Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
சாணக்கிய நீதி படி இந்த வகை நண்பர்கள் உங்க வாழ்க்கையில் இருந்தால் உங்களை யாராலும் காப்பாத்த முடியாதாம்...!
Chanakya Niti: சாணக்கிய நீதி என்பது மனிதனை சரியான பாதையில் வழிநடத்த உதவும் அறிவுரை மற்றும் கொள்கைகளின் தொகுப்பாகும். சாணக்கிய நீதி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் குறிப்பிடுகிறது. சாணக்கிய நீதியின் வார்த்தைகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம். அதுமட்டுமின்றி செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி தேவியின் நிரந்தர ஆசியையும் பெறலாம்.
நட்பு எல்லா உறவுகளையும் விட வலுவானது என்று கூறப்படுகிறது. ஒருவர் பிறப்பால் மகன், சகோதரன், மருமகன் போன்ற பல உறவுகளைப் பெறுகிறார். ஆனால் நட்பு என்பது ஒருவர் சொந்தமாக உருவாக்கும் ஒரே உறவு. அதனாலேயே நட்பு மிகப் பெரியதாக மற்றும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஆச்சார்யா சாணக்கியர் நட்பைப் பற்றி சில விஷயங்களைக் கூறியுள்ளார். சிரித்துப் பேசும் அனைவரும் நண்பர்கள் அல்ல என்கிறார் சாணக்கியர். அப்படிப்பட்டவர்கள் நண்பர்களாக மாறினால், அவர்களிடமிருந்து எப்போதும் தூரமாக இருக்க வேண்டுமென்று சாணக்கியர் கூறுகிறார்.
சுயநல நண்பர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்
சுயநலம் மற்றும் பேராசை கொண்ட நண்பர்களிடமிருந்து விலகி இருங்கள் என்று நீதியில் சாணக்யா கூறுகிறார். ஏனென்றால் அப்படிப்பட்டவர்கள் தங்கள் நலனைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். அத்தகையவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய எதையும் செய்ய தயாராக உள்ளனர்.
அப்படிப்பட்டவர்களிடம் கவனமாக இருக்குமாறு சாணக்யகியர் அறிவுறுத்துகிறார். கட்டிப்பிடித்து கைகுலுக்கும் அனைவரும் நண்பர்களாக இருக்க முடியாது. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் வாழ்க்கை முழுவதும் வருந்தலாம்.
முட்டாள் நண்பர்களைத் தவிர்க்கவும்
ஒரு முட்டாள் நண்பன் உங்களை எப்போது வேண்டுமானாலும் தவறான செயல்களை செய்ய வைக்கலாம் அல்லது பள்ளத்தில் குதிக்க வைக்கலாம். புத்திசாலிகளை எப்போதும் நண்பர்களாக வைத்திருக்க வேண்டும் என்று நீதியில் சாணக்கியர் கூறுகிறார்.
நட்பில் கவனம் வேண்டும்
நீங்கள் ஒருவருடன் நட்பு கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். எந்த சூழ்நிலையிலும் உங்களைப் பற்றிய அனைத்து ரகசியங்களையும் உங்கள் நண்பரிடம் சொல்லாதீர்கள். ஏனென்றால் உங்கள் நண்பர் நம்பகமானவராக இல்லாவிட்டால் அது உங்களைப் பின்னாளில் காயப்படுத்தும்.
அவர்கள் உங்களுக்கு எதிராக உங்கள் இரகசியங்களைப் பயன்படுத்துவார்கள். சுயநல நண்பர்களிடம் இருந்து விலகி இருங்கள். ஏனென்றால் அத்தகையவர்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் உங்கள் நேரத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். உங்களுக்கு கெட்ட நேரம் வரும்போது அப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக உங்களை விட்டு விலகுவார்கள்.
பாவம் செய்பவர்களுடன் பழக்ககூடாது
சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் பாவிகளுடன் நட்பு கொள்ளக்கூடாது என்று கூறுகிறார். அப்படிப்பட்ட ஒருவருடனான நட்பு எப்போது வேண்டுமானாலும் உங்களை சிக்கலில் மாட்டிவிடலாம். பாவம் செய்பவர் உங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியைத் தரமாட்டார். இதன் காரணமாக, உங்கள் பிரச்சினைகள் எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம்.
தவறான பழக்கங்கள் உள்ளவர்களுடன் நட்பு கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, தீயவர்களிடமிருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும். சாணக்ய நீதியின் படி, கெட்ட பழக்கங்களால் சூழப்பட்ட ஒருவருடனான நட்பு உங்களுக்கு ஒருபோதும் பயனளிக்காது. அத்தகையவர்களின் கெட்ட பழக்கங்கள் உங்கள் வாழ்க்கையையும் பாதிக்கும். ஒரு தவறான நபர் உங்களுக்கு எந்த நேரத்திலும் கெட்ட காரியங்களைச் செய்யலாம் மற்றும் உங்களுக்கு எந்த நேரத்திலும் தொந்தரவு செய்யலாம்.



Click it and Unblock the Notifications
