Latest Updates
-
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
வீட்ல காபி போடும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா காபி கஷாயமாகிரும்...!
பர்பெக்ட்டான மற்றும் சரியான காபியை வீட்டிலேயே தயாரிக்க ஆசைப்படுகிறீர்களா? உங்கள் காபியை உங்களை விட நீங்கள் எப்படி விரும்புகிறீர்கள் என்பது யாருக்கும் தெரியாது. கொரோனாவுக்கு பிறகு, காபி குடிப்பவர்களின் எண்ணிக்கையை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளது.
உலகில் காபி குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காபி குடிப்பவர்களில் பெரும்பாலான மக்கள் தங்கள் காபியை வீட்டிலேயேதான் தயாரிக்கின்றனர்.

அவ்வாறு வீட்டில் காபி தயாரிக்கும் போது அவர்களுக்கேத் தெரியாமல் பல தவறுகளை செய்து விடுகிறார்கள். இது காபியின் சுவை மற்றும் தரத்தை பாதிப்பதுடன் மோசமான காபி அனுபவத்தையும் ஏற்படுத்தும்.
அழுக்கான பாத்திரத்தை உபயோகிப்பது
ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு உங்கள் காபி தயாரிக்கும் பாத்திரத்தை நன்றாக கழுவ வேண்டும். காபி தயாரித்த தடமே இல்லாமல் பாத்திரத்தை கழுவ வேண்டும்
ஒருவேளை நீங்கள் காபி மேக்கரில் காபி தயாரித்தால் உங்கள் காபி மேக்கரை வினிகர் கொண்டு சுத்தம் செய்வது நல்லது.
பழைய காபி தூளை உபயோகிப்பது
காபி பீன்ஸ் வறுத்த நாள் முதல் நான்கு வாரங்கள் வரை புத்துணர்ச்சியாக இருக்கும். அந்த காலக்கெடுவை நீங்கள் கடந்தவுடன், புத்துணர்ச்சி குறைந்துவிடும். எனவே இந்த காலகட்டத்தில் தயாரிக்கும் காபி சுவையானதாக இருக்கும். நீங்கள் கடைகளில் வாங்கும் பெரும்பாலான காபி பீன்கள் இந்த புத்துணர்ச்சி இல்லாததாக இருக்கும். எனவே மாதம் ஒரு முறை காபி பீன்களை மாற்றுவது சுவையான காபியை பெற உதவும்.
காபித்தூளை சரியாக சேமிக்காமல் இருப்பது
வெப்பம், ஒளி, ஈரப்பதம் மற்றும் காற்று வெளிப்பாடு ஆகியவை காபித்தூளை மோசமாக பாதிக்கும் முதன்மையான காரணிகளாகும். காபி பீன் அல்லது காபித்தூளை வாங்கியதும், ஆக்சிஜனேற்ற அபாயங்களைக் குறைக்க உங்கள் பீன்ஸை காற்று புகாத கொள்கலனில் வைக்க உதவுகிறது. உங்கள் காபி பைகளை வீட்டில் குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் சேமிப்பது நல்லது.
காபியில் கொதிக்கும் நீரை ஊற்றக்கூடாது
நீங்கள் உங்கள் காபியை அடுப்பில் தயாரிக்கும் போது, தண்ணீரை கொதிக்க வைத்து, உடனடியாக அதை காபி தூள் மீது ஊற்றுவதாக இருந்தால் அதனைத் தவிர்க்க வேண்டும். சூடான கொதிக்கும் நீர் காபியை வீணாக்கலாம்.
நீரின் சரியான வெப்பநிலை 92 முதல் 96 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும். இதற்கான சிறந்த தந்திரம் என்னவென்றால், தண்ணீரை கொதிக்க வைத்து, அதன் வெப்பநிலையை குறைக்க 50 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை காத்திருந்து, பின்னர் அதை காபி மீது ஊற்றவும்.
அளவு முக்கியம்
காபியின் சுவை அதில் சேர்க்கப்படும் காபித்தூளின் அளவை பொறுத்தது. மிகவும் அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ காபித்தூளை சேர்ப்பது காபியின் சுவையை கெடுக்கும். ஒவ்வொரு 180 மில்லி தண்ணீருக்கும் 2 டேபிள்ஸ்பூன் அதாவது 30 கிராம் காபித்தூள் சேர்ப்பது பர்பெக்ட்டான காபியைக் கொடுக்கும்.
குழாய் தண்ணீரை பயன்படுத்துவது
காபி தயாரிக்கும் போது தவறான நீரை பயன்படுத்துவது காபியின் சுவையை கணிசமாகப் பாதிக்கும். நீங்கள் வழக்கமாக எந்த தண்ணீரை குடிக்கிறீர்களோ அந்த தண்ணீரையே காபி தயாரிக்க பயன்படுத்த வேண்டும். குழாய் தண்ணீரை ஒருபோதும் காபி தயாரிக்க பயன்படுத்தக்கூடாது.



Click it and Unblock the Notifications

