Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Year Ender 2025: 2025-ல் உடல் எடையைக் குறைக்க அதிக மக்களால் பின்பற்றப்பட்ட டாப் 5 டயட்டுகள்!
Year Ender 2025: ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும் நாம் அனைவரும் இந்த புதிய ஆண்டில் உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக இருப்பேன் என்ற ஒரு உறுதியாக வாக்குறுதியை எடுத்திருப்போம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிலும் மக்கள் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும், உடல் எடையைக் குறைக்கவும் ஏராளமான டயட்டுகளை பின்பற்றி வந்தனர்.
மேலும் அந்த டயட்டுகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டும் வந்தது. அப்படி ஏராளமான மக்களால் 2025 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட்டு வந்த டயட்டுகள் சிலருக்கு நல்ல பலனை அளித்தாலும், சிலருக்கு எதிர்பார்த்த பலனைத் தராமல் இருக்கலாம்.

தற்போது 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் மக்களால் அதிகம் பின்பற்றப்பட்ட மிகவும் பிரபலமான டாப் 5 டயட்டுகள் என்னவென்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. தாவர அடிப்படையிலான டயட்
2025 ஆம் ஆண்டில் மக்களிடையே உடல் ஆரோக்கியத்தின் மீதாக அக்கறை அதிகரித்துள்ளது. இதனால் 2025 ஆம் ஆண்டில் தாவர அடிப்படையிலான டயட் வேகமாக வளர்ந்து வரும் டயட்டுகளில் ஒன்றாக உள்ளது. இந்த டயட்டில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவை அதிகம் உணவில் சேர்க்கப்படுகிறது. இந்த வகை டயட்டில் கொழுப்பு நிறைய விலங்கு உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தவிர்க்கப்படுகின்றன. இதனால் இந்த தாவர அடிப்படையிலான டயட் வேகமாக உடல் எடையைக் குறைக்க ஊக்குவிப்பதோடு, செரிமானத்தை மேம்படுத்துகிறது, சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
2. இடைவிடாத உண்ணாவிரதம் (Intermittent Fasting)
2025 ஆம் ஆண்டில் மக்களால் அதிகம் பின்பற்றப்பட்ட மற்றொரு டயட் தான் இடைவிடாத உண்ணாவிரதம் (Intermittent Fasting). இது அதன் எளிமை மற்றும் செயல்திறன் காரணமாக 2025 ஆம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்தியது. 16:8 மற்றும் 14:10 போன்ற பிரபலமான முறைகள், குறிப்பிட்ட நேர வரம்புகளுக்குள் உணவு அளவில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சாப்பிடுவதில் கவனம் செலுத்துகின்றன. இந்த டயட்டில் சத்தான உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் போது, அது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.
3. உயர் புரோட்டீன் டயட்
2025-ல் உடல் எடையைக் குறைக்க மற்றும் ஃபிட்டாக இருக்க விரும்புபவர்களால் அதிகம் மேற்கொள்ளப்பட்ட பிரபலமான ஒரு டயட் தான் அதிக புரோட்டீன் டயட். இந்த டயட்டில் உயர்தரமான புரோட்டீன் நிறைந்த உணவுகளான பருப்பு வகைகள், முட்டை, பால், மீன், டோஃபு மற்றும் தோல் நீக்கிய இறைச்சிகள் போன்றவைற்றை தேர்ந்தெடுத்து உண்பதோடு, கார்போஹைட்ரேட்டுகளை குறைவாக எடுப்பதால், இந்த டயட் எடை இழப்பு ஆர்வலர்கள் முதல் ஜிம் குழுக்கள் வரை அனைவரிடமும் பிரபலமடைந்தன.
4. குடல் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட டயட்
2025 ஆம் ஆண்டில் செரிமான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஏராளமானோர் குடல் ஆரோக்கியத்தை மையமாக கொண்ட டயட்டை மேற்கொண்டனர். இந்த வகை டயட்டில் புளித்த உணவுகள், நார்ச்சத்துள்ள உணவுகளான பழங்கள் காய்கறிகள், புரோபயோடிக்குகள் மற்றும் ப்ரீபயோடிக்குகள் போன்றவை அடங்கும். இந்த டயட்டானது செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு சக்தியுடன், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
5. மத்திய தரைக்கடல் மற்றும் DASH டயட்டுகள்
2025 ஆம் ஆண்டில் மிகவும் நம்பகமான மற்றும் பிரபலமான உணவு முறைகளில் ஒன்றாக மத்திய தரைக்கடல் மற்றும் DASH டயட்டுகள் திகழ்கின்றன. இந்த இரண்டு டயட்டுகளுமே முழு உணவுகளான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ், விதைகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றன. மேலும் இந்த டயட்டின் போது பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் அதிகப்படியான உப்பைக் கட்டுப்படுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications