Latest Updates
-
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும்
வீட்டில் செல்வம் அதிகம் சேரணுமா? அப்ப சங்குப்பூ கொடியை வீட்டின் இந்த திசையில் வையுங்க..
Vastu Tips In Tamil: ஒருவரது வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளுமே அந்த வீட்டில் நேர்மறை அல்லது எதிர்மறை ஆற்றலை உருவாக்கும். எனவே ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருக்க வேண்டுமானால், வாஸ்து விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
தற்போது நிறைய பேருக்கு செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. பலர் தங்கள் வீடுகளை செடிகளை அலங்கரிக்க விரும்புவார்கள். ஆனால் வீட்டில் செடிகளை வைப்பதாக இருந்தாலும், வாஸ்துப்படி எந்த செடிகள், கொடிகள் மற்றும் மரங்களை வைக்க வேண்டும் என்பதை அறிந்த பின்னரே வைக்க வேண்டும்.

இதனால் அந்த வீட்டில் வாஸ்து குறைபாடுகள் ஏதுவும் ஏற்படாமல், அந்த வீடு செல்வ செழிப்போடு இருக்கும். அந்த வகையில் வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்கும் செடி என்றதுமே பலரது மனதில் மணி பிளாண்ட் தான் தோன்றியிருக்கும்.
ஆனால் மணி பிளாண்ட்டிற்கு அடுத்தப்படியாக வீட்டின் செல்வ நிலைமை அதிகரிக்கும் சக்தி சங்குப்பூவிற்கு உள்ளது. வாஸ்துப்படி, சங்குப்பூவில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட சங்குப்பூ கொடியை வீட்டில் சரியான திசை மற்றும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.
சங்குப்பூவில் லட்சுமி தேவி குடியிருப்பது மட்டுமின்றி, விஷ்ணு பகவான், சனி பகவான் மற்றும் சிவ பெருமானுக்கு விருப்பமான பூவும் கூட. இந்த கொடியை வீட்டில் வளர்த்து வந்தால், அந்த வீட்டில் மகிழ்ச்சி, அமைதி போன்றவை நிலைத்திருக்கும். இப்போது வாஸ்துப்படி, சங்குப்பூ கொடியை வீட்டின் எந்த இடத்தில் மற்றும் திசையில் வைக்க வேண்டும் என்பது குறித்துக் காண்போம்.
சங்குப்பூ கொடியை எந்த நாளில் வைத்து வளர்க்க வேண்டும்?
வாஸ்துப்படி, சங்குப்பூ கொடியை வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை நாட்களில் வீட்டில் வைப்பது நல்லது. ஏனெனில் வியாழக்கிழமையானது விஷ்ணுவிற்கு உகந்த நாள் மற்றும் வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்குரிய நாள். எனவே இந்த கிழமைகளில் சங்குப்பூ கொடியை வீட்டில் வளர்த்து வந்தால், விஷ்ணு பகவான் மற்றும் லட்சுமி தேவியின் அருளால் செல்வம் பெருகும்.
எந்த இடத்தில் வைத்து வளர்க்கலாம்?
பலருக்கும் சங்குப்பூ கொடியை வீட்டின் எந்த இடத்தில் வைத்து வளர்ப்பது நல்லது என்ற கேள்வி எழும். வாஸ்துப்படி, சங்குப்பூ கொடியை வீட்டின் பிரதான வாசல் கதவின் வலது பக்கத்தில் வைத்து வளர்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
எந்த திசையில் சங்குப்பூ கொடியை வைக்க வேண்டும்?
சங்குப்பூ கொடியை வீட்டில் வளர்க்க விரும்பினால், முதலில் அதை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை அறிந்து வைக்க வேண்டும். வாஸ்துப்படி, சங்குப்பூ கொடியை லட்சுமி தேவி, விநாயகர் மற்றும் குபேரர் குடியிருக்கும் திசையில் வைத்து வளர்ப்பதே மிகவும் நல்லது. அப்படிப்பட்ட திசைகள் கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசைகள் ஆகும். இந்த திசைகளில் சங்குப்பூ கொடியை வைத்து வளர்த்தால், வீட்டில் செல்வம் பெருகுவதோடு, மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
எந்த திசையில் சங்குப்பூ கொடியை வைக்கக்கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, சங்குப்பூ கெரிடியை வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசைகளில் வைத்து வளர்க்கக்கூடாது. அப்படி வளர்த்தால், அந்த வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் தடை ஏற்படுவதோடு, வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் பாதிக்கப்படும். எனவே இந்த தவறை செய்துவிடாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications