Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நாளை ஆடி முதல் வெள்ளிக்கிழமை.. செல்வம் பெருக கட்டாயம் இந்த பொருட்களை வாங்குங்கள்..!
ஆடி வெள்ளிக்கிழமை அன்று அம்மனை வழிபட்டால் நம் வீட்டில் உள்ள தீமைகள் விலகி நன்மைகள் நடக்கும்... அத்துடன் உடலில் ஆரோக்கியம், செல்வம், ஞானம் ஆகியவை நம்மை வந்துச் சேரும்.
இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தை பாக்கியம் பெறுவதற்கு இருக்கும் தடைகள் அனைத்தும் விலகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆடி மாதம் இந்த வருடம் (2024) நேற்று ஜீலை 17ஆம் தேதி துவங்கியது. ஆடி மாதம் என்றாலே வீட்டிலும் சரி ஆலயங்களிலும் சரி பெரிய அளவில் வழிபாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். அதுவும் ஆடி முதல் வெள்ளி என்றால் இன்னும் விஷேசம்தான்.. இது மிகவும் அப்படியான இந்த விசேஷமான நாளில் இரண்டு முக்கியமான பொருட்களை உங்கள் வீட்டில் புதிதாக வாங்கி வையுங்கள்.. அப்படி வாங்கினால் செல்வமும் ஐஸ்வரியமும் மேன் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
ஆடி மாதம் வரும் முதல் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு மிகவும் உரித்தான ஒரு நாள். அந்த நாளில் அந்த தெய்வத்திற்கு உகந்த ஒரு பொருளை நீங்கள் வீட்டில் வாங்கி வைத்தால் உங்கள் வீட்டில் ஐஸ்வரியம் பொங்கும், வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்..
இந்த ஆண்டு ஆடி மாதத்தில் நான்கு வெள்ளிக்கிழமைகள் வருகிறது. அதில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையானது ஜூலை 19ஆம் தேதியான நாளை வருகிறது. இந்த நாளில் ராகு கால வேளையான காலை 10.30 மணி முதல் 12 மணி வரை வழிபாட்டினை மேற்கொள்ளலாம். அலுவலகம் செல்பவராக இருந்தால் காலையிலோ அல்லது மாலை 7 மணிக்கு பிறகோ இந்த வழிபாட்டினை செய்யலாம். வீட்டில் காளி படம் அல்லது ஏதாவது ஒரு அம்பிகையின் படத்தையோ வைத்து பூஜை செய்யலாம்..
அப்படி பூஜை செய்வதற்கு முன் இந்த 2 பொருட்களை கண்டிப்பாக வாங்கி வைத்து பூஜையை தொடங்குங்கள்.. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணு பகவானுக்கு அருகில் உள்ளவர்தான் மகாலட்சுமி, அவருக்கு உப்பு மிகவும் பிடிக்கும் என்று கூறுவார்கள். உப்பு மகாலட்சுமியின் அம்சமாகும்.. அதனால் நாளை ஆடி முதல் வெள்ளி அன்று உங்கள் வீட்டில் சிறிது உப்பை வாங்கி வைக்க பல ஐஸ்வரியங்கள் ஒன்றாக கூடும். அந்த மகாலட்சுமியே உங்கள் வீட்டிற்கு வந்ததாக அர்த்தம்..
அதேபோல குங்குமம் அல்லது மஞ்சளை நாளை உங்கள் வீட்டில் புதிதாக வாங்கி வைக்கலாம். கண்டிப்பாக இவை இரண்டையும் நாளை வாங்கி வைத்து சாமி கும்பிட்டால் உங்க வீட்டில் மகாலட்சுமி குடிக்கொள்வாள்.. அதனால் பிரச்சனைகள் அனைத்தும் விலகுமாம்..
இதே போல் அம்மனுக்கு பிடித்த பொருட்களில் ஒன்றான வேப்பிலையால் அம்மனுக்கு மாலை கட்டி போடலாம். வேப்பிலை மட்டும் விரளி மஞ்சள் கிழங்குகளை சேர்த்து கட்டி அம்மன் கோவிலுக்கு சென்று மாலையாக அணிவிக்கலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள அம்மனின் படத்திற்கு இதை அணிவிக்கலாம். இதனால் அம்மனின் மனம் குளிர்ந்து, நினைத்த காரியங்களை நடத்தி வைப்பாள்.



Click it and Unblock the Notifications