Latest Updates
-
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ள பெண் மனைவியாக கிடைத்த ஆண்கள் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாம் -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம் -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம் -
முகம் கருப்பா இருக்கா? பலாப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. வெள்ளையாவீங்க..
செரிமான மண்டலம் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த 6 பழக்கங்களை தினமும் வெச்சுக்கோங்க...
World Digestive Health Day 2023: மனித உடலில் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. செரிமான மண்டலமானது வாய், தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, சிறு குடல், பெருங்குடல், மலக்குடல் ஆகியவை அடங்கியதாகும்.
நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் செரிமான மண்டலத்தில் ஜீரணிக்கப்பட்டு, சத்துக்களானது உடலால் உறிஞ்சப்படுகிறது. செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், அது உடலை பலவாறு பாதிக்கும்.

நமது குடலில் மட்டும் சுமார் 39 ட்ரில்லியன் நுண்ணுயிர்கள் உயிர் வாழ்கின்றன மற்றும் இவை உடலில் பல அத்தியாவசிய பணிகளில் முக்கிய பங்கை வகிக்கின்றன. குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையில் இடையூறு ஏற்பட்டால், அது இரைப்பை உணவுக்குழாய் நோய், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, லாக்டோஸ் சகிப்புத்தன்மை முதல் மலச்சிக்கல் வரை பல செரிமான மண்டல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஒவ்வொரு ஆண்டும் மே 29 ஆம் தேதி உலக செரிமான ஆரோக்கிய தினமானது மக்களிடையே செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எந்த மாதிரியான பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும், எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும் மற்றும் செரிமான கோளாறுகளின் அறிகுறிகள் போன்றவற்றைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதால், இப்போது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய சில பழக்கங்கள் குறித்து காண்போம்.
ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும்
தினமும் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் புரோபயோடிக்குகளும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், தோல் நீக்கப்பட்ட இறைச்சி மற்றும் தயிர் போன்ற உணவுகளை அதிகம் உணவில் சேர்ப்பதன் மூலம் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
போதுமான அளவு நீர் அருந்தவும்
செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டுமானால், தினமும் போதுமான அளவு நீரைக் குறைக்க வேண்டும். இதனால் செரிமான மண்டலத்தால் திறம்பட செயல்பட முடியும். அதற்கு தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு செய்யுமாறான வேலைகளில் ஈடுபடுபவரானால், இன்னும் அதிகமாக நீரை அருந்த வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி செய்யவும்
உடற்பயிற்சியானது தசைகளை வலுவாகக்க உதவுவதோடு மட்டுமின்றி, குடல் தசைகளின் செயல்பாட்டையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. எனவே உங்களின் செரிமான மண்டலத்தின் செயல்பாடு எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், தினமும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இந்த உடற்பயிற்சியானது வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் அல்லது நீச்சல் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்
ஒருவரது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மன அழுத்தத்தினாலும் பாதிக்கப்படும் என்பது தெரியுமா? ஆம், மன அழுத்தம் கொள்ளும் போது குடல் பாக்டீரியாக்களின் சமநிலையில் இடையூறு ஏற்பட்டு, குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே இதைத் தவிர்க்க தினமும் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
இஞ்சி டீ
நீங்கள் பிரியர் என்றால், உணவு உண்பதற்கு முன் அல்லது நிறைய உணவு உண்ட பின் ஒரு டம்ளர் இஞ்சி டீ குடித்தால், அது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நெஞ்செரிச்சல், வயிற்று வலி மற்றும் அஜீரண கோளாறு போன்றவற்றைத் தடுக்கும். எப்படியெனில் இஞ்சியானது எச்சில் உற்பத்தி, பித்த நீர் மற்றும் செரிமான அமிலத்தின் உற்பத்தியை தூண்டி, உண்ணும் உணவுகளை எளிதில் உடைதெறியச் செய்கின்றன. எனவே செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க இஞ்சி டீ குடிப்பது நல்லது.
சோம்பு
சோம்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளன. மேலும் சோம்பு மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் வாயு தொல்லையில் இருந்தும் விடுவிக்கிறது. ஆகவே நீங்கள் வயிறு நிறைய உணவு உட்கொண்டு அவதிப்பட்டால், சிறிது சோம்பை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் செரிமான செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுவதோடு, வாய் துர்நாற்றமும் தடுக்கப்பட்டு, வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications