Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகாமல் நீண்ட நாள் பிரஷ்ஷா இருக்கணுமா? அப்ப இந்த மாதிரி வையுங்க...
நாம் மார்கெட் செல்லும் போது சில சமயங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைக் குறைவிலும், நன்றாகவும் இருக்கும். அப்படி இருக்கும் சமயத்தில், அந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சற்று அதிகமாக வாங்கி வைத்துக் கொள்ள விரும்புவோம். அவ்வாறு வாங்க விரும்பும் நம்மில் பலருக்கு அந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எப்படி நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்துக் கொள்வது என்பது தெரிவதில்லை.
நாம் உண்ணும் உணவுகளை சரியாக சேமிக்கத் தெரிந்தால், நமது பணம் அதிகம் செலவாவதைத் தடுக்கலாம். அதுவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியாக சேமிககத் தெரிந்தால், அவை வேகமாக அழுகுவதைத் தடுக்கலாம். அதற்கு முதலில் நமது காலநிலையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் காலநிலையைப் பொறுத்து உணவுகள் நற்பதமாக இருப்பது நல்லது. அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பமான பகுதிகளில் சில காய்கறிகள் மற்றும் பழங்கள் விரைவில் அழுகிவிடும். இப்போது காய்கறிகள் மற்றும் பழங்கள் விரைவில் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்திருப்பது எப்படி என்பதைக் காண்போம்.
ஸ்ட்ராபெர்ரி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் புளிப்புச் சுவையைக் கொண்ட பழம் தான் ஸ்ட்ராபெர்ரி. இந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்க ஒரு பங்கு வினிகருடன், 3 பங்கு நீரை ஊற்றி கலந்து, அந்த நீரில் ஸ்ட்ராபெர்ரியை கழுவி, ஒரு டிஸ்யூ பேப்பரில் வைத்து உலர வைக்க வேண்டும். நன்கு உலர்ந்ததும், ஒரு டப்பாவில் டிஷ்யூ பேப்பரை விரித்து அதில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்தால், நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்.
ஆப்பிள்
பொதுவாக ஆப்பிள்கள் ஓரிரு நாட்களிலேயே கெட்டுப் போகாது. ஆனால் ஆப்பிள் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமானால், அவற்றை வெளியே வைப்பதற்கு பதிலாக, ப்ரிட்ஜில் வைத்தால், நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்.
வாழைப்பழம்
பழங்களில் வாழைப்பழம் விரைவில நன்கு கனிந்து அழுகும் தன்மை கொண்டவை. ஆனால் நீங்கள் வாங்கிய வாழைப்பழம் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமானால், வாழைப்பழத்தின் தண்டு பகுதியில் பிளாஸ்டிக் ஃபுட் வ்ராப்பை (Plastic food Wrap) சுற்றி, ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காமல், வெளியே அறைவெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும்.
சிட்ரஸ் பழங்கள்
எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கிரேப்ஃபுரூட் போன்றவை விரைவில் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமானால், அவற்றை ஃப்ரிட்ஜின் மேல் பகுதியில் வைக்காமல், கீழே ட்ராயரில் வைக்க வேண்டும்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழம் பெரியதாக இருப்பதால், ஒரே வேளையில் வைத்திருந்து சாப்பிட முடியாது. இந்நிலையில் அன்னாசியானது நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமானால், இலையுள்ள அதன் மேல் பகுதியை வெட்டிவிட வேண்டும். பின் ஒரு தட்டில் அன்னாசியை கவிழ்த்து வைத்து, அப்படியே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இதனால் அன்னாசிப்பழம் நீண்ட நாட்கள் பிர்ஷ்ஷாக இருக்கும்.
திராட்சை
திராட்சை விரைவில் கெட்டுப் போகாமல், நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமானால், பிளாஷ்டிக் பையை எடுத்து, அதனுள் பேப்பர் டவலை விரித்து, அதன் பின் திராட்சைகளைப் போட்டு வைக்க வேண்டும். முக்கியமாக திராட்சைகளை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு விலை குறைவில் உள்ளது என்று சற்று அதிகமாக வாங்கிவிட்டீர்களா? உருளைக்கிழங்குகள் விரைவில் முளைக்கட்டாமவ் இருக்க, உருளைக்கிழங்குடன் 1-2 ஆப்பிளைப் போட்டு, ஈரப்படமில்லாமத காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
கேரட்
கேரட்டுகளை வெளியே வைத்திருந்தால், அது விரைவில் சூம்பி போயிருப்பதைக் காணலாம். ஆனால் உங்கள் கேரட் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமானால், அதன் இலைகளை நீக்கிவிட்டு, டிஸ்யூ பேப்பரை கொண்டு அவற்றைச் சுற்றி ஃப்ரிட்ஜி 6 வைணுங்கள்.
பூண்டு மற்றும் வெங்காயம்
பூண்டு, வெங்காயம் ஆகியவை கெட்டுப் போகாமல் இருக்க வேண்டுமானால், அவற்றை காற்றோட்டமான பகுதியில் வைத்திருங்கள். தற்போது துளைகளைக் கொண்ட பேப்பர் பேக்குகள் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி, அதனுள் பூண்டு வெங்காயத்தை வைத்திருந்தால் பூண்டு வெங்காயம் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
தக்காளி
சில சமயங்களில் தக்காளி பார்க்க அழகாகவும், அதிகம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் எழும். ஆனால் அந்த தக்காளி நல்ல சுவையுடன் இருக்க வேண்டுமானால், அவற்றை அறை வெப்பநிலையில் தான் வைத்திருக் வேண்டும். மேலும் தக்காளியை வெளியே வைப்பதாக இருந்தால், ஒரு தட்டில், அவற்றைக் குப்புற போட்டு அடுக்கி வைக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
