Latest Updates
-
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை
எந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சி அமைக்கப் போகுது? அசர வைக்கும் ஜோதிட கணிப்புகள்!
Assembly Elections Result 2023: இன்று இந்தியாவில் 4 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பான ஜோதிட கணிப்புகளின் படி, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் புதிய சட்டசபைகளை அமைப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று தெரிந்துவிடும். இதில் எந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது என்பது தெளிவாகிவிடும்.

இந்நிலையில் பல ஜோதிடர்கள் எந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்று கணித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்த கணிப்புக்களை காணும் போது, பலருக்கும் இப்படி நடக்க வாய்ப்பிருப்பதாகத் தான் தோன்றுகிறது.
ஜோதிடத்தின் படி, இந்தியாவின் வடக்கு பகுதியில் சனியின் தாக்கம் அதிகமாகவும், தெற்கு பகுதியில் சனியின் தாக்கம் குறைவாகவும் உள்ளது. இப்போது கிரகங்களின் நிலைகளைக் கொண்டு எந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்பதைக் காண்போம்.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசம் இந்தியாவில் மிகவும் பிரபலமான மாநிலமாகும். மேலும் வரலாற்று பக்கங்களில் புகழ்பெற்ற மாநிலமும் கூட. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் புகழ்பெற்ற சிவபெருமான் உள்ளார். மேலும் இந்த மாநிலத்தில் நர்மதா, சம்பல் மற்றும் பெட்வா போன்ற நதிகள் உள்ளன. ஜோதிட கணிப்புகளின் படி, மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாவீரர்களின் பூமி. இது சிந்து சமவெளி நாகரிகத்தின் தளமாகும். இந்த மாநிலத்தில் வரலாற்றில் இடம் பெற்ற மாபெரும் மாவீரர்கள் பிறந்தனர். இந்த மாநிலத்தில் சனி பகவான் மற்றும் கேதுவின் நிலையாலும், தசமியில் சந்திரன் மற்றும் ராகுவும் இணைந்து கிரகண யோகத்தை உருவாக்குவதால், தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரசு வெளியேறுவது உறுதி. எனவே இந்த முறை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமானால் மற்ற கட்சிகளின் உதவியும் வேண்டும். எப்படி இருந்தாலும், பாஜக மட்டுமே இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்கும்.
சத்தீஸ்கர்
பழங்காலத்தில் சத்தீஸ்கர் தட்சிண கௌஷல் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் 30 கோட்டைகள் இருந்ததால், இது சத்தீஸ்கர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் சத்தீஸ் என்றால் 30, கர் என்றால் கோட்டை என்று பொருள். தற்போதைய இந்தியாவில் இந்த மாநிலம் 26 ஆவது மாநிலமாக 2000 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த பகுதியில் சனி பகவானின் கருணை குறைவு என்பதால், இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது என்பது கடினம். எனவே இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.
தெலுங்கானா
இந்தியாவின் 29 ஆவது மாநிலம் தான் தெலுங்கானா. இதில் தெலுங்கானா என்றால் தெலுங்கு பேசும் பகுதி என்று பொருள். ஜோதிடத்தின் படி, தெலுங்கானாவில் சனி பகவானின் கருணை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் இந்த தேர்தலில் தெலுங்கானாவில் பாஜக-வை விட காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி அமைக்க நிறைய வாய்ப்புள்ளது.
எதுவாயினும், இன்னும் சில மணிநேரங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிடும். எந்த மாநிலத்தில் யார் ஜெயிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். உங்களுக்கு எந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்று தோன்றுகிறது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications