Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்கள் உங்க வாழ்க்கையில் இருந்தால் நீங்கள் புண்ணிய ஆத்மாவாம்...!
சாணக்கியரின் இராஜதந்திரன் சாமானியராக இருந்த சந்திர குப்தரை, மௌரிய பேரரசின் சக்ரவர்த்தியாக மாற்றியது. சாணக்கியரின் கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருந்துபவை, ஏனெனில் இன்றும் சாணக்கியரின் அறிவுரைகள் பிரபலமானவையாகவும், பலரால் பின்பற்றப்படுவதாகவும் உள்ளது. இந்த கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் ஒரு நபர் தனது வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்ற முடியும்.
ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பது அவருடைய கர்மாதான். உண்மைதான் ஒருவர் வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவது அவருடைய செயல்களால்தான் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு மனிதனின் செயல்கள் அவரது வாழ்க்கை நிலையையும் திசையையும் தீர்மானிக்கிறது.

ஒரு மனிதன் தன்னுடைய நல்ல மற்றும் கெட்ட செயல்களின் பலனை நிகழ்காலத்தில் மட்டுமல்ல, அடுத்த ஜென்மத்திலும் அனுபவிப்பார்கள். சில விஷயங்களை வாழ்க்கையில் அடைந்தவர் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிகளாகவும், புண்ணிய ஆத்மாக்களாகவும் இருப்பார்கள். இந்த பதிவில் அது என்னென்ன விஷயங்கள் என்று பார்க்கலாம்.
நல்ல வாழ்க்கைத்துணை
அனைவருக்கும் வாழ்க்கையில் நல்ல வாழ்க்கை துணை கிடைத்து விடுவதில்லை. முற்பிறவியில் செய்த நற்செயல்களின் அடிப்படையில்தான் இந்த அதிர்ஷ்டம் கிடைக்கிறது. நல்லொழுக்கமுள்ள வாழ்க்கைத் துணையை வைத்திருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று அழைக்கப்படுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய வாழ்க்கைத்துணை முழு குடும்பத்தையும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பார்கள்.
மறுபுறம், உங்களுக்கு சண்டையிடும் வாழ்க்கைத்துணை அமைந்திருந்தால், வீடு இரவும் பகலும் குழப்பமாக இருக்கும். பெண்களை மதிப்பவர்கள், அவர்களின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் அவர்களுடன் இருப்பவர்கள், ஒவ்வொரு பிறவியிலும் புண்ணிய பலன்களைப் பெறுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பணவசதி
பணம் இல்லாத வாழ்க்கை நாம் நினைப்பதை விட மிகவும் கடினமானது. எனவே அனைவருக்கும் பணம் இருக்க வேண்டும். சிலரிடம் பணம் குறைவாகவும் சிலரிடம் அதிகமாகவும் உள்ளது. ஆனால், பணத்தைச் சரியாகப் பயன்படுத்தும் திறன் எல்லாருக்கும் இருப்பதில்லை. லட்சுமி தேவியை மதித்து பணத்தின் மதிப்பைப் புரிந்துகொள்பவர்கள் மட்டுமே பணத்தை சரியாகப் பயன்படுத்தி பலனைப் பெறுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பணத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரியாவிட்டால், வாழ்நாள் முழுவதும் பணத்தைப் பெறுவதற்கு கடுமையாக போராட வேண்டியிருக்கும். நீங்கள் செல்வந்தராக இருந்தால், நீங்கள் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். அத்தகையவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சாணக்கியர் நம்பினார்.
தாராள மனப்பான்மை
உண்மையான மனதுடன் கொடுப்பது ஏழைகளையும் பணக்காரர் ஆக்குகிறது. தொண்டு செய்பவர்கள் வாழ்க்கையில் எப்போதும் முன்னேறுவார்கள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.ஏனெனில் அனைவருக்கும் கொடுக்கும் தாராள மனப்பான்மை இருந்து விடுவதில்லை.
மற்றவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. தர்மம் செய்பவர் பிறர் வாழ்க்கையை அழகுபடுத்துவது மட்டுமின்றி, தன் குடும்பத்திற்கு புண்ணியத்தையும், செழிப்பையும் சேகரிக்கிறார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
இரண்டு வேளை உணவு
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவைப் பெறுபவர் தன்னை அதிர்ஷ்டசாலி என்று கருதலாம் என்று சாணக்கியர் நம்பினார். ஏனென்றால் நம்மைச் சுற்றி கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். ஒருவேளை உணவு கூட கிடைக்காதவர்கள் உலகில் ஏராளமானவர்கள். அந்தச் சூழலில், ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவைத் தவறாமல் சாப்பிடும் ஒருவர் தன்னை அதிர்ஷ்டசாலி என்று கருத வேண்டும்.
உணவை சரியாக ஜீரணிக்கும் ஆற்றல் பெற்றவர்களை மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று அழைக்கலாம் என்று சாணக்கியர் கூறுகிறார். எவ்வளவு நல்ல உணவை சாப்பிட்டாலும், அதனை ஜீரணிக்க முடியாமல் போனால், உடல் வீணாகி, நோய்கள் அவர்களை சூழ்ந்து விடும்.



Click it and Unblock the Notifications
