Latest Updates
-
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க.. -
சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருக்கும் குழந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்... உங்க குழந்தைகிட்ட இருக்கா?
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். சிறந்த சமுதாயத்தை உருவாக்க சாணக்கியர் பல கொள்கைகளைக் கூறியுள்ளார். அவற்றை பின்பற்றுவது ஒருவரின் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். அவரது சாணக்கிய நீதியில் உள்ள கொள்கைகள் எந்த காலத்திற்கும் பொருந்தக்கூடியவை. மனித வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களைச் சாணக்கிய நீதி கூறுகிறது.

சமூகத்தில் உள்ள அனைவரும் பரஸ்பர உறவில் வாழ்கிறார்கள். இது ஒரு நல்ல வாழ்க்கை முறையை உருவாக்குகிறது, அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். சாணக்கிய நீதியில் குழந்தைகளைப் பற்றியும் சில விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. அவர்களிடம் இருக்கும் சில குணங்கள் குடும்பத்தை பெருமையடையச் செய்யும் என்கிறார் சாணக்கியர். சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ள அந்த சில விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒழுக்கமுள்ள குழந்தைகள்
சாணக்கிய நீதியின் படி, உங்கள் குழந்தைகளிடம் சில நல்ல குணங்கள் இருந்தால், உங்கள் குடும்பம் சொர்க்கமாக இருக்கும். அதே சமயம் குழந்தைகளிடம் கெட்ட குணங்கள் இருந்தால் வீட்டின் நிம்மதி பறிப்போய் வீடே நரகமாகிவிடும். அனைத்து பெற்றோருக்கும் தங்கள் மகன் திறமைசாலி என்பது பெருமைக்குரிய விஷயம். ஏனெனில் இதுவே அவர்களின் வாழ்வில் மிகப்பெரிய செல்வமும் மகிழ்ச்சியும் ஆகும்.
அத்தகைய சூழ்நிலையில், பெற்றோரும் நல்லொழுக்கமுள்ளவர்களாக இருப்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். இதுமட்டுமின்றி, குழந்தைகளின் நல்ல பண்புகளால் சமுதாயத்தில் பெற்றோரின் மரியாதையும் கூடுகிறது.
கீழ்ப்படிதல்
ஒரு கீழ்ப்படிதலுள்ள குழந்தை பெற்றோருக்கு மட்டுமல்ல, முழு குடும்பத்திற்கும் பெருமையை சேர்க்கும் என்கிறார் சாணக்கியர். அத்தகைய குழந்தை பெற்றோர் மற்றும் முழு குடும்பத்தின் மகிமையை அதிகரிக்கிறது. கீழ்ப்படிதலுள்ள மற்றும் பண்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
மற்றவர்களை மதிக்கும் குழந்தைகள்
பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்களை எப்போதும் மதிக்கும் குழந்தைகள், நல்லது கெட்டது என்ற வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு எப்போதும் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கிறார்கள் என்று சாணக்யா கூறுகிறார். அத்தகையவர்கள் உயரங்களை வென்று சமூகத்தில் பெரும் மதிப்பைப் பெறுகிறார்கள்.
அறிவை அடையும் குழந்தைகள்
ஒரு மனிதருக்கு நல்ல ஆளுமையை உருவாக்க கல்வி உதவுகிறது. அறிவைப் பெறுவதில் எப்போதும் சிறந்து விளங்கும் குழந்தைகள் குடும்பத்தின் மாண்பை நிலைநாட்டுவார்கள். அத்தகைய குழந்தைக்கு ஞானத்தின் தெய்வமான சரஸ்வதி மற்றும் செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மியின் அருள் எப்போதும் இருக்கும்.
அவர்கள் தங்களுடைய கல்வியின் அடிப்படையில் தங்கள் குடும்பம் மற்றும் பெற்றோரின் ;பெயரை நிலைநிறுத்துகிறார்கள். கல்வி கற்று வாழ்க்கையில் நல்ல நிலையை அடையும் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள்.
பெரியவர்களின் ஆலோசனைகளை மதிப்பவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, பெற்றோர் சொல்வதைக் கேட்கும் ஒரு மகன் நல்லொழுக்கமுள்ளவராக வளர்கிறார். எந்த ஒரு வேலையைச் செய்வதற்கு முன்பும் பெரியவர்களின் ஆலோசனையையும் ஆசிர்வாதத்தையும் பெறும் குழந்தைகள் நல்லொழுக்கமுள்ளவராக மதிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் தோல்வியடைய மாட்டார்கள்.
பிள்ளைகள் பெற்றோரின் மதிப்புகளை மறக்காமல் இருந்தால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். அதுமட்டுமின்றி, வீட்டில் பணத் தட்டுப்பாடு இருக்காது. அத்தகைய குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications
