Latest Updates
-
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க..
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்கள் உங்க திருமண வாழ்க்கையில் விஷத்தை கலக்குமாம்...!
ஆச்சார்யா சாணக்கியர் சிறந்த ஆசிரியர், சிறந்த அரசியல்வாதி, இராஜதந்திரி மற்றும் பொருளாதார நிபுணர் என பல துறைகளில் நிபுணராக விளங்கினார். அவரது திறமையான இராஜதந்திரத்தால், அவர் சந்திரகுப்த மௌரியரை மகதப் பேரரசின் பேரரசராக ஆக்கினார்.
தற்போதைய காலகட்டத்திலும், அவரது கொள்கை மக்களிடம் நிறைய செல்வாக்கு பெற்றதாக இருக்கிறது. அதனால்தான் இன்றும் சாணக்கிய நீதி மிகவும் பிரபலமான புத்தகமாக இருக்கிறது. அவரது கொள்கை உலகம் முழுவதும் பிரபலமானது. அவர் எழுதிய நீதி சாஸ்திரத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் சித்தரித்துள்ளார்.

நீதி சாஸ்திரத்தில் திருமண வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக மாற்றுவது என்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கணவன்-மனைவி இடையே ஒருபோதும் சில விஷயங்கள் குறுக்கிடக்கூடாது என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறியுள்ளார். ஒருவேளை இந்த விஷயங்கள் குறுக்கிட்டால் அவர்களின் திருமணம் விவகாரத்தில்தான் முடியும்.
சந்தேகம்
சந்தேகம் எந்த உறவையும் சிதைக்கக் கூடிய ஒன்றாகும். ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, கணவன்-மனைவி இடையே சந்தேக உணர்வு இருக்கக் கூடாது. ஏனென்றால் ஒருவருக்கொருவர் மீது தோன்றும் சந்தேக உணர்வு அவர்களின் உறவை பலவீனப்படுத்துகிறது. இதனால் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து செல்லும் காலம் விரைவில் வரும். பலமான உறவில் எபோதும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இருக்க வேண்டும்.
ஈகோ
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, கணவனும் மனைவியும் தங்களைப் பற்றி ஒருபோதும் தற்பெருமை கொள்ளக்கூடாது. ஏனெனில் ஆணவ உணர்வு அவர்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தும். எந்த உறவிலும் ஈகோ இல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். மேலும் கணவன்-மனைவி இடையே ஒருபோதும் எந்த ஈகோவும் இருக்கக்கூடாது.
பொய் சொல்லக்கூடாது
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, கணவன்-மனைவி இடையே பொய் என்ற வார்த்தைக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. ஏனெனில் கணவன்-மனைவி இடையே பொய் சொல்வது என்பது அவர்கள் உறவை வெறுமையாக்குவதாகும். கணவன்-மனைவி இடையே உறவு உண்மையானதாக இருக்க வேண்டும், பொய்யான உறவாக இருக்கக்கூடாது.
அவமரியாதை
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. எப்போதும் ஒருவரையொருவர் மதிக்கவும். மேலும் இருவரும் எப்போதும் தங்கள் வரம்புக்குள் இருக்க வேண்டும், எல்லை மீறும்போது அந்த உறவு சிதையத் தொடங்கும்.



Click it and Unblock the Notifications
