Latest Updates
-
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும்
உங்க வீட்ல கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியலையா? அப்ப இந்த வழிகள் மூலம் அதை நிரந்தரமா விரட்டலாமாம்...!
வீட்டில் அலமாரிகளை திறக்கும்போது குறிப்பாக சமையலறை அலமாரிகளில் கரப்பான் பூச்சியை பார்க்கும் போது நமக்கு ஏற்படும் எரிச்சலுக்கு அளவே இருக்காது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கரப்பான் பூச்சி மனிதர்களை தொந்தரவு செய்து வருகிறது. நம் சமையலறைகளில் மறைந்திருக்கும் இந்த சிறிய அரக்கர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்ற பல மருந்துகள் உள்ளன. ஆனால் எந்த மருந்தும் கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து நிரந்தர தீர்வை அளிக்கவில்லை.
நீங்கள் சமைத்து உண்ணும் உணவு ஆரோக்கியமானதாகவும், எந்த மாசுபாடும் இல்லாததாகவும் இருப்பதை உறுதிசெய்ய சமையலறை கரப்பான் பூச்சி கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது. மேலும் கரப்பான் பூச்சிகள் பல நோய்க்கிருமிகளை சுமந்து செல்கின்றன மற்றும் அவற்றின் எச்சங்கள், இறக்கைகள் மற்றும் உமிழ்நீர் மூலம் நம் உண்ணக்கூடிய உணவுகளுக்கு நோய்களை பரப்புகின்றன. உங்கள் இல்லத்தை கரப்பான் பூச்சி இல்லாத இல்லமாக மாற்ற சில எளிய வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை
சமையலறையில் உள்ள கரப்பான் பூச்சிகளை விரட்ட சிறந்த வீட்டு வைத்தியம் பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை கலவையைப் பயன்படுத்துவதாகும். இந்த கலவையில் இருக்கும் சர்க்கரை கரப்பான் பூச்சிகளை ஈர்க்கிறது, அதே நேரத்தில் பேக்கிங் சோடா அவற்றைக் கொல்லும். இந்த கலவையை நீங்கள் கரப்பான் பூச்சிகளை பார்க்கும் இடங்களிலும், அவை மறைந்திருப்பதாக நீங்கள் சந்தேகிக்கும் இடங்களில் இந்தக் கலவையை உருண்டையாக உருட்டி வைக்கவும். விரைவில் நீங்கள் கரப்பான் பூச்சிகளின் இறந்த உடல்களைப் பார்க்கலாம்.
போரிக் ஆசிட்
கரப்பான் பூச்சிகளை கொல்லும் சிறந்த மற்றும் வேகமான வீட்டு வைத்தியம் போரிக் ஆசிட்டாகும். நீங்கள் கரப்பான் பூச்சிகளை அடிக்கடி பார்க்கும் இடத்தில் அல்லது கரப்பான் பூச்சிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகிக்கும் உங்கள் சமையலறையின் அனைத்து மூலைகளிலும் சிறிது போரிக் ஆசிட் பொடியைத் தூவவும். கரப்பான் பூச்சிகள் அதை உட்கொள்ளும் தருணத்தில், அவை நீரிழப்பு காரணமாக இறந்துவிடும். ஆனால் இந்த ஆபத்தான பொடியைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் வீட்டில் உள்ள செல்லப்பிராணிகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு அவை எட்டாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
பிரியாணி இலை
உங்கள் வீட்டை கரப்பான் பூச்சியில்லாத வீடாக மாற்றுவதில் பிரியாணி இலை முக்கியப்பங்கு வகிக்கிறது. உணவிற்கு சிறந்த மணத்தை கொடுக்கும் இந்த இலைகள் கரப்பான் பூச்சியைக் கொள்ளும் சிறந்த மருந்தாகவும் செயல்படுகின்றன. சில பிரியாணி இலைகளை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரை நீங்கள் கரப்பான் பூச்சியை அடிக்கடி பார்க்கும் இடங்களில் தெளிக்கவும், இது கரப்பான் பூச்சியை விரட்டும் சிறந்த கிருமி நாசினியாக செயல்படலாம்.
வேப்பெண்ணெய்
நீங்கள் சமையலறையிலிருந்து கரப்பான் பூச்சிகளை அகற்ற விரும்பினால், குறிப்பாக சிறிய கரப்பான் பூச்சிகளை விரட்ட விரும்பினால் வேப்ப எண்ணெயை சிறிது தண்ணீரில் கலக்கவும். உங்கள் சமையலறையின் அனைத்து மூலைகள் மற்றும் அலமாரிகளில் இந்த கரைசலை தெளிக்கலாம். இது பக்க விளைவுகள் இல்லாத ஒரு பாதுகாப்பு முறையாகும். பெரும்பாலும் இந்த கரைசலை இரவில் தெளிக்கவும், அதன்பின் நீங்கள் உங்கள் சமையலறையில் கரப்பான் பூச்சிகளை பார்க்க மாட்டீர்கள்.
சர்க்கரை மற்றும் சிலிக்கா ஏர்ஜெல்
கரப்பான் பூச்சியை விரட்டும் இந்த கலவையைத் தயாரிக்க சிலிக்கா ஏர்ஜெல் மற்றும் வெள்ளை சர்க்கரையை 3:1 என்ற விகிதத்தில் பயன்படுத்தவும். இந்த கலவையை நீங்கள் வழக்கமாக சிறிய கரப்பான் பூச்சிகளைக் காணும் மூலைகளிலோ அல்லது சமையலறை அலமாரிகளிலோ பயன்படுத்தவும். தேவைப்பட்டால், 100% பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் உங்கள் வீட்டிலிருந்து கரப்பான் பூச்சிகளை முற்றிலும் அழிக்க இந்த நடைமுறையை மீண்டும் செய்யவும்.
பெப்பர்மிண்ட் எண்ணெய்
கரப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்தும் மிகவும் சக்திவாய்ந்த அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்று பெப்பர்மிண்ட் எண்ணெய். உங்கள் வீட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடல் நீர் மற்றும் பெப்பர்மிண்ட் எண்ணெய் கலந்து தெளிக்கவும். இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது நீங்கள் நல்ல முன்னேற்றதைக் காணலாம்.



Click it and Unblock the Notifications

