Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்களை அவமதிப்பது நீங்க உங்க வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய பாவமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பற்றி ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தவர். சாணக்கியரின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் எதையும் சாதிக்க முடியும். சாணக்கிய நீதி என்பது தன்னுடைய பல்வேறு அனுபவங்களிலிருந்து சாணக்கியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பாகும்.
சாணக்கியர் கூறும் இந்த அறிவுரைகளை கடைபிடித்தால் நிச்சயமாக உங்கள் வாழ்வில் உள்ள கஷ்டங்களை சமாளித்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம். சாணக்கியர், தனது நீதி சாஸ்திரத்தின் ஏழாவது அத்தியாயத்தின் ஆறாவது ஸ்லோகத்தில், ஒருபோதும் அவமதிக்கப்படக் கூடாத ஏழு நபர்களைப் பற்றி பேசுகிறார். அவர்களை அவமதிப்பதன் மூலம் நீங்கள் கடுமையான பாவத்திற்கு ஆளாகிறார்கள் மற்றும் இதனால் உங்கள் வாழ்க்கை துன்பத்தில் மூழ்கும்.

நெருப்பு
உலகம் முழுக்க பல கலாச்சாரங்களில் நெருப்பு கடவுளாக மதிக்கப்படுகிறது. இந்து மதத்தில் எந்த ஒரு சுப காரியமும் நெருப்பில்லாமல் தொடங்குவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், நெருப்பை மிதிப்பது அல்லது நெருப்பைத் தாண்டுவது தவறானதாகும். இது கடவுளுக்கு அவமானமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட தவறைச் செய்வதால், ஒருவர் மோசமான பாவத்திற்கு ஆளாகிறார்.
குரு
நம் வாழ்க்கையை உருவாக்குவதில் குரு மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறார். அவர் நம் வாழ்க்கையை சரியான பாதையில் வழிநடத்துகிறார். ஒரு ஆசிரியர் உங்கள் எதிர்காலத்தை உருவாக்குகிறார். அத்தகைய ஆசிரியரை நீங்கள் ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. அவர்களை மதித்து ஆசிகளைப் பெறுங்கள். குருவை மதிக்காதவர்கள் வாழ்வில் எந்த நன்மையையும் அடைய மாட்டார்கள் என்கிறார் சாணக்கியர்.
கன்னிப்பெண்
கன்னிப் பெண்கள் தெய்வமாகக் கருதப்படுகிறார்கள். பெண்களை ஒருபோதும் அவமதிக்காதீர்கள். அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். இதைச் செய்பவர்கள் மோசமான பாவத்திற்கு ஆளாகிறார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். கன்னி பெண்கள் மட்டுமின்றி பொதுவாக அனைத்துப் பெண்களையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
முதியவர்கள்
முதியவர்கள் தான் ஒரு வீட்டிற்கு அஸ்திவாரம் போன்றவர்கள். அவர்களை ஒருபோதும் அவமதிக்காதீர்கள். இன்று நாம் எப்படி இருக்கிறோம் என்பது வீட்டில் உள்ள பெரியவர்களின் தியாகத்தாலும், முயற்சியாலும்தான் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் வீட்டிலுள்ள பெரியவர்களை எப்போதும் மதிக்கவும். பெரியவர்களின் ஆசிர்வாதம் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் எந்த பெரிய பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். பெரியவர்களின் ஆசியால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பசு
இந்து மதத்தில் பசுவை கோமாதவா என்பார்கள். முப்பத்து முக்கோடி கடவுள்களின் இருப்பிடமாக பசு கருதப்படுகிறது. பசுவை அடிப்பது அல்லது துன்புறுத்துவது பாவமாக கருதப்படுகிறது. பசுவை மதித்து அதனை நன்றாக கவனித்துக் கொண்டால், உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறலாம்.
குழந்தை
குழந்தைகள் மிகவும் அப்பாவிகள். ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் உருவம் என்று கூறப்படுகிறது. அவர்களின் மனம் கடவுளைப் போல அமைதியானது மற்றும் தூய்மையானது. அவர்கள் எதைச் சொன்னாலும் அல்லது செய்தாலும், அவர்கள் யாருக்கும் தீங்கு செய்ய நினைக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட குழந்தையைக் கடவுளாகக் கருதி அன்பு செலுத்த வேண்டும் மாறாக துன்புறுத்தக்கூடாது.



Click it and Unblock the Notifications


