Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
வீட்டுல இருக்கும் வெங்காயம் முளைச்சிடுச்சா? அத சமைக்க யூஸ் பண்ண போறீங்களா? அப்ப இத தெரிஞ்சிக்கோங்க!
Sprouted Onions In Tamil: முளைத்த வெங்காயத்தை சாப்பிடலாமா? அதை சமையலில் பயன்படுத்துவது நல்லதா? என்று யோசிக்கிறீர்களா? நம் அன்றாட சமையலில் வெங்காயத்தை பயன்படுத்துகிறோம். நம் சமையலறையில் எப்போதும் இருக்கும் முக்கியமான பொருட்களில் வெங்காயமும் ஒன்று.
வெங்காயத்தை நாம் தினமும் சமையலில் பயன்படுத்துவதால், கிலோ கணக்கில் அதிகமாக வாங்கி, அதை வீட்டில் வைத்திருப்போம். வாரத்திற்கு ஒரு முறை அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை என மட்டுமே நாம் வெங்கயத்தை வாங்குவோம். வீட்டில் வாங்கி சேமித்து வைத்திருக்கும் வெங்காயம் சில நேரங்களில் முளைத்திருக்கலாம் அல்லது அழுகிப்போகலாம்.

வெங்காயம் நீண்ட காலம் நீடிக்கக்கூடியது. முளைத்த காய்கறிகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்ற ஒரு பொதுவான கட்டுக்கதை உள்ளது. இது வளரும் முளைகளுடன் வெங்காயத்தை உட்கொள்வதைப் பற்றிய கவலையை எழுப்புகிறது மற்றும் அவற்றை உட்கொள்வது உண்மையில் பாதுகாப்பானதா என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
முளைத்த வெங்காயம் பாதுகாப்பானதா?
சுவாரஸ்யமாக, முளைத்த வெங்காயத்தின் சுவை மற்றும் அமைப்பில் ஏற்படும் மாற்றம் வழக்கமான வெங்காயத்தை விட வித்தியாசமான சுவையை உங்களுக்கு தரலாம். பெரும்பலான மக்கள் முளைத்த வெங்காயத்தை சாப்பிட யோசிக்கிறார்கள். ஆனால், அவற்றை சாப்பிடுவதால் எந்தத் தீங்கும் ஏற்படாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் முளைத்த வெங்காயம் மற்றும் காய்கறிகள் சில சந்தர்ப்பங்களில் வேகமாக அழுகிவிடும். முளைகளுடன் இருக்கும் வெங்காயத்தைப் பற்றி பல விஷயங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
வெங்காயத்தின் அமைப்பு மற்றும் சுவை
ஒரு வெங்காயம் முளைக்கும் போது, வெங்காய குமிழியின் அமைப்பு மென்மையாக மாறும். மேலும் சுவை சற்று மென்மையாக இருக்கும். சிலருக்கு உணவுகளில் அமைப்பு மற்றும் சுவை குறைவாக இருக்கலாம். ஆனால், முளைத்த வெங்காயத்தை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த வெங்காயத்தை சமையலில் பயன்படுத்துவதில் தீங்கு அல்லது எந்த ஆபத்துகளும் இல்லை. இருப்பினும், முளைப்பதன் மூலம் வெங்காயம் அதிக கசப்பான சுவையுடன் இருக்கும், சிலர் அதை விரும்பாமல் இருக்கலாம்.
பூச்சி உருவாதல் அல்லது கெட்டுப்போதல்
முளைத்த வெங்காயத்தை நீண்ட நாட்கள் அப்படியே வைத்திருக்கக் கூடாது. நீண்ட நாட்கள் சமைக்காமல் அப்படியே ஒதுக்கி வைத்திருந்தால், முளைகளில் பூச்சி மற்றும் புழுக்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது துர்நாற்றத்தை தூண்டி வெங்காயத்தை விரைவில் கெட்டுப்போகச் செய்யும். அதனால், நீங்கள் சந்தையில் வாங்கி வந்த வெங்காயத்தில் முளைப்புகள் காணப்பட்டால், முதலில் அவற்றை சமைப்பது நல்லது.
கசப்பு தன்மை
முளைத்த வெங்காயம் முளைகளின் வளர்ச்சியின் காரணமாக சிறிது கசப்பான சுவையை கொண்டிருக்கலாம். இதை உங்கள் சமையலில் பயன்படுத்தும்போது, உணவின் சுவையும் சிறிது கசப்பாக மாறலாம். மேலும், இந்த கசப்பு தன்மை உங்கள் உணவுகளின் சுவையை பாதிக்கக்கூடும்.
சமையல்
நீங்கள் இன்னும் உங்கள் சுவையான உணவுகளில் முளைத்த வெங்காயத்தைப் பயன்படுத்த விரும்பினால், வெங்காயத்தின் அமைப்பும் சுவையும் உணவின் சுவையை பாதிக்காத உணவுகளில் பயன்படுத்தவும். முளைத்த வெங்காயத்தில் சமைப்பது உங்கள் உணவின் சுவையை சற்று குறைக்கலாம் அல்லது மாற்றலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
முளைத்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?
முளைத்த வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்த உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், அதை உங்கள் வீட்டில் வளர்க்கலாம். வெங்காயம் மிகவும் நீடித்தது.
நீங்கள் வெங்காயத்தின் பாதி அடுக்குகளை அகற்றிய பிறகு மண்ணில் நட்டு வைத்தாலும், அவை சிக்கல் இல்லாமல் வளரும். வெங்கயத்தோலை நீக்கியவுடன், முளைத்த வெங்காயத்தை நேரடியாக தோட்டத்தில் நடலாம் அல்லது வீட்டிற்குள் பானையில் மண்ணை நிரப்பியும் நீங்கள் வைக்கலாம்.



Click it and Unblock the Notifications
