Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி குழந்தைகள் இந்த 4 நல்ல குணங்களை கருவில் இருக்கும்போதே கத்துக்குவாங்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் இந்திய வரலாற்றின் ஒரு சிறந்த ஆசிரியர், தத்துவஞானி, பொருளாதார நிபுணர் மற்றும் அரச ஆலோசகர் ஆவார். அவர் இந்தியாவின் சிறந்த அரசியல் நூலான அர்த்தசாஸ்திரத்தை எழுதியுள்ளார். அவர் கௌடில்யர் என்றும் விஷ்ணுகுப்தர் என்றும் அழைக்கப்படுகிறார். முதல் மௌரியப் பேரரசரான சந்திரகுப்த மௌரியரை ஆட்சியில் அமர வைத்தது சாணக்கியரின் இராஜதந்திரங்கள்தான்.
ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சம்பவங்களைப் பற்றியும் சாணக்கியர் விளக்கியுள்ளார். அதனால்தான் சாணக்கியர் இன்றும் புகழ்பெற்றவராக திகழ்கிறார். சாணக்கியரின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் எதையும் சாதிக்க முடியும் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம். சாணக்கிய நீதி என்பது சாணக்கியர் தனது வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து தொகுத்த நீதி நூலாகும்.

சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள் இன்றும் பொருத்தமானவை. தங்கள் வாழ்க்கையில் சாணக்கியரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர் எளிதில் வெற்றியை அடைகிறார். சாணக்கியரின் கூற்றுப்படி, கருவில் இருக்கும் போதே குழந்தை கற்றுக் கொள்ளும் நான்கு குணங்கள் உள்ளன. இந்த குணங்களைக் கொண்ட குழந்தைகள் எதிர்காலத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். அவை என்னென்ன குணSங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தானம் செய்வது
தாயின் கருவில் இருக்கும்போதே குழந்தைகள் தானம் செய்யும் பழக்கத்தைக் கற்றுக்கொள்கிறார்கள் என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறியுள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி, எந்த ஒரு மனிதனும் பூமியில் பிறந்த பிறகு தானம் செய்யும் பழக்கத்தை அவர்களே விரும்பினாலும் கற்றுக்கொள்ள முடியாது. பெற்றோருக்கு மற்றவர்களுக்கு தானம் செய்யும் மனப்பான்மை இருந்தால், குழந்தைகளும் அதை பின்பற்றுவார்கள். அவர்கள் வளரும்போது இந்த பழக்கம் அவர்களுக்குள் அதிகரிக்கும்.
மென்மையாக பேசும் குணம்
சாணக்கியரின் கூற்றுப்படி, குழந்தைகள் பெற்றோரின் குணநலன்களை அவர்களின் மரபணுக்களிலிருந்து பெறுகிறார்கள். பெற்றோர்கள் நல்லவர்களாகவும், இனிமையாகப் பேசுபவர்களாகவும் இருந்தால் அந்த குணம் தானாகவே குழந்தைகளுக்கு வந்து சேரும். குழந்தைகள் இந்த குணத்தை தாயின் வயிற்றில் இருந்தே கற்றுக்கொள்கிறார்கள். வாழ்க்கையில் சில விஷயங்களை சாதிக்க மென்மையாக பேசுவது மிகவும் முக்கியமான குணமாகும்.
பொறுமை
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, ஒருவர் தனது தாயின் வயிற்றில் இருக்கும் போதே பொறுமை மற்றும் விடாமுயற்சியைக் கற்றுக்கொள்கிறார். குழந்தை பருவத்திலிருந்தே பொறுமையாக இருக்கும் குழந்தை வாழ்க்கையில் வெற்றிகரமான நபராக மாறுகிறார்கள். அத்தகையவர்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து விடுவார்கள். இந்த குணத்தை குழந்தைகள் விரும்பினாலும் வளர்ந்த பிறகு கற்றுக்கொள்ள முடியாது.
நீதி உணர்வு
சாணக்கிய நீதி படி, ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போதே சரி எது மற்றும் தவறு எது என்று பகுத்தறியும் குணத்தை கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோரின் நல்ல மற்றும் கெட்ட குணங்கள் இரண்டுமே குழந்தைளுக்கும் வருகின்றன. அதனால்தான் எந்தவொரு மனிதனும் பிறந்த பிறகு இந்த நல்ல குணங்களை அவர்கள் விரும்பினாலும் கற்றுக்கொள்ள முடிவதில்லை.



Click it and Unblock the Notifications
