Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
90% மக்களின் மனதில் உள்ள ஆஸ்துமா குறித்த கேள்விகளுக்கான விடைகள்!
World Asthma Day 2023: உலகில் எப்படி சர்க்கரை நோய், இரத்த அழுத்தத்தால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளார்களோ, அதேப் போல் ஆஸ்துமா பிரச்சனையாலும் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 30 மில்லியன் ஆஸ்துமா நோயாளிகள் உள்ளனர்.
மேலும் ஆஸ்துமாவால் நிறைய பேர் பாதிக்கப்பட்டும் வருகிறார்கள். அதுவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வரும் முதல் செவ்வாய் கிழமை உலக ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மே 2 ஆம் தேதி உலக ஆஸ்துமா தினம் என்பதால், ஆஸ்துமா குறித்து 90 சதவீத மக்களின் மனதில் உள்ள கேள்விகளுக்கான விடைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
ஆஸ்துமா என்றால் என்ன?
ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட நுரையீரல் அழற்சி நோய். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சுவாசக்குழாய்கள் எரிச்சலடைந்து, குறுகியோ அல்லது சுவாசிப்பதில் தடையை ஏற்படுத்தும் போது, நிலைமை மோசமாக இருக்கும். ஆஸ்துமாவால் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் நுரையீரல் மற்றும் சுவாசக்குழாய்கள் மிகவும் சென்சிடிவ்வாக இருப்பது தான்.
ஆஸ்துமாவின் அறிகுறிகள்
ஆஸ்துமா பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இருமல், மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் நெஞ்சுப் பகுதியில் இறுக்கம் போன்ற அறிகுறிகளை சந்திக்க நேரிடும். ஆஸ்துமாவின் அறிகுறிகளை ஒருவர் சந்தித்தால், அதைப் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
ஆஸ்துமா எதனால் ஏற்படுகிறது?
ஆஸ்துமா ஒருவருக்கு எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் ஆஸ்துமா வருவதற்கு பல காரணிகள் உள்ளன. உதாரணமாக தற்போதைய மார்டன் வாழ்க்கை முறைகளான உணவு முறையும், வீட்டு வசதியும். மேலும் கர்ப்ப காலத்தில் புகைப்பிடிப்பது வயிற்றில் வளருஙம குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. டிராபிக் மாசுபாடு ஆஸ்துமாவை உண்டாக்கும் என்பதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை. ஆனால் மோசமான காற்றின் தரம் ஆஸ்துமா பிரச்சனையை மேலும் மோசமாக்கும்.
ஆஸ்துமா அறிகுறிகளை எவை தூண்டுகின்றன?
குளிர்ந்த காற்று, சிகரெட் புகை, மகரந்தம், விலங்குகளின் உரோமம், வீட்டில் உள்ள தூசிகள், கடுமையான உடற்பயிற்சி, அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவது போன்றவை சுவாசக்குழாய்களில் எரிச்சலூட்டி, சுவாசக்குழாய்களில் அழற்சியை ஏற்படுத்தி, வீக்கத்தை உண்டாக்கி காற்று செல்லும் சுவாசப் பாதையை சுருங்கச் செய்கின்றன. ஆனால் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்களால் வரலாம்.
ஆஸ்துமாவை குணப்படுத்த முடியுமா?
ஆஸ்துமாவை முழுமையாக குணப்படுத்த முடியாது. இருப்பினும், ஆஸ்துமாவை சரியான சிகிச்சையின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைப் பயப்டுத்துவதன் மூலம் அதன் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம். இது தவிர மூச்சுப் பயிற்சிகளை செய்வது, சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ்வது போன்றவற்றால் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
புகைப்பிடிப்பது ஆஸ்துமாவை மோசமாக்குமா?
ஆம், ஆஸ்துமாயால் பாதிக்கப்பட்டவர்கள் புகைப்பிடித்தால், ஆஸ்துமா அறிகுறிகள் இன்னும் மோசமாவதோடு, அதைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். மேலும் இது நுரையீரலில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி புகைப்பிடிப்போரின் அருகில் இருந்தாலும், ஆஸ்துமா பிரச்சனை தீவிரமாகும். புகைப்பிடிப்பது ஆஸ்துமாவை மோசமாக்குவது மட்டுமின்றி, பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தை உ.ருவாக்கும் வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
ஆஸ்துமா இருந்தால் உடற்பயிற்சி செய்யலாமா?
ஆஸ்துமா இருப்பவர்கள், அதை நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், மிதமான அளவில் உடற்பயிற்சிகளை செய்யலாம். அதுவும் யோகா போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது நன்மை பயக்கும். ஒருவேளை உங்கள் ஆஸ்துமாவை தீவிரமாக்குவது போன்ற உடற்பயிற்சிகளை கண்டால், அவற்றைத் தவிர்த்திடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications