Latest Updates
-
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 5 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
10 கிராம் 1 கோடிக்கு விற்கப்படும் உலகின் விலையுயர்ந்த மரம் எது தெரியுமா? இதுல அப்படி என்னதான் இருக்கு? -
இட்லி, தோசைக்கு இப்படி வெங்காய சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறாக இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா?
சாணக்கிய நீதி படி கணவர் இந்த 5 விஷயங்களை தூக்கத்தில் கூட மனைவியிடம் சொல்லிரக்கூடாதாம்..இல்லனா மாட்டிக்குவீங்க!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞரும் நல்ல ஆசிரியரும் ஆவார். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் பணம், உடல்நலம், வணிகம், திருமண வாழ்க்கை, சமூகம் மற்றும் வாழ்க்கையில் வெற்றி தொடர்பான அனைத்து விஷயங்களைப் பற்றியும் பயனுள்ள அறிவுரைகளைக் கூறியுள்ளார்.
ஒருவர் தனது வாழ்க்கையில் சாணக்கியரின் வார்த்தைகளைப் பின்பற்றினால், அவர் வாழ்க்கையில் ஒருபோதும் தவறு செய்ய மாட்டார், மேலும் அவர் வெற்றிகரமான நிலையை அடைய முடியும்.

சாணக்கிய நீதி ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவையும் அவர்களின் குணங்களையும் குறிப்பிடுகிறது. கணவனும் மனைவியும் ஒருவர் வாழ்க்கையை ஒருவர் பூர்த்தி செய்வதாகக் கூறப்படுகிறது. வாழ்க்கையில் சில விஷயங்களை இருவரும் யாரிடமும் சொல்லக் கூடாது.
ஆண்களுக்கு சில விஷயங்களை தங்கள் மனைவியிடம் இருந்து மறைக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். இல்லையெனில் எதிர்காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சாணக்கிய நீதியின் படி கணவன் தன் மனைவியிடம் சொல்லக்கூடாத சில விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வருமானம்
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கணவன் தன் மனைவிக்கு தனது உண்மையான சம்பாத்தியத்தைப் பற்றி ஒருபோதும் கூறக்கூடாது என்று கூறுகிறார். பெண்கள் தங்கள் கணவரின் சேமிப்பைப் பற்றி அறிந்தால், அவர்கள் கணவரின் செலவுகளை தடுக்கத் தொடங்குவார்கள் என்று சாணக்யா நம்பினார். பெரும்பாலும் இது கணவன்மார்களுக்கு தேவையான செலவுகளைக் கூட செய்ய விடாமல் தடுக்கிறது.
பலவீனங்கள்
மனிதர்கள் அனைவருக்குமே பலவீனம் இருப்பது இயற்கைதான். ஆனால் அதனை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. குறிப்பாக ஒரு ஆண் தனது பலவீனங்களை எப்போதும் தனது மனைவியிடம் கூறக்கூடாது. என்று சாணக்கியர் கூறுகிறார்.
கணவனின் ஏதேனும் பலவீனம் மனைவிக்குத் தெரிந்தால், அதைத் திரும்பத் திரும்பக் கூறி, தங்கள் விருப்பங்களையெல்லாம் வலுக்கட்டாயமாக நிறைவேற்றிக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது சாணக்கியர் நம்பினார். எனவே கணவர்கள் தங்கள் பலவீனங்களை மனைவியிடமிருந்து எப்போதும் மறைக்க வேண்டும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
வாழ்க்கையின் அவமானங்கள்
வாழ்க்கையில் யாராவது உங்களை எப்போதாவது அவமதித்திருந்தால், தூக்கத்தில் கூட உங்கள் மனைவியிடம் சொல்லாதீர்கள் என்பதை ஆண்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். கணவரிடம் சண்டையோ அல்லது வேறெதும் வாக்குவாதத்தின் போது அந்த அவமானத்தை நினைவுபடுத்தி உங்களை துன்புறுத்துவார்கள்.
தர்ம செயல்கள்
உங்கள் மனைவியுடன் உங்கள் தர்ம காரியங்களைப் பற்றி விவாதிக்கவே கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். நீங்கள் அதை அவர்களிடம் பகிர்ந்து கொண்டால், நீங்கள் எவ்வளவு நன்கொடை அளித்தீர்கள், யாருக்கு அளித்தீர்கள் என்று கேள்வி கேட்டு துளைப்பார்கள்.
நீங்கள் யாருக்காவது பணம் செலவழித்திருந்தால், இந்த தகவலை மனைவியிடம் இருந்து மறைத்து வைக்கவும். மனைவியிடம் சொன்னால் தர்மம் பயனற்றதாகிவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக, நன்கொடை அளிப்பது நல்லதல்ல என்று நினைக்கலாம்.
உங்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தக் கூடாது
உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் கடுமையான குழப்பத்தில் நீங்கள் சிக்கியிருந்தால், அதை உங்கள் மனைவியிடம் தெரிவிக்கக்கூடாது. உங்கள் திறமையின்மை உங்கள் மனைவியின் பார்வையில் கேலிக்குரிய பொருளாக மாறலாம். நீங்கள் ஏதேனும் பிரச்சனையில் இருந்தால், உங்கள் மனைவியிடம் தீர்வு காண வேண்டாம்.
நீங்களே உங்கள் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யுங்கள் அல்லது எதுவும் நடக்காதது போல் நடந்து கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகளை உங்களால் தீர்த்து வைக்க முடியாததால், நீங்கள் புத்திசாலி இல்லை என்று அவர் நினைக்கலாம்.



Click it and Unblock the Notifications
