Latest Updates
-
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம்
வீட்டில் செல்வம் பெருகணுமா? அப்ப வாஸ்துப்படி எலுமிச்சையை வீட்டுல இந்த மாதிரி வையுங்க...
நிறைய பேருக்கு கண்ணாடி டம்ளரில் எலுமிச்சையைப் போட்டு வைப்பது குறித்து பல கேள்விகள் மனதில் இருக்கும். இக்கட்டுரையில் உங்களின் பல கேள்விகளுக்கான விடை கொடுக்கப்பட்டுள்ளது.
Vastu Tips: உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்படுகிறதா? நிறைய பணத் தட்டுப்பாடுகளை சந்திக்கிறீர்களா? எந்த விஷயத்தை செய்தாலும், அதில் தடை ஏற்படுகிறதா? வீட்டில் முன்னேற்றமே தெரியவில்லையா? அப்படியானால் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்துள்ளது என்று அர்த்தம். வாஸ்துப்படி, ஒருவரது வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும் போது, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இப்படி வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்குவதற்கு வாஸ்து சாஸ்திரத்தில் சில பரிகாரங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஒரு கண்ணாடி டம்ளரில் எலுமிச்சையைப் போட்டு வைப்பது. இது மிகவும் பிரபலமான மற்றும் நிறைய பேரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு செயல். நாம் குடியிருக்கும் வீடு எப்போதும் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருந்தால் தான், அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.

நிறைய பேருக்கு கண்ணாடி டம்ளரில் எலுமிச்சையைப் போட்டு வைப்பது குறித்து பல கேள்விகள் மனதில் இருக்கும். இக்கட்டுரையில் உங்களின் பல கேள்விகளுக்கான விடை கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
எதிர்மறை ஆற்றல் அதிகம் இருப்பதை எப்படி கண்டறிவது?
கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி எலுமிச்சையைப் போட்டு வைக்கும் போது, அந்த எலுமிச்சையானது நீரில் மிதக்காமல் மூழ்கிய நிலையில் இருந்தால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை எலுமிச்சையில் வெடிப்பு ஏற்பட்டால், எலுமிச்சையால் தாங்க முடியாத அளவில் எதிர்மறை ஆற்றல் வீட்டில் உள்ளது என்று அர்த்தம். அதுவே டம்ளரில் உள்ள நீர் கலங்கலாக காணப்பட்டால், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீர் உறிஞ்சிவிட்டது என்று அர்த்தம்.
எந்த இடத்தில் வைக்க வேண்டும்?
நீர் நிரப்பிய கண்ணாடி டம்ளரில் எலுமிச்சையைப் போட்டு, அதை வீட்டின் நுழைவாயின் அருகில் வைக்க வேண்டும். இதனால் வீட்டிற்கு வருவோரின் மீதுள்ள எதிர்மறை ஆற்றல் அல்லது கண் திருஷ்டியை, இந்த எலுமிச்சை உறிஞ்சிவிடும் மற்றும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் சேராமல் இருக்கும்.
எப்போது நீரை மாற்ற வேண்டும்?
கண்ணாடி டம்ளரில் உள்ள நீரையும், எலுமிச்சையையும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாற்ற வேண்டும். ஒருவேளை எலுமிச்சை அழுகினாலோ அல்லது வெடிப்பு ஏற்பட்டாலோ, அதை தூக்கி எறிந்து விட்டு, நீரையும், எலுமிச்சையையும் மாற்ற வேண்டும்.
இந்த பரிகாரத்திற்கு டிசைன் எதுவும் இல்லாத ப்ளைன் கண்ணாடி டம்ளரையே பயன்படுத்த வேண்டும். இன்னும் சிறப்பான பலனைப் பெற நீர் நிரப்பிய கண்ணாடி டம்ளரில் ஒரு கையளவு கல் உப்பை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் எதிர்மறை ஆற்றல் இன்னும் வேகமாக வெளியேற்றப்படும். முக்கியமாக இந்த எலுமிச்சை பரிகாரத்தை வீட்டில் மட்டுமின்றி பணியிடத்திலும் வைக்கலாம். இதனால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும்.



Click it and Unblock the Notifications