Latest Updates
-
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா?
தெற்கு பார்த்த வீட்டுல இருக்கீங்களா? அப்ப செல்வம் பெருக இத ஃபாலோ பண்ணுங்க...
Vastu Tips In Tamil: பெரும்பாலானோர் கிழக்கு மற்றும் வடக்கு திசையை பார்த்த வீடு தான் அதிர்ஷ்டமானதாகவும், மங்களகரமானதாகவும் கருத்துகின்றனர். தெற்கு திசையைப் பார்த்த வீடு எப்போதும் வாஸ்துவில் மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.
அதனால் ஒரு வீட்டிற்கு செல்லும் போது அல்லது ஒரு வீட்டை வாங்கும் போது தெற்கு திசை பார்த்த வீடு நல்லதாக கருதப்படுவதில்லை. ஆயினும் இது மிகப்பெரிய கட்டுக்கதைகளில் ஒன்றாகும்.

ஏனெனில் வாஸ்துப்படி, தெற்கு பார்த்த வீட்டில் இருந்து, வாஸ்து விதிகளை சரியாக பின்பற்றி வந்தால், அந்த வீடும் மற்ற திசைகளைப் போலவே நல்ல மகத்தான செல்வத்தையும், வெற்றியையும் தரும். இப்போது தெற்கு பார்த்த வீட்டில் செல்வம் பெருக எந்த மாதிரியான வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைக் காண்போம்.
* நீங்கள் தெற்கு திசை பார்த்த நிலத்தை வாங்கியிருந்து, அந்த இடத்தில் வீடு கட்டுவதாக இருந்தால், வீட்டின் வாசலை தென்மேற்கில் வைப்பதற்கு பதிலாக, தென்கிழக்கில் அமைப்பது நல்லது. இதனால் அந்த வீடு செல்வ செழிப்போடு இருக்கும்.
* தெற்கு திசை பார்த்த நிலத்தில் வீடு கட்டும் போது, தெற்கை விட வடக்கு பகுதியில் அதிக திறந்த வெளியை விட வேண்டும். அதேப் போல் மேற்கு திசையை விட கிழக்கு திசையில் திறந்த வெளியை அதிகம் விடுவது நல்லது. இதனால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிப்பதோடு, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்
* தெற்கு திசை நோக்கிய இடத்தில் வீட்டை கட்டி தளம் போடும் போது, சமமாக தளத்தைப் போட வேண்டும். ஏற்ற இறக்கமாக தளத்தைப் போடக்கூடாது. வீட்டில் நீரோட்டமானது வடகிழக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும்.
* தெற்கு திசை பார்த்த வீட்டில் வாட்டர் டேங்க், குழாய், கிணறு போன்றவையானது, வடக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் இருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.
* தெற்கு பார்த்த வீட்டில் வடகிழக்கு மூலையில் எவ்வித சேதமும் ஏற்படக்கூடாது. அதாவது இந்த பகுதியில் எந்த ஒரு விரிசலோ, பிளவுகளோ இருக்கக்கூடாது. மேலும் தென்மேற்கு கோணம் உயரமாகவோ பள்ளமாகவோ இருக்கக்கூடாது.
தெற்கு நோக்கிய வீட்டிற்கான வாஸ்து பரிகாரங்கள்:
* தெற்கு பார்த்த வீட்டிற்கு முன் இருமடங்கு தூரத்தில் வேப்பமரம் அமைந்திருந்தால், தெற்கு திசையினால் சந்திக்கும் பிரச்சனைகளின் அளவு குறையும்.
* தெற்கு பார்த்த வீட்டின் தாக்கத்தைக் குறைக்க, வீட்டு வாசலின் கதவில் பஞ்சமுக அனுமன் போட்டோவை தொங்கவிட வேண்டும்.
* தெற்கு திசை நோக்கிய இடத்தில் வீட்டை கட்டும் போது, வீட்டின் பிரதான கதவை தென்கிழக்கில் அமைக்கும் போது சிவப்பு அல்லது மெரூன் நிறத்தை பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். இது தவிர பச்சை அல்லது ப்ரௌன் நிறங்களையும் பயன்படுத்தலாம். ஆனால் நீலம் அல்லது கருப்பு நிறத்தை மட்டும் பயன்படுத்தக்கூடாது.
* தெற்கு திசை பார்த்து பிரதான கதவு இருந்தால், வீட்டிற்குள் நுழைபவரின் முழு உருவம் கண்ணாடியில் உருவாகும் வகையில், கதவின் முன் பெரிய கண்ணாடியை அமைக்க வேண்டும். இதன் காரணமாக, வீட்டிற்குள் நுழையும் நபருடன் சேர்ந்து வீட்டிற்குள் நுழையும் எதிர்மறை ஆற்றல் தலைகீழாக மாறி, திரும்பிச் செல்லும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications