Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கார்த்திகை தீபத்துக்கு வீட்டு வாசலில் இந்த ரங்கோலி கோலங்களை போடுங்க.. அழகா இருக்கும்..
Karthigai Deepam 2025: தமிழ்நாட்டில் இந்துக்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு தீபத்திருவிழா தான் கார்த்திகை தீபம். இந்த கார்த்திகை தீப நாளில் தான் சிவபெருமான் விஷ்ணு மற்றும் பிரம்மாவுக்கு அக்னி வடிவமாக காட்சியளித்தார். இதை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் இந்த திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
இந்த தீபத்திருவிழாவை முன்னிட்டு, மக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை அழகாக பூக்களால் அலங்கரிப்பார்கள். அதோடு வீட்டிற்கு முன் கண்களை கவரும் வகையில் அழகான மற்றும் வண்ணமயமான கோலங்களைப் போட்டு வீட்டு வாசலையும் அலங்கரிப்பார்கள்.

அதன் பின் மாலை வேளையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றிய பின், வீட்டில் பூஜை செய்து விளக்கேற்றி, வீட்டை அகல்விளக்குகளால் அழகாக அலங்கரிப்பார்கள். இப்படி வீட்டைச் சுற்றி அகல் விளக்குகளை ஏற்றுவதன் மூலம், வீட்டில் உள்ள தீய ஆற்றல்கள் விரட்டப்பட்டு, நேர்மறை ஆற்றல்கள் வீட்டிற்கு கொண்டு வரப்படுவதாக நம்பப்படுகிறது.
இந்த கார்த்திகை தீபத்திருவிழா நாளில் உங்கள் வீட்டு வாசலில் மற்றவர்கள் பார்த்து பொறாமை படும் அளவில் அழகான விளக்கு கோலம் போட நினைக்கிறீர்களா? அப்படியானால் கீழே உங்களுக்காக சில அழகான கார்த்திகை தீப கோலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து போடுங்கள்.
1. சிம்பிளான தீப கோலம்
நீங்கள் மிகவும் சிம்பிளாக, அதே சமயம் அழகான தீப கோலத்தைப் போட விரும்பினால், தாமரையில் தீபம் இருப்பது போன்ற இந்த கோலத்தைப் போடலாம். இந்த கோலத்திற்கு நிறைய வண்ணங்கள் தேவையில்லை. வெறும் 3 கலர் பொடி இருந்தாலே போதும், இந்த அழகான கோலத்தைப் போடலாம்.
2. தாமரையில் தீபம்
உங்கள் வீட்டு வாசல் சிறியதா? அந்த வாசலில் சிறிய அளவிலான அதே சமயம் க்யூட்டான ஒரு ரங்கோலி போட நினைத்தால், தாமரையில் தீபம் இருப்பது போன்ற இந்த ரங்கோலியை போடலாம். இந்த ரங்கோலிக்கு வெள்ளை கோலமாவும், காவியும் இருந்தாலே போதும்.
3. மயில் ரங்கோலி
நீங்கள் ஒரு சிம்பிளான மற்றும் சிறிய அளவிலான மயில் ரங்கோலியை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த மயில் ரங்கோலி உங்களுக்கானதாக இருக்கும். இந்த ரங்கோலியைப் போட்டு, அதன் மேல் விளக்குகளை வைத்து அலங்கரித்தால், அருமையாக இருக்கும்.
4. புள்ளி விளக்கு கோலம்
நீங்கள் கார்த்திகை தீபத்துக்கு புள்ளி வைத்து போடும் விளக்கு கோலத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த பல வண்ணங்கள் கொண்ட கோலங்களை ட்ரை செய்யுங்கள். உங்கள் வீட்டு வாசல் பெரியது என்றால், நிச்சயம் இந்த கோலங்களுள் ஒன்றை தேர்வு செய்து போடலாம்.
5. கலர்ஃபுல் தீப ரங்கோலி
கார்த்திகை தீப திருநாளில் கலர்ஃபுல்லான 6 தீபங்களைக் கொண்ட ஒரு ரங்கோலியை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் மிகவும் பெரியதாக இல்லாமல், மிதமான அளவில் கார்த்திகை தீப ரங்கோலியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் இந்த விளக்கு கோலத்தைப் போடலாம்.



Click it and Unblock the Notifications