Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
நீங்க ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ குடிக்கிறீங்க? இத்தனை கப் மேல குடிக்கிறது ரொம்ப ஆபத்தாம்...!
Side Effects of Tea: தேநீர் உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் விரும்பி குடிக்கப்படும் ஒரு பானமாகும். இது பொதுவாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. தேநீர் உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் அளவிற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறதா என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா?
மிதமான அளவு தேநீர் நன்மை பயக்கும் என்று கூறப்பட்டாலும், இந்த வலிமைமிக்க பானத்தை அதிகமாக உட்கொள்வது மனித உடலில் சில ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். தேநீரில் காணப்படும் டானின்கள் சில ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதை பாதிக்கலாம்.

அதுமட்டுமின்றி கவலை, தூக்கம் பிரச்சனைகள் மற்றும் தலைவலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதிகப்படியான டீயை உட்கொள்வதால் ஏற்படும் சில பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் கூறப்பட்டுள்ளன. எனவே அதன் நுகர்வு குறைவாக இருக்க வேண்டும்.
தேநீர் இரும்புசத்து உறிஞ்சுதலைக் குறைக்கிறது
தேநீர் இரும்பு உறிஞ்சுதலைக் குறைக்கிறது, தேநீரின் மிகவும் விவாதிக்கப்பட்ட பக்க விளைவுகளில் இது மிகவும் முக்கியமானவை. ஃபுட் ரிசர்ச் இன்டர்நேடினல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தேநீர் டானின்கள் எனப்படும் சேர்மங்களின் வளமான மூலமாகும், இது ஹீம் அல்லாத இரும்புடன் பிணைக்கிறது மற்றும் உங்கள் செரிமானப் பாதையில் இரும்பு உறிஞ்சுதலை பாதிக்கிறது.
இந்த இரும்புச்சத்து நிறைந்த சில உணவுகள் கீரை, பருப்புகள் மற்றும் பீன்ஸ். இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு வழிவகுக்கும், இது ஒரு தீவிர பிரச்சனையாகும்.
தூக்கத்தைப் பாதிக்கும்
தேநீரில் இயற்கையாகவே காஃபின் இருப்பதால், அதை அதிகமாக உட்கொள்வது உங்கள் தூக்க-விழிப்பு சுழற்சியை சீர்குலைக்கும். பல்வேறு ஆய்வுகள் காஃபின் மெலடோனின் உற்பத்தியைத் தடுக்கும் என்று சித்தரிக்கிறது, இதன் விளைவாக மோசமான தூக்கம் ஏற்படுகிறது.
மெலடோனின் என்பது உங்கள் மூளைக்கு உறக்கத்தை உணர்த்தும் ஒரு ஹார்மோன் ஆகும். போதுமான தூக்கமின்மை பல்வேறு மன மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே ஒரு நாளைக்கு 2-3 கப் தேநீர் மட்டுமே உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ்
அதிகப்படியான காஃபின் நெஞ்செரிச்சல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். காஃபின் வயிற்றில் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன, இது அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றதல்ல
அதிக அளவு காஃபின் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்களை அதிகரிக்கும், இது கருச்சிதைவு முதல் குறைந்த எடை வரை பல சிக்கலான ஆபத்துகளை ஏற்படுத்தும். இருப்பினும், இதைப் பற்றிய கூடுதல் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி தேவை.
உங்கள் தினசரி காஃபின் உட்கொள்ளலை 200-300 மி.கிக்குக் குறைவாக வைத்திருந்தால், இந்த சிக்கல்களின் ஆபத்து ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாக பெரும்பாலான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
உடலில் உள்ள நச்சுக்களை அதிகரிக்கிறது
ஜர்னல் ஆஃப் டாக்ஸிகாலஜியில் வெளியான ஒரு ஆய்வின்படி, தேநீர் எவ்வளவு அதிகமாக காய்ச்சப்படுகிறதோ, அவ்வளவு தீங்கு விளைவிக்கும்.
டீயை 3-15 நிமிடங்களில் காய்ச்சும்போது, ஒரு கோப்பை தேநீரில் ஈயம் மற்றும் அலுமினியத்தின் அளவு அதிகரிக்கிறது, இது இது மேலும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
