Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சப்பாத்தி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாமகூட பண்ணிராதீங்க... இல்லனா சப்பாத்தி ரப்பர் மாதிரி மாறிரும்!
How to Prepare Soft Chapati: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் உட்கொள்ளப்படும் ஒரு இரவு உணவாக சப்பாத்தி உள்ளது. சுவை மட்டுமின்றி ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும் சப்பாத்தி எடையைக் குறைக்கும் உணவுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
பாரம்பரியமாக, சப்பாத்திக்கான மாவு தண்ணீர், உப்பு மற்றும் கோதுமை மாவுடன் பிசையப்படுகிறது. ஆனால் சப்பாத்தி செய்வதில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை சப்பாத்தியை கடினமாக மற்றும் தடிமனாக சுடுவதுதான், ஏனெனில் மென்மையான சப்பாத்திகள் மட்டுமே அனைவருக்கும் பிடித்ததாகக இருக்கும்.

உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி மிகவும் கடினமாக இருப்பதற்கு நீங்கள் சப்பாத்தி சுடும்போது செய்யும் சில தவறுகள்தான் காரணம். மென்மையான சப்பாத்தி செய்வதற்கு தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சரியான மாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
சப்பாத்தி பொதுவாக கோதுமை மாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால் அனைத்து கோதுமை மாவும் ஒரே மாதிரியானதாக இருக்காது. கோதுமை மாவின் தரம் அதன் பிராண்டுகளை பொறுத்து மாறுபடும். எனவே சப்பாத்தி செய்வதற்கு தரமான கோதுமை மாவை வாங்க வேண்டும்.
குளிர்ந்த நீர்
நீங்கள் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தினால், உங்கள் சப்பாத்தி கடினமாக இருக்கும். மிருதுவான சப்பாத்தி வேண்டுமென்றால், எப்போதும்சப்பாத்திக்கு மாவு பிசையும் போது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள்.
மாவு பிசைதல்
சப்பாத்தி தயாரிப்பதில் மாவு பிசைவது மிகவும் முக்கியமான நிலையாகும். மாவை கெட்டியாக பிசைந்தால் சப்பாத்தி தடிமனாக இருக்கும். மென்மையான சப்பாத்தி வேண்டுமெனில் மாவை மென்மையான பிசையவும். குறிப்பாக மாவு மிகவும் ஈரமாக இருக்கக்கூடாது.
உடனடியாக சமைக்கக் கூடாது
சப்பாத்தி செய்யும் போது பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு மாவு பிசைந்தவுடனேயே அதனை சமைப்பதுதான். அவ்வாறு செய்தால் சப்பாத்தி மிகவும் தடிமனாக வரும். சப்பாத்தி சுடுவதற்கு முன் குறைந்தது 20 நிமிடங்களுக்கு மாவை மூடி வைக்கவும்
எண்ணெய் சேர்க்காமல் இருப்பது
நீங்கள் மென்மையான சப்பாத்திகளை விரும்பினால், மாவு பிசையும் போது சப்பாத்தியில் சமையல் எண்ணெய் சேர்க்க மறந்து விடாதீர்கள். மாவை மென்மையாக்க பிசையும் போது சிறிது எண்ணெய் சேர்த்து பிசைய வேண்டும். மேலும், சிறிது பால் அல்லது கிரீம் சேர்த்து மாவு பிசைவது சப்பாத்தியை மேலும் மென்மையாக்கும்.
சமமாக உருட்ட வேண்டும்
இதுவும் பெரும்பாலான மக்கள் செய்யும் ஒரு தவறாகும். நீங்கள் சப்பாத்தியை சமமாக உருட்டவில்லை என்றால், சில பகுதிகள் மெல்லியதாகவும் கடினமாகவும் இருக்கும். உங்கள் மாவு மிகவும் ஈரமாக இருந்தால், உருட்டும்போது அதிக மாவு சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், இதனால் உங்கள் சப்பாத்திகள் கடினமானதாக மாறலாம். கூடுதலாக சப்பாத்தியை உருட்டும்போது கொஞ்சம் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
நெருப்பின் அளவு
உங்கள் தோசைக்கல் மிகவும் சூடாக இருந்தால், உங்கள் சப்பாத்தி நன்றாக வேகும் முன்னரே கருகிவிடும். மேலும், நெருப்பு போதுமான அளவு சூடாக இல்லாவிட்டால், உங்கள் சப்பாத்திகள் அதிக நேரம் சூடாக இருக்கும், இதனால் சப்பாத்தி கடினமானதாக மாறும்.



Click it and Unblock the Notifications
