Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
வாஸ்து படி உங்க சமையலறையில் அடுப்பு இந்த திசையில்தான் இருக்கணுமாம்... அதுதான் குடும்பத்துக்கு நல்லதாம்!
சமையலறை என்பது ஒரு வீட்டின் முக்கிய அங்கமாகும், எனவே அது வாஸ்து சாஸ்திரத்தின்படி கட்டப்படுவது முக்கியம். இது வீடு முழுவதும் நேர்மறை ஆற்றல் மேலோங்க உதவுகிறது மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரின் நல்வாழ்வையும் உறுதி செய்கிறது.
வீட்டின் பொருளாதார நிலையைத் தீர்மானிப்பதில் சமையலறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நீங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி சமையலறையை டிசைன் செய்ய வேண்டியது அவசியம். மேலும் நீங்கள் ஆரோக்கிய வாழ்வை பெற திட்டமிட்டால், உங்கள் சமையலறையை அதற்கேற்ப ஒழுங்கமைக்க வேண்டும், இதனால் நீங்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள்.

சமையலறையின் திசை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் சமையலறை உங்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் கட்டப்பட வேண்டும். அக்னி பகவான் தென்கிழக்கு திசையில் வீற்றிருப்பதே இதற்கு காரணம். இது குடும்பத்தில் நல்லிணக்கம் பேணப்படுவதை உறுதி செய்கிறது. இருப்பினும், உங்கள் வீட்டின் வடக்கு, வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசைகளில் சமையலறையை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சமையலறை உபகரணங்களின் திசை
கேஸ் அடுப்புகள், அடுப்புகள், சிலிண்டர்கள், மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் பிற சாதனங்கள் நெருப்பைக் குறிக்கின்றன, எனவே அவையும் தென்மேற்கு திசையில் வைக்கப்பட வேண்டும். சமைக்கும் போது நபர் கிழக்கு நோக்கி இருக்கும் வகையில் வைக்கவும்.
தண்ணீர் குழாய்
கழுவும் தொட்டிகள், தண்ணீர் குழாய்கள் மற்றும் சமையலறை வடிகால் போன்ற நீர் ஆதாரங்கள் எப்போதும் சமையலறையின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்கப்பட வேண்டும். இது நெருப்பு மற்றும் நீர் கூறுகளுக்கு இடையில் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
உணவின் திசை
சமைத்த பிறகு உணவை அடுப்பின் வலது பக்கத்தில் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அன்னபூரணி இந்த திசையில வசிப்பதே இதற்குக் காரணம். இடது புறத்தில் வைப்பதே ஆரோக்கிய சிக்கலை ஏற்படுத்தும்.
குளிர்சாதன பெட்டியின் திசை
அனைவரின் சமையலறையில் இருக்கும் இந்த சாதனம் எப்போதும் தென்மேற்கு திசையில் வைக்கப்பட வேண்டும். இது வாழ்க்கையில் உள்ள தடைகளை கடக்க உதவும்.
சமையலறையின் நிறம்
சமையலறையில் நிறங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாஸ்து படி சமையலறைக்கு மிகவும் சிறந்த நிறம் பச்சை, ஏனெனில் இது பசியைத் தூண்டுகிறது மற்றும் குடும்பத்தில் நல்லிணக்கத்தை வளர்க்கிறது. நீங்கள் பச்சை நிறத்தை விரும்பவில்லை என்றால் அதற்கு பதில் மஞ்சள் நிறத்தை முயற்சிக்கலாம்.



Click it and Unblock the Notifications

