Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயம் வாழ்க்கையில் நுழைஞ்சா அவங்க வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் இருக்காது!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு பிரபலமான தத்துவஞானி மற்றும் அரசியல்வாதி. சாணக்கியரின் கொள்கைகள், வாழ்க்கையில் சரியான பாதையில் செல்ல மக்களைத் தூண்டுவதாகும். அவர் கூறிய ஆலோசனைகளைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ளலாம். சாணக்கியர் தனது கொள்கைகளில் ஒரு நபரின் வாழ்க்கையை அழிக்கும் சில பழக்கங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
சாணக்கிய நீதியின் படி இந்த நான்கு பழக்கங்கல் ஒருவரிடம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று கூறுகிறார். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் இந்த பழக்கங்களை விட்டுவிட்டால், அவர் அதிக இழப்புகளை சந்திக்க மாட்டார், இல்லையெனில் வாழ்வில் பல இன்பங்களை இழக்க நேரிடும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அதிகமான செலவு
ஆச்சார்ய சாணக்கியர் கூறுகையில், ஒருவர் தேவைக்கு அதிகமாகவோ அல்லது வருமானத்தை மீறியோ பணம் செலவழிக்கக்கூடாது. அதிகமாக செலவு செய்பவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிந்திக்காமல் பணத்தைச் செலவழிக்கும் பழக்கம் ஒருவருக்கு எப்போதும் பணத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். பணத்தட்டுப்பாடு ஏற்படும் பொது அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். பணம் இல்லாவிட்டால் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கும்.
பலவீனத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது
உங்கள் பலவீனத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்கிறார் சாணக்கியர். பதட்டம் அல்லது கவலையில் இருக்கும் ஒருவர் தனது பலவீனத்தை தனது நண்பர், உடன் படித்தவர்கள் அல்லது சக ஊழியரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் பலர் அந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், அதனால் எதிர்காலத்தில் நீங்கள் பல பிரச்சினைகளையும் மற்றும் மகிழ்ச்சியற்ற நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது
சாணக்கியரின் கூற்றுப்படி,தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிப்பவர் வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. அவர்கள் எப்பொழுதும் அதிகமாக ஆசைப்பட்டு அல்லது தன்னை குறை மதிப்பிற்கு உட்படுத்தி தன் வாழ்க்கையையே அழித்துக் கொள்கிறார்கள்.
சோம்பேறித்தனம்
சோம்பேறித்தனமே மனிதர்களின் மிகப்பெரிய எதிரி என்று கூறப்படுகிறார். ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார், சோம்பேறித்தனம் உள்ள ஒருவர் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெற மாட்டார். அத்தகைய நபர் எப்போதும் தனது வேலையை அடுத்த நாளைக்கு என்று ஒத்திவைப்பார். அதனால் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். அதனால் அவர் எப்போதும் சோகமாகவே இருப்பார்.
பேராசை
பேராசை என்பது மனிதர்களை மிருகமாக மாற்றும் ஒரு மோசமான குணமாகும். ஒருவரின் மனதிற்குள் பேராசை என்ற எண்ணம் வந்துவிட்டால் அவர்கள் தங்களை சுற்றியுள்ள அனைவரையுமே தனக்கு எதிரியாக பார்க்கத் தொடங்குவார், அதனால் அவர்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து நிம்மதியும், சந்தோஷமும் அவர்களை விட்டு விலகிவிடும்.



Click it and Unblock the Notifications
