்கள். அத்தகைய நண்பர்கள் நஞ்சு நிறைந்த பானை போன்றது. வெளியில் இனிமையாகவும் உள்ளத்தில் தீயவனாகவும் இருப்பவரை நண்பன் என்று சொல்ல முடியாது. அத்தகைய நண்பர் உங்கள் தனிப்பட்ட மற்றும் சமூக நற்பெயரைக் கெடுப்பார்கள்.



Click it and Unblock the Notifications

