Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வீட்டில் மூங்கில் செடி வெச்சுருக்கீங்களா? இந்த இடத்துல வெக்காதீங்க.. இல்ல பணம் தண்ணி போல செலவாகும்..
Vastu Tips In Tamil: நிறைய பேர் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வீட்டிற்குள் செடிகளை வாங்கி வைத்து வளர்ப்பார்கள். வாஸ்துப்படி, வீட்டினுள் பச்சை நிற செடிகளை வளர்ப்பது நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும்.
வாஸ்துவில் அதிர்ஷ்டத்தை ஈர்க்க உதவும் பல்வேறு செடிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மூங்கில் செடி. இந்த மூங்கில் செடியை பலர் தங்கள் வீடுகளில் மட்டுமின்றி, அலுவலகத்திலும் வளர்த்து வருகிறார்கள்.

ஏனெனில் மூங்கில் செடியானது அதிர்ஷ்டத்தை ஈர்க்கிறது, பண பிரச்சனைகளை நீக்குகிறது. அதற்கு மூங்கில் செடியை வீட்டில் சரியான திசையில் வைத்து வளர்க்க வேண்டும்.
தவறான திசையில் மூங்கில் செடியை வைத்து வளர்த்து வந்தால், அது அந்த வீட்டின் நிதி நிலையை மோசமாக பாதிக்கும். இப்போது மூங்கில் செடியை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மூங்கில் செடி ஏன் மங்களகரமானதாக கருதப்படுகிறது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மூங்கில் செடி மிகவும் அதிர்ஷ்ட செடியாக கருதப்படுகிறது. மூங்கில் செடியானது நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவி புரிந்து, வீட்டின் வருமானத்தை அதிகரித்து, வீட்டிற்கு செல்வ செழிப்பை கொண்டு வருகிறது. இது தவிர, இந்த செடி மனம் மற்றும் ஆன்மாவிற்கு அமைதியைத் தரக்கூடிய செடியாகவும் கருதப்படுகிறது.
எத்தனை தண்டுகளை வைத்திருப்பது நல்லது?
வாஸ்துப்படி, மூங்கில் செடியை வீடு அல்லது அலுவலகதில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் மூங்கில் செடியில் உள்ள கிளைகளைப் பொறுத்து, அதன் பலன் உள்ளது. அதாவது 11 கிளைகளானது நல்ல தோற்றத்தை தரும், 2 கிளைகள் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு நல்லது, 3 கிளைகள மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும், 5 கிளைகள் ஆரோக்கியத்திற்கும், பூரண வாழ்க்கைக்கு 10 கிளைகளையும், லட்சுமி தேவியின் அருளைப் பெற 21 கிளைகளையும் நடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
மூங்கில் செடியை எந்த திசையில், எந்த இடத்தில் வைக்க வேண்டும்?
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, மூங்கில் செடியை வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைப்பதாக இருந்தால், அதை வைக்க சிறந்த திசை கிழக்கு தான். இந்த திசையில் மூங்கில் செடியை வைத்தால், அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்திருப்பதோடு, நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும்.
* மூங்கில் செடியை எப்போதும் ஜன்னலுக்கு அருகில் வைக்கக்கூடாது. அதுவும் சூரிய ஒளி படும் ஜன்னல் அருகே வைக்கவே கூடாது. சூரிய ஒளியால் மூங்கில் செடி காய்ந்து போனால், வீட்டில் உள்ள நிதி நிலையிலும் அதன் தாக்கம் தெரியும்.
* வாஸ்துப்படி, மூங்கில் செடியை 2 முதல் 3 அடி உயரத்தில் வளர்ப்பதே நல்லது. அதுவும் இந்த உயரத்தில் உள்ள மூங்கில் செடியை அலுவலகத்தில் வைத்து வளர்த்தால், அலுவலக சூழல் நன்றாக இருப்பதோடு, எதிர்மறை ஆற்றல் நெருங்காமல் இருக்கும்.
* வாஸ்துப்படி, மூங்கில் செடியை மேற்கு திசையில் வைத்து வளர்த்தால், வீட்டில் படிக்கும் குழந்தைகள் இருந்தால், அவர்களின் மனநிலை சிறப்பாக இருக்கும். அதுவும் அந்த மூங்கில் செடியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்தால், அவர்களை மனநிலை ஒருநிலையாக இருக்கும்.
* வாஸ்துப்படி, மூங்கில் செடியை வடக்கு திசையில் வைத்தால், அது தொழிலில் வளர்ச்சி காண வழிவகை செய்யும். அதுவும், அந்த மூங்கில் செடியில் நீல கல்லை வைப்பது இன்னும் சிறப்பான பலனைத் தரும்.
* வீட்டில் மூங்கில் செடியை வளர்க்கும் போது, அந்த வீட்டில் லட்சுமி தேவி எப்போதும் குடியிருப்பார். இதன் விளைவாக வீட்டில் செல்வம் அதிகமாக சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications