Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
பாத்திரம் கழுவுவதற்கு கிச்சனில் ரொம்ப நேரம் நிக்குறீங்களா? இப்படி பண்ணுங்க ஈஸியா கழுவிட்டு சீக்கிரம் வந்துரலாம
அனைவருக்கும் சமைப்பதை விட மிகவும் கடினமான விஷயம் எதுவென்றால் அது சமைத்த பாத்திரத்தை கழுவுவதான். அனைத்து வீடுகளிலும் டிஷ்வாஷர் இருக்காது. எனவே கையால் பாத்திரத்தை கழுவுவதை தவிர நமக்கு வேறு வழியில்லை. சமைத்த பாத்திரங்கள் மற்றும் அழுக்கு பாத்திரங்கள் நிறைந்த சமையலறையை யாரும் விரும்புவதில்லை.
அதிகளவு பாத்திரங்களை கழுவுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. எனவே அதற்கான சில எளிய தந்திரங்களை கண்டறிய வேண்டியது மிகவும் அவசியமாகிறது. இந்த பதிவில் உங்கள் அழுக்கு பாத்திரங்களை வேகமாகவும், சிறப்பாகவும் சுத்தம் செய்ய என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கலாம்.

சரியான சோப்புகளை தேர்ந்தெடுக்கவும்
லாக்டிக் அமிலம் கொண்ட சோப்புகளைத் தேடுங்கள், இது பாக்டீரியா எதிர்ப்பு நன்மைகளை வழங்குகிறது மற்றும் பாத்திரத்தை கழுவும் வேலையை விரைவாகச் செய்கிறது. லாரமைன் ஆக்சைடு கொண்ட சோப்புகளில் கிரீஸை போக்கும் ஆற்றல் உள்ளது.
பாத்திரத்தை ஈரமாக்கி சின்க்-ல் போடவும்
தட்டில் இருக்கும் மீதமுள்ள உணவுகளை பாத்திரம் கழுவும் சின்க்-ல் போடுவதற்கு முன் எடுத்து குப்பைத்தொட்டியில் போடவும். தட்டு மற்றும் பிற பாத்திரங்கள் காயாமல் இருப்பதற்கு பாத்திரங்களில் சிறிது தண்ணீரை தெளித்து வைக்கவும். பாத்திரங்களின் மீது சிறிது பேக்கிங் சோடா போடுவது பாத்திரத்தை கழுவுவதை எளிதாக்கும்.
வெதுவெதுப்பான பாத்திரத்தை ஊற வைக்கவும்
பாத்திரங்களை விரைவில் சுத்தமாக கழுவுவதற்கு அவற்றை வெதுவெதுப்பான நீரில் ஊறவைப்பது நல்லது. இது உணவுத் துகள்களை தளர்த்தும் மற்றும் நீண்ட நேரம் பாத்திரத்தை தேய்ப்பதில் இருந்து உங்களை காப்பாற்றும். தீய்ந்து போன பாத்திரங்களை உப்பு மற்றும் குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும், பின்னர் அந்த தண்ணீரை கொதிக்க வைத்து அதற்குப்பின் கழுவினால் பாத்திரம் புதியது போல மாறும்.
பால் பாத்திரங்களை கழுவ குளிர்ந்த நீரை பயன்படுத்தவும்
ஐஸ்க்ரீம் அல்லது வெண்ணெய் மற்றும் பால் போன்ற பால் பாத்திரங்களை வெந்நீரில் கழுவினால் அது விடாப்பிடியான கறையாக மாறும். வெதுவெதுப்பான நீரில் பாத்திரத்தை கழுவுவதற்கு முன், இந்த பாத்திரங்களை குளிர்ந்த நீரில் ஊறவைக்கவும்.
பேக்கிங் சோடாவை பயன்படுத்துங்கள்
பாத்திரத்தில் விடாப்பிடியாக மற்றும் பிசுபிசுவென்று இருக்கும் கறைகளை நீக்க பேக்கிங் சோடாவை தேய்க்கவும் மற்றும் அதன்மீது தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். அதன்பின் பாத்திரத்தை சிறிது சூடாக்கவும். இந்த தண்ணீர் ஆறியவுடன் பாத்திரத்தைக் கழுவினால் கறைகள் உடனடியாக நீங்கும்.
சின்க்-ல் பாத்திரங்ளை விடாதீர்கள்
பாத்திரங்களை ஒருபோதும் பிறகு கழுவிக் கொள்ளலாம் என்று அலட்சியமாக விடாதீர்கள். பாத்திரங்களை உடனுக்குடன் கழுவுவது உங்களின் சுமைகளையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும். அதுமட்டுமின்றி பாத்திரங்களை கழுவாமல் அப்படியே விடுவது அதிலுள்ள உணவுகள் காய்வதற்கு வழிவகுக்கும். இது சமையலறையில் விரும்பத்தகாத வாசனையை ஏற்படுத்துவதுடன் பாத்திரங்களை கழுவும் நேரத்தையும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
