Latest Updates
-
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம்
வாஸ்துப்படி, இந்த விலங்குகளின் சிலைகளை வீட்டின் இந்த திசையில் வைத்தால் பணம் அதிகம் சேருமாம்...
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு வீடு செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமானால், அந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையும், ஒவ்வொரு பொருட்களும் சரியான திசையில் இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், அது வீட்டில் வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்தி, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகளைப் போக்க வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஒன்று குறிப்பிட்ட விலங்குகள் அல்லது பறவைகளின் சிலைகளை வீட்டில் வைப்பது.

இப்படி வைக்கும் போது வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதோடு, வீட்டு சூழல் அமைதியாகவும், இனிமையாகவும் இருக்கும். அதோடு வீட்டின் நிதி நிலையை மேம்படுத்தும். இப்போது அந்த சிலைகள் எவையென்பதையும், அவற்றை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதையும் காண்போம்.
யானை
வாஸ்து சாஸ்திரத்தில் யானை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட யானையின் சிலையை வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைப்பது இன்னும் நல்லது. இப்படி வைப்பதனால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். மேலும் படிக்கும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
ஆமை
வாஸ்து சாஸ்திரத்தில் ஆமை அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் முக்கியமான விலங்காக கருதப்படுகிறது. இந்த ஆமையின் சிலையை வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. முக்கியமாக ஆமையை சிலையை வீட்டில் வைத்திருந்தால், குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
குதிரை
வாஸ்து சாஸ்திரத்தில் வெற்றி மற்றும் செழிப்பின் சின்னமாக குதிரை கருதப்படுகிறது. இந்த குதிரையின் சிலையை வீட்டின் தெற்கு திசையில், அதுவும் வீட்டிற்குள் வரும்படியான நிலையில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
நாய்
நாய் நன்றியுள்ள மிருகம். இந்த நாயை வீட்டில் செல்லப் பிராணியாக வளர்ப்பதே மிகவும் நல்லது. ஒருவேளை உங்களுக்கு நாய் வளர்க்க பிடிக்காவிட்டால், நாயின் சிலைகளை வீட்டின் எந்த திசையிலும் வைக்கலாம். இப்படி வைப்பது, வீட்டில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வரும்.
குரங்கு
வாஸ்து சாஸ்திரத்தின் படி, குரங்கு சிலையை வீட்டில் வைத்திருப்பது வீட்டிற்கு பலவித நன்மைகளைத் தரும். அதுவும் அந்த குரங்கு சிலையை வீட்டின் வடமேற்கு திசையில் வைத்திருப்பது வீட்டில் பண வரவை அதிகரிக்கும்.
காளை
வாஸ்துப்படி, காளையின் சிலையை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்த காளை சிலையை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் செல்வ செழிப்பை உண்டாக்கும்.
மான்
அழகாக துள்ளிக் குதித்து ஓடும் மான் சிலைகளை வீட்டின் கிழக்கு திசையில் வைத்திருப்பது மிகவும் நல்லதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இப்படி வைப்பதனால் வீட்டில் அமைதி நிலவும் மற்றும் பிரச்சனைகள் குறையும்.
சிங்கம்
வாஸ்து சாஸ்திரத்தில் சிங்கத்தின் சிலையை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த சிலையை வீட்டின் தென்மேற்கு திசையில் வைத்திருப்பது மிகவும் நல்லது. இதனால் வீட்டில் செல்வம் பெருகும் மற்றும் வீட்டில் உள்ளோர் பல வெற்றிகளையும் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications