Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? அப்ப ஆபத்தான கல்லீரல் நோய் வரலாமாம்... அத தடுக்க என்ன செய்யணும் தெரியுமா?
World Liver Day 2023: உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இதன் செயல்பாடு தடைப்படும்போது, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். கல்லீரல் உணவை வளர்சிதைமாற்றம் செய்து நச்சுக்களை நீக்க உதவுகிறது. இருப்பினும், உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், கல்லீரல் தொடர்பான நோய்கள் உருவாகும் அபாயம் உங்களுக்கு அதிகமாக இருக்கலாம்.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 19ஆம் தேதி உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், நோய்கள் வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றியும் விழிப்புணர்வு நிகழச்சிகள் நடைபெறும். உலக கல்லீரல் தினத்தன்று, உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், கல்லீரல் தொடர்பான நோய்களை உருவாக்கும் அபாயத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

நாளுக்கு நாள் கல்லீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கல்லீரல் நோய் ஏற்படுவதற்கு நீரிழிவு நோய் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. ஒரு ஆய்வின்படி, டைப் 2 நீரிழிவு நோயாளிகள் கல்லீரல் தொடர்பான நோய்களான ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD- Non-alcoholic fatty liver disease) மற்றும் ஆல்கஹால் அல்லாத ஸ்டீட்டோஹெபடைடிஸ் (NASH) போன்றவற்றை உருவாக்கும் அதிக ஆபத்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
காரணங்கள் என்ன?
நீரிழிவு நோயாளிகளுக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன. முதன்மைக் காரணம் இன்சுலின் எதிர்ப்பு. இது வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பொதுவான ஒரு நிலை. இன்சுலின் எதிர்ப்பின் மூலம் கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் உருவாகலாம்.
வகை 2 நீரிழிவு நோயாளிகளில் 75% வரை ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகிறது. உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை ஆகியவை கல்லீரல் தொடர்பான நோய்களுக்கான கூடுதல் ஆபத்து காரணிகள். அவற்றை தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
எடையை நிர்வகித்தல்
உடல் எடையை சரியாக நிர்வகிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில், அதிகரித்த உடல் பருமன் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உங்களுக்கு உடல் பருமன் அல்லது எடை அதிகமாக இருந்தால், அதை குறைக்க தீவிரமாக முயற்சி செய்யுங்கள். உடல் எடையைக் குறைப்பது கல்லீரலில் கொழுப்பு திரட்சியைக் குறைக்கவும் கல்லீரல் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
உடற்பயிற்சி செய்யுங்கள்
தினமும் உடற்பயிற்சி செய்வது, எடை மற்றும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். வழக்கமான உடல் செயல்பாடு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், கல்லீரல் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். ஆதலால், தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
ஆரோக்கியமான உணவைப் பராமரித்தல்
நீங்கள் உட்கொள்ளும் உணவு உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஒல்லியான புரதம் அதிகம் உள்ள சமச்சீரான உணவை உட்கொண்டால் கல்லீரல் தொடர்பான கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்ற வேண்டும்.
இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும்
உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் இரத்த சர்க்கரையின் அளவை கண்காணிக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் உங்கள் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். மேலும், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பது கல்லீரல் கோளாறுகளை உருவாக்கும் அபாயத்தை குறைக்க உதவும்.
ஆல்கஹால் அருந்துதல்
மது அருந்துவது உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் வெகுவாக பாதிக்கும். ஆதலால், உங்கள் ஆல்கஹால் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள். மேலும், மது அருந்துவது கல்லீரல் கோளாறுகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், அது மோசமான உடல்நிலை பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
தீவிர நிகழ்வுகளுக்கான நடவடிக்கைகள்
மிகவும் ஆபத்தான சுகாதார நிலைமைகளில், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். தேவைப்பட்டால், கல்லீரல் மாற்று அறுவை சிகிசிச்சையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். நீரிழிவு நோயாளிகள் கல்லீரல் தொடர்பான நோய்களை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர். இருப்பினும், அவர்களின் ஆபத்தை குறைக்க அவர்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன.
நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிக அவசியம். ஏனெனில் சிகிச்சையை விட தடுப்பு சிறந்தது. கல்லீரல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யலாம். பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













