பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒழுங்காக கழுவுவதற்கான சில டிப்ஸ்...

By Nithya Devi Muthuraman

பழங்கள் மற்றும் காய்கறிகள் விளையும் நிலம் மற்றும் அவற்றிற்கு பாய்ச்சப்படும் தண்ணீர் போன்றவற்றில் ஊறு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும்; ஆகையினால், அவற்றை நன்கு கழுவ வேண்டியது அவசியம். மேலும், அறுவடை செய்யப்பட்ட பின் அவற்றை சேமித்து வைக்கும் போதோ அல்லது சமைக்கும் போதோ கூட கெட்டுப் போகக்கூடும்.

கெட்டுப் போன உணவுப் பண்டங்களை உட்கொள்வதால் உணவே நஞ்சாக மாறுதல் மற்றும் இதர உணவு சார்ந்த நோய்கள் வரக்கூடும். நம்மால் இயன்றவரை மிகவும் சுத்தமாக இப்பண்டங்களை கழுவ வேண்டும் என்பதை பெரும்பாலானோர் அறிந்து வைத்திருந்தாலும், நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான சில சங்கதிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. ஏனெனில், அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் கடைப்பிடிப்பதென்பது நடைமுறையில் இயலாத காரியம்.

ஆகவே பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள கேடு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களை அகற்றுவதற்கான முக்கியமான வழிமுறைகள் பின்வருமாறு:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழிமுறை: 1

வழிமுறை: 1

உங்கள் கைகளை முதலில் நன்றாகக் கழுவுங்கள். எந்தவொரு பண்டத்தையும் தொடுவதற்கு முன்பும் தொட்ட பின்பும், சுமார் 20 முதல் 30 வினாடிகள் (அதாவது பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை பாடுவதற்காகக்கூடிய கால அளவு) வரை வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்பை உபயோகித்து உங்கள் கைகளை நன்றாகக் கழுவுங்கள்.

வழிமுறை: 2

வழிமுறை: 2

எந்தவொரு காய்கறியையும், பழத்தையும் அவற்றை உட்கொள்வதற்கு, சமைப்பதற்கு, அல்லது வெட்டுவதற்கு முன்பு, குழாயில் இருந்து குளிர்ந்த நீரை திறந்து விட்டு நன்றாகக் கழுவுங்கள். சோப், டிடெர்ஜென்ட், அல்லது கடையிலிருந்து வாங்கிய வாஷ்கள் எதையும் அறவே பயன்படுத்தாதீர்கள். எப்போதும் தண்ணீரையே உபயோகியுங்கள்.

வழிமுறை: 3

வழிமுறை: 3

ஆப்பிள், பேரிக்காய் மற்றும் பீச் போன்று தோலை உரித்து சாப்பிடப்படும் அல்லது சமைக்கப்படும் பழங்களையும், உரிப்பதற்கு முன்பே கழுவ வேண்டியது அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் அவற்றை வெட்ட நீங்கள் உபயோகிக்கும் கத்தியில் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்வதை தவிர்க்கலாம்.

வழிமுறை: 4

வழிமுறை: 4

கழுவிய பின் பண்டங்களை உலரச் செய்யுங்கள். ஒரு உலர்ந்த காகிதத் துண்டு அல்லது துணி மூலம் உங்கள் பண்டங்களின் மீது படிந்திருக்கக்கூடிய தூசி அல்லது பாக்டீரியாக்களை களையலாம்.

வழிமுறை: 5

வழிமுறை: 5

பண்டங்களை சுத்தப்படுத்தும் பிரஷ் ஒன்றை வாங்கலாம். கடினமான பண்டங்களான வெள்ளரிக்காய் போன்றவற்றின் மேற்புறத்தை சீவியெடுக்கவும், அவற்றின் மேல் இருக்கக்கூடிய மைக்ரோப்களை (பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நுண்ணியிர்கள்) அகற்றவும் இதனை உபயோகிக்கலாம். குறிப்பாக பிரஷ் சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம்.

வழிமுறை: 6

வழிமுறை: 6

சமையல் மேடை மற்றும் பாத்திரங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். பண்டங்களை கழுவியதற்கு பின்னரும், அவற்றின் தோலை அகற்றிய பின்னரும், அவற்றை வெட்டி, நறுக்குவதற்கு முன்னரும் நீங்கள் உபயோகிக்கும் இடத்தை சுத்தப்படுத்துங்கள். இதன் மூலம் பச்சையாக இருக்கும் பண்டங்களிலிருந்து பாக்டீரியாக்கள் பரவுவதைத் தடுக்கலாம்.

வழிமுறை: 7

வழிமுறை: 7

மெலிதான பண்டங்களின் மீது நீரை தெளியுங்கள். ராஸ்ப்பெர்ரி போன்று எளிதில் பிய்ந்து போகும் தன்மையுடைய பண்டங்களை குழாய் நீருக்கடியில் வைத்தால் பாழாகி விடும்; அதனால் அவற்றை சுத்தப்படுத்த அவற்றின் மேல் நீரை தெளிப்பதே சாலச் சிறந்தது.

வழிமுறை: 8

வழிமுறை: 8

சில பண்டங்களை இரண்டொரு நிமிடங்கள் தண்ணீரில் அமிழ்த்தி வைக்க வேண்டியது அவசியம். ப்ராக்கோலி மற்றும் காலிஃப்ளவர் போன்ற உணவுப் பொருட்களில் காணப்படும் கடினமான பகுதிகளை ஒரே நேரத்தில் சுத்தப்படுத்துவது இயலாத காரியம். அதற்கு பதில் குளிர்ச்சியான, சுத்தமான தண்ணீரில் அவற்றை அமிழ்த்தி வைக்கலாம்.

வழிமுறை: 9

வழிமுறை: 9

வேலைக்காக நீங்கள் வெளியே செல்லும் போது ஸ்ப்ரே பாட்டில் ஒன்றில் தண்ணீரை நிரப்பி எடுத்துக் கொண்டால், பணியிடத்தில் ஆப்பிள்கள் மற்றும் இதர பழங்களை கழுவுவதற்கு அதனை உபயோகித்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion