Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
உங்க கால்களில் இப்படி இருக்கா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. எச்சரிக்கும் நரம்பியல் நிபுணர்!
World Thrombosis Day 2025: இந்தியாவில் மிகவும் பொதுவாக பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படும் ஒரு நிலை தான் DVT/Deep Vein Thrombosis என்னும் ஆழமான சிறை இரத்த உறைவு. இந்த நிலை ஆழமான நரம்புகளில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக ஏற்படும். பெரும்பாலும் இது கால் நரம்புகளில் தான் ஏற்படும். இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களின் கால்களில் ஏதோ சிவப்பு நிறத்தில் பூராண் இருப்பது போன்று காணப்படும்.
இந்த பிரச்சனையை கொண்டவர்கள் கடுமையான வலியையும், வேதனையையும் சந்திப்பார்கள். இந்த இரத்த உறைவு குறித்த கொடிய நோய்க்கு எதிரான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13 ஆம் தேதி உலக த்ரோம்போசிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இன்று உலக த்ரோம்போசிஸ் தினம் என்பதால், நிறைய மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் DVT குறித்த பல முக்கிய விஷயங்களை திருச்சி காவேரி மருத்துவமனையின் பிரபல வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அருணகிரி விருத்தகிரி இணையதள பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். அதில் அவர் கூறியதாவது:
DVT/Deep Vein Thrombosis என்றால் என்ன?
"Deep Vein Thrombosis என்றால் ஆழமான சிறை/நரம்புகளில் ஏற்படுகின்ற இரத்த உறைவு நோய். இதை எப்படி அறிவது என்றால், திடீரென்று ஒரு கால் மட்டும் வலி இருக்கு, ஒரு கால் மட்டும் வீங்குகிறது என்றால், அவர்களுக்கு இந்த ஆழமான சிறை இரத்த உறைவு நோய் இருக்கலாம்" என்று டாக்டர் கூறினார்.
அறிகுறிகள்
ஒருவருக்கு ஆழமான சிறை இரத்த உறைவு (DVT) இருந்தால் பின்வரும் அறிகுறிகள் தெரியும். அவையாவன:
* வீக்கம்
* கடுமையான வலி
* பாதிக்கப்பட்ட பகுதி சற்று வெதுவெதுப்பாக இருப்பது
* சிவந்தோ, நீல நிறத்திலோ இருப்பது
* நரம்புகள் புடைத்து தெரிவது
* மிகுந்த உடல் சோர்வு
யாருக்கெல்லாம் இந்த நோய் வர வாய்ப்புள்ளது?
இந்த ஆழமான சிறை இரத்த உறைவு பின்வரும் நிலையில் உள்ளவர்களுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அத்தகையவர்கள் பின்வருமாறு:
* படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு வரலாம்.
* பக்கவாதம்
* கோவிட்- 19 மூலம் பாதிக்கப்பட்டவர்கள்
* சிசேரியன் செய்தவர்கள்
* கருவுறுதலுக்கான சிகிச்சையை எடுப்பவர்கள்
எப்படி கண்டுபிடிப்பது?
"ஆழமான சிறை இரத்த உறைவு நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களின் கால்களில் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கத்தின் போது டாப்புலர் என்னும் ஒரு ஸ்கேன் செய்தால் உறுதியாக தெரிந்து கொள்ளலாம்" என்று டாக்டர் கூறினார்.
சிகிச்சைகள் என்ன?
"ஆழமான சிறை இரத்த உறைவு நோயால் பாதிக்கப்படும் பொரும்பாலான நோயாளிகளுக்கு இரத்த உறைவு எதிர்ப்பு ஊசி (Anti-coagulant Injection) மருந்துகள் போதுமானது என்றும், 10-15% நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தலையீடு தேவைப்படலாம்" என்றும் டாக்டர் கூறினார்.
தடுப்பது எப்படி?
* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
* சுறுசுறுப்பாக நடக்க வேண்டும்.
* அறுவை சிகிச்சை முடிந்திருந்தாலும், கால்களை அசைத்துக் கொண்டே இருக்க வேண்டும். சிகிச்சைக்கு பின் சீக்கிரம் எழுந்து நடக்க வேண்டும் என்றும் டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! உங்களின் கால்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தெரிந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகி, உடனே சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











