Latest Updates
-
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..
பழங்களை வாங்கியவுடன் இந்த பொருளில் கழுவினால் பழங்கள் பல வாரங்கள் கெட்டுப்போகாமல் இருக்குமாம்...!
இயற்கையாகவே வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த பழங்கள் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகள் என்பதில் சந்தேகமில்லை. ஒருவர் ஆரோக்கியமான் வாழ்க்கை வாழ்வதற்கு பழங்களின் தேவை இன்றியமையாதது.
ப்ரெஷான பழங்கள் எப்போதும் சுவையானதாக இருப்பதுடன் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது, ஆனால் நீங்கள் அடிக்கடி பழங்களை மொத்தமாக வாங்கி, அவற்றை நீண்ட காலம் ப்ரெஷாக வைத்திருக்க போராடுகிறீர்களா?

பழங்களை அவற்றின் புத்துணர்ச்சியைத் தக்கவைக்க சரியான முறையில் சேமிக்க சில ஸ்மார்ட் டிப்ஸ்கள் உள்ளன. இந்த வழிகளை பின்பற்றினால் உங்கள் வீட்டில் பழங்களை நீண்ட காலம் கெட்டுப்போகாமல், சுவை மாறாமல் பாதுகாக்கலாம்.
பழங்களை கழுவி சுத்தம் செய்யவும்
பழங்களை ப்ரெஷாக வைத்திருப்பதற்கான முக்கியமான மற்றும் முதன்மையான விதி என்னவென்றால், அவற்றை கழுவி சுத்தம் செய்து, பழங்களை நன்கு உலர்த்திய பிறகு குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்க வேண்டும்.
ஈரப்பதம் இருக்கக்கூடாது
பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைப்பதற்கு முன், அவை சரியாக உலர வைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எப்போதும் பழங்கள் ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும்.
ஏனெனில் ஈரப்பதம் புதிய பழங்கள் விரைவாக அழுகுவதற்கு வழிவகுக்கும் மற்றும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும், இது புதிய பொருட்களின் அடுக்கு ஆயுளைக் குறைக்கும்.
பழங்களை முறையாக சேமிக்கவும்
பழங்களை ஃப்ரெஷ்ஷாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க, குளிர்சாதன பெட்டியில் வைத்து தனித்தனியாக சேமிக்கவும். இருப்பினும், வாழைப்பழம், அவோகேடா மற்றும் தக்காளி போன்ற பழங்களை ப்ரெஷாக வைத்திருக்க குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்க அறை வெப்பநிலையில் சேமிக்க வேண்டும்.
பழங்களை தனித்தனியாக மூடி வைக்கவும்
எந்தப் பழத்தையும் கழுவி, உலர்த்தி, பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட காலம் புதியது போன்று இருக்கும். இல்லையெனில், வெளியில் உள்ள வானிலையில் பழங்கள் கெட்டுப்போகலாம். குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போதும் பிளாஸ்டிக் காகிதத்தில் சுற்றி தனித்தனியாக வைப்பது பழங்களை கெட்டுப்போகாமல் பாதுகாக்க உதவும்.
நறுக்கிய பழங்களை எப்படி சேமிக்க வேண்டும்?
பழங்களை வெட்டிய பின் சேமித்து வைப்பது நல்ல யோசனையல்ல, ஆனால் அவற்றை சேமித்து வைக்க வேண்டும் என்றால், எப்பொழுதும் பழங்களை எலுமிச்சை சாறுடன் கலந்து காற்று புகாத கொள்கலன்களில் சேமித்து வைக்க வேண்டும். அவை நொதி எதிர்வினைகளைத் தவிர்க்க இதனை ப்ரீசரில் வைக்க வேண்டும். இது பழங்களின் அடுக்கு ஆயுளை அதிகரிக்கிறது.
வினிகரில் கழுவலாம்
பழங்களை நீண்ட காலம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வினிகர் மற்றொரு எளிய வழியாகும். பழத்தை தண்ணீரில் கழுவுவதற்கு பதிலாக, சிறிது வினிகர் மற்றும் உப்பு சேர்த்து அதில் கழுவவும். அந்த கலவையில் பழங்களை குறைந்தது 8-10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அதன் பிறகு, கலவையிலிருந்து பழங்களை அகற்றி நன்கு உலர்த்தி குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கவும். இப்படி கழுவி வைத்தால் பழங்கள் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் நன்றாக இருக்கும்.
குளிர்சாதனப் பெட்டியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் பழங்கள் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்க விரும்பினால் உங்கள் குளிர்சாதனப் பெட்டியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை வளர அனுமதிக்காது.
குளிர்சாதனப் பெட்டிக்குள் நன்கு காற்று சுழற்சியை அனுமதிக்கவும். நெரிசலான இடத்தில், உங்களின் பெரும்பாலான புதிய விளைபொருட்கள் எத்திலீன் வாயுவை வெளிப்படுத்துகின்றன. இதனால் பழங்கள் விரைவில் கெட்டுப்போகலாம்.



Click it and Unblock the Notifications

