Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் வறுமையில்லாமல் வாழ இந்த 5 விதிகளை அவசியம் பாலோ பண்ணணுமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த தத்துவஞானி, பொருளாதார நிபுணர் மற்றும் பண்டைய இராஜதந்திரி ஆவார். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றி சாணக்கியருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. சாணக்கியரின் உத்திகள் சந்திர குப்த மௌரியருக்கு பெரும் வெற்றியை தேடித்தந்தன. தற்போதைய நவீன யுகத்திலும் சாணக்கியரின் கருத்துக்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. அதனால்தான் சாணக்கிய நீதியும், சாணக்கியன் தந்திரமும் இன்றும் பிரபலமானதாக இருக்கிறது.
வாழ்க்கையில் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கு சாணக்கியரிடம் பல நடைமுறை உத்திகள் உள்ளன. வாழ்க்கையில் அதிக செல்லத்தையும் மற்றும் ஸ்திரத்தன்மையை விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சாணக்கியரின் அறிவுரைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும்
வாழ்க்கையில் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கு சாணக்கியர் சொல்லும் முதல் விஷயம் எதிர்காலத்திற்காக சேமிப்பது. வருமானத்தில் பெரும் பகுதியை அத்தியாவசிய தேவைகளுக்காகவும் குறிப்பிட்டப் பகுதியை எதிர்கால இலக்குகளுக்காகவும் ஒதுக்கி வைக்க வேண்டும்.
கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்
கடன் ஒரு மனிதனின் மனஅமைதியையும், நிம்மதியையும் கெடுக்கும் விஷயமாகும். எனவே கடனில்லாமல் வாழ உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். கடன் வாங்கும் முன் ஒரு தெளிவான திருப்பிச் செலுத்தும் திட்டத்தை உருவாக்கி அதன்பின் கடன் வாங்கவும். உங்களால் திருப்பி செலுத்த முடியாது என்று தோண்றினால் ஒருபோதும் கடன் வாங்காதீர்கள்.
செலவில் கட்டுப்பாடு வேண்டும்
நிதி ஸ்திரத்தன்மையை அடைய செலவுகளில் கட்டுப்பாடு மிகவும் அவசியமானது. பட்ஜெட்டின் அடிப்படையில் பணத்தை செலவு செய்ய வேண்டும். உங்கள் எண்ணம் போல செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். செலவினங்களைத் துல்லியமாக மதிப்பிட்டு, கிடைக்கும் வருமானத்திற்குள் செலவுகள் செய்யப்படுவதையும், எதிர்காலத்திற்காகப் பணம் ஒதுக்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும்.
புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும்
ஒருவர் சரியான முதலீட்டின் மூலம் மட்டுமே நிதி வளர்ச்சியை அடைய முடியும். உங்கள் பணத்தை ஒரே இடத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது, எனவே பல இடங்களில் முதலீடு செய்யுங்கள். இது பண இழப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் முதலீடுகளைப் பற்றி ஆழமாக தெரிந்து கொள்ளவும். மற்றும் மிகவும் பொருத்தமான முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
தெரியாத விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்
நிதி ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை அடைவதற்கும் முன்னேற்றுவதற்கும் புத்திசாலித்தனமான நிதி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதற்காக நமக்குத் தெரியாததை நாம் கற்றுக்கொள்ள வேண்டும், குறிப்பாக முதலீடுகள் மற்றும் பண மேலாண்மை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications

