Latest Updates
-
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும்
தெரியாம கூட துடைப்பத்தை வீட்டின் இந்த திசையில் வெக்காதீங்க... இல்ல பெரிய நஷ்டத்தை சந்திப்பீங்க...
துடைப்பத்தை ஒரு வீட்டில் சரியான திசையில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே வீட்டில் வறுமையை வரவழைக்கும். இப்போது வாஸ்துப்படி துடைப்பத்தை எங்கு வைக்க வேண்டும் என்பது பற்றி காண்போம்.
நம் வாழ்வில் வாஸ்து மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஒருவர் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி கட்டப்படாவிட்டால், அந்த வீட்டில் குடியிருப்போர் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக நிதி நிலையில் பிரச்சனைகள் ஏற்படும், வறுமை மேலோங்கும். இதற்கு காரணம் வீட்டு வாஸ்துப்படி கட்டப்படாமல் இருப்பது மற்றொன்று வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள் வாஸ்துப்படி சரியான இடத்தில் வைக்காமல் இருப்பது.

அந்த வகையில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஒரு பொருள் தான் துடைப்பம். இந்த துடைப்பம் வீட்டில் உள்ள குப்பைகளை வெளியேற்ற உதவினாலும், துடைப்பம் லட்சுமி தேவி வாசம் செய்யும் பொருளாக கருதப்படுகிறது. ஒரு வீட்டை காலி செய்யும், அந்த வீட்டில் எதை மறக்கிறோமோ இல்லையோ, துடைப்பத்தை மறக்காமல் எடுத்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டின் லட்சுமியை விட்டு செல்வதற்கு சமம் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட துடைப்பத்தை ஒரு வீட்டில் சரியான திசையில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே வீட்டில் வறுமையை வரவழைக்கும். இப்போது வாஸ்துப்படி துடைப்பத்தை எங்கு வைக்க வேண்டும் என்பது பற்றி காண்போம்.

உடைந்த துடைப்பத்தை பயன்படுத்தக்கூடாது
நீங்கள் உங்கள் வீட்டில் உடைந்த துடைப்பத்தை பயன்படுத்தி வந்தால், முதலில் அதை தூக்கி எறியுங்கள். வாஸ்துப்படி உடைந்த துடைப்பத்தை பயன்படுத்தக்கூடாது. ஒருமுறை துடைப்பம் உடைந்துவிட்டால், அது தீங்கு விளைவிக்கும் ஒரு பொருளாகிவிடும். எனவே இந்த மாதிரியான துடைப்பத்தை வீட்டில் வைத்திருந்தால், முதலில் அப்புறப்படுத்துங்கள்.

எந்த இடத்தில் வைக்கக்கூடாது
என்ன தான் துடைப்பம் லட்சுமி தேவியின் வடிவாக கருதப்பட்டாலும், அதை ஆபரணங்கள் அல்லது மதிப்புமிக்க பொருட்கள் வைக்கும் இடத்தில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது அந்த வீட்டில் வணிகம் செய்வோரின் வியாபாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை, அதாவது நஷ்டத்தை ஏற்படுத்தும்.

துடைப்பத்தை நிறுத்தி வைக்கக்கூடாது
துடைப்பத்தை நீங்கள் உங்கள் வீட்டில் நிறுத்தி வைத்திருந்தால், முதலில் அதை படுக்க வையுங்கள். ஏனெனில் வாஸ்துப்படி துடைப்பத்தை நிறுத்தி வைக்கக்கூடாது. இப்படி வைத்தால், அது மோசமான சகுனமாக கருதப்படுகிறது. எனவே எப்போதும் துடைப்பத்தை வீட்டில் படுக்க வையுங்கள். இதனால் உங்கள் வீட்டில் உள்ள செல்வம் அல்லது வங்கி இருப்பு எப்போதும் காலியாகாது.

மாலை வேளையில் வீட்டை பெருக்காதீர்
உங்கள் வீட்டில் பாட்டிமார்கள் இருந்தால், அவர்கள் மாலை வேளையில் வீட்டை பெருக்கக்கூடாது என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அது உண்மை தான், ஏனெனில் அவ்வாறு செய்வது லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கும். எனவே எப்போதும் இரவு அல்லது மாலை வேளையில் வீட்டைப் பெருக்குவதைத் தவிர்த்திடுங்கள். ஒருவேளை வீட்டை பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், குப்பையை வீட்டிற்கு வெளியே கொட்டாதீர்கள்.

துடைப்பத்தை எந்த திசையில் வைக்கக்கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, துடைப்பத்தை எப்போதும் தென்மேற்கு மூலை அல்லது மேற்கு திசையில் தான் வைக்க வேண்டும். அதே வேளையில், துடைப்பத்தை வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. இந்த திசையில் வைத்தால், அது வீட்டின் சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சியை அழிப்பதோடு, வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications
