Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
வீட்டில் பணம் அதிகம் சேரணுமா? அப்ப இந்த சின்ன சின்ன விஷயங்களை செய்யுங்க போதும்..!
Money Tips In Tamil: நாம் அனைவருமே பணம் சம்பாதிக்கவே அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். சில சமயங்களில் நாம் சம்பாதிக்கும் பணம் நம் கைகளில் நிற்காமல் நீர் போன்று செலவாகும்.
இப்படி வீட்டில் செல்வம் நிலைத்திருக்காமல் செலவாகிறது என்றால், வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருக்க வாய்ப்புள்ளது. ஆம், வீட்டில் வாஸ்து பிரச்சனைகள் இருந்தால், அந்த வீட்டில் செல்வம் சேராது.

எனவே தான் வீட்டில் செல்வம் அதிகம் சேர்வதற்காக வாஸ்து சாஸ்திரம் கூறும் சில விஷயங்களைப் பின்பற்றுவோம். உதாரணமாக, வாஸ்துப்படி வீட்டில் மணி பிளாண்ட் செடியை வளர்த்தால், செடி வளர்வது போன்று வீட்டில் செல்வம் பெருகும்.
இதுப்போல் சில ஜோதிட பரிகாரங்களும் வீட்டின் பணப் பிரச்சனையைப் போக்கி, நிதி நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இப்போது அந்த ஜோதிட பரிகாரங்கள் என்னவென்பதைக் காண்போம்.
* பெண்கள் லட்சுமி தேவியின் வடிவம். எனவே வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதும் மரியாதையுடன் நடத்த வேண்டும்.
* பணம் வைக்கும் லாக்கருக்கு முன் ஒருசிறிய கண்ணாடியை வைக்க வேண்டும். இப்படி வைப்பதால், அந்த லாக்கரில் பணம் அதிகம் சேரும்.
* செல்வத்தின் தெய்வமாக கருதப்படும் லட்சுமி தேவியின் போட்டோவை வீட்டின் பூஜை அறையில் வைத்து, தினமும் இரண்டு முறை பூஜை செய்ய வேண்டும்.
* சம்பாதிக்கும் பணத்தின் ஒரு சிறு பகுதியை தொடர்ந்து ஏதேனும் ஒரு நல்ல காரியத்திற்கு பயன்படுத்த வேண்டும். இப்படி செய்வதனால் லட்சுமி தேவியின் அருள் கிடைத்து, செல்வம் பெருகும்.
* தவறான வழியில் இருக்கும் பெறப்படும் பணம் எப்போதும் நீடிக்காது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
* வீட்டில் உடைந்த பாத்திரங்களைப் பயன்படுத்துவதையோ, வைத்திருப்பதையோ தவிர்த்திட வேண்டும். இல்லாவிட்டால், அது நிதி இழப்புக்கு வழிவகுக்கும்.
* வீட்டில் துளசி செடியை வளர்க்க வேண்டும் மற்றும் தினமும் துளசி செடிக்கு முன் நெய் விளக்கு ஏற்ற வேண்டும். இப்படி செய்வதனால் லட்சுமி தேவியின் அருளால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
* லட்சுமி தேவியின் ஆசியைப் பெற வெள்ளை நிற பொருட்களை எப்போதும் மற்றவர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
* ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விஷ்ணு பகவானுக்கு சங்கில் நீரை படைக்க வேண்டும். இப்படி செய்வதனால் லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவார்.
* லட்சுமி தேவியை மகிழ்விக்க தினமும் குளித்து முடித்ததும் நெற்றியில் குங்குமத்தை வைக்க வேண்டும்.
* வீட்டில் உள்ள பணப் பிரச்சனையை நீக்க ஒவ்வொரு புதன்கிழமையும் பசுவிற்கு பச்சை புல்லை சாப்பிட கொடுக்க வேண்டும்.
பணத்தை ஈர்ப்பதற்கான வாஸ்து டிப்ஸ்கள்
* வீட்டில் பணம் வைக்கும் லாக்கரை தென்மேற்கு பகுதியில் வைக்க வேண்டும்.
* வீட்டில் பணம் மற்றும் நகைகளை வைக்க ஏற்ற சிறந்த இடம் வடக்கு திசை ஆகும்.
* வாஸ்துப்படி வடக்கு திசை குபேர மூலையாகும். இந்த திசையில் பணம் மற்றும் நகைகளை சேமித்து வந்தால், வீட்டில் எப்போதும் பணம் நிலைத்திருக்கும்.
திடீர் செல்வத்தை ஈர்க்கும் பரிகாரங்கள்
யாருக்கு தான் பணத்தையும், செல்வத்தையும் ஈர்க்க வேண்டுமென்ற ஆசை இருக்காது. நீங்கள் உங்கள் வாழ்வில் பணத்தை ஈர்க்க விரும்பினால், பின்வரும் பரிகாரங்கள் உதவி புரியும்.
* வீட்டில் நீர்க்கசிவு ஏற்பட்டால், அதை உடனே சரிசெய்ய வேண்டும்.
* வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* வீட்டின் வடக்கு திசையில் மீன் தொட்டியை வைக்க வேண்டும்.
* வீட்டில் குபேர யந்திரத்தை வைக்க வேண்டும்.
* வீட்டில் சிரிக்கும் புத்தர் சிலையை வைக்கவும்.
* வீட்டை சிவப்பு, ஊதா மற்றும் பச்சை நிறங்களால் அலங்கரியுங்கள். ஏனெனில் அந்த நிறங்கள் பணத்தை ஈர்க்கும்.
* வீட்டில் மணி பிளாண்ட் செடியை வளர்த்து வாருங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் வீட்டில் உள்ள பணப் பிரச்சனையைப் போக்கி, வீட்டில் செல்வத்தை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும். எனவே உங்கள் வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமென்று விரும்பினால், இவற்றைப் பின்பற்றி நன்மை பெறுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications