வெறும் வெங்காயத் தோல் உங்க ஆரோக்கியத்திற்கு என்னென்ன நன்மைகளை வழங்கும் தெரியுமா?

வெங்காயத்தை நாம் பொதுவாக சமையலில் அதிகமாக பயன்படுத்துவது உண்டு. ஆனால் அதன் வெங்காயத் தோலை குப்பையில் வீசி விடுகிறோம். ஆனால் உண்மையில் வெங்காயத் தோலில் கூட நிறைய நன்மைகள் இருக்கிறது.

இனி வீணாகப் போகும் வெங்காயத் தோலை ஒரு போதும் கீழே போடாதீர்கள். ஏனெனில் வெங்காயத் தோலில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இந்த வெங்காயத் தோலின் வெளிப்புற அடுக்குகளில் ஃபிளவனாய்டுகள், குவெர்செடின் போன்ற தாவர கலவைகள் காணப்படுகிறது. இதில வைட்டமின் ஈ, பிபி, வைட்டமின் சி, கரோட்டீன்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது.

What is the benefits of onion peel In Tamil

இதிலுள்ள குர்செடின் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்றவை இதில் காணப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. எல். டி. எல் போன்ற கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது. ஒவ்வாமையை எதிர்த்து போராட உதவுகிறது. மனச்சோர்வை எதிர்த்து போராட உதவுகிறது.

இது தசை வளர்ச்சியை அதிகரிக்கிறது. இது புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. சரி வாங்க வெறும் வெங்காயத் தோலைக் கொண்டு எந்த மாதிரியான நன்மைகளை நாம் பெறலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

வெங்காயத் தோலின் நன்மைகள்

சமையலுக்கு பயன்படும் வெங்காயத் தோல்
வெங்காயத் தோலை நீங்கள் தயாரிக்கும் சூப்பில் போட்டு பயன்படுத்தி வரலாம். வெங்காயத் தோலை சூப்பில் போடும் போது அதில் உள்ள சத்துக்கள் சூப்பில் இறங்க வாய்ப்பு உள்ளது.

இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்தல்

வெங்காயத் தோலை ஒரு சூடான நீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இந்த தண்ணீரை குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது.

கால் பிடிப்புகள் குணமாகும்

வெங்காயத் தோலை 20 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி தினமும் படுக்க போவதற்கு முன்பு இதை டீயாக குடித்து வாருங்கள். ஒரு வாரத்தில் உங்கள் கால் பிடிப்புகள் குறைந்து போய் இருக்கும்.

செய்முறை

  • 2-3 வெங்காயத் தோலை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இந்த வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு குறைந்த தீயில் 20 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்.
  • பிறகு அந்த சாற்றை வடிகட்டி கொள்ளுங்கள். அதில் சிவப்பு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இப்பொழுது இந்த கரைசலை தலையின் வேர்க்கால்களில் படும் படி தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள்.
  • இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை என திரும்ப திரும்ப செய்து வாருங்கள்.
  • உங்கள் கூந்தல் வளர்ச்சி மேம்படுவதை நீங்கள் கண்கூடாக காணலாம்.

மாதவிடாய் சுழற்சி

வெங்காயத் தோல் உங்கள் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இந்த சிகிச்சையை உங்களுக்கு மாதவிடாய் வந்த பின் 10 நாட்களுக்கு பிறகு தொடங்க வேண்டும்.

  • 300 மி. லி அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் கொஞ்சம் வெங்காயத் தோலை சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • 20 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து பிறகு அதனுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
  • ஒரு நாளைக்கு 3 முறை என ஒரு வாரத்திற்கு குடித்து வர வேண்டும்.

நல்ல தூக்கம் தர உதவுகிறது

இரவில் நீங்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றால் அதற்கு இந்த வெங்காயத் தோல் டீ உங்களுக்கு உதவி செய்யும். வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். 15 நிமிடங்கள் ஊற விடுங்கள். பிறகு அதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து குடித்து வாருங்கள். நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.

உங்கள் முடிக்கு நிறத்தை அளிக்கிறது

வெங்காயத் தோல் உங்கள் கூந்தலுக்கு இயற்கையாகவே ப்ரவுன் மற்றும் பொன்னிறத்தை கொடுக்க கூடியது. ஒரு பெளலில் நீரை எடுத்து அதில் வெங்காயத் தோலை போட்டு 30 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி உச்சந்தலையில் படும்படி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு ஷாம்பு கொண்டு அலசுங்கள். இப்பொழுது உங்கள் கூந்தல் கோல்டன் பிரவுன் நிறத்தில் ஜொலிக்கும்.

கொசுக்கள் மற்றும் ஈக்கள் உங்களை அண்டாது

வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு கொசுக்கள் மற்றும் ஈக்கள் வரும் ஜன்னல் பகுதிகளில் வைத்து விடுங்கள். வெங்காயத் தோலின் பூஞ்சை வாசனை காரணமாக கொசுக்கள் மற்றும் ஈக்கள் போன்றவை பக்கத்தில் வராது.

பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்க உதவுகிறது

  • ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் எடுத்து அதில் பாதியளவுக்கு வெங்காயத் தோலை போட்டுக் கொள்ளுங்கள்.
  • இப்பொழுது அந்த தண்ணீரை 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து பிறகு மூடி போட்டு மூடி விடுங்கள்.
  • பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் கிளிசரால் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி வரும் போது பொடுகுத் தொல்லை நீங்க வழி வகுக்கிறது.
  • வெரிகோஸ் வீனுக்கு சிகிச்சை அளிக்கிறது :
  • அறிவியல் பூர்வமாக வெங்காயத் தோல் வெரிகோஸ் வீனுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
  • 100 மி. லி வோட்கா எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதில் 2 டேபிள் ஸ்பூன் நசுக்கிய வெங்காயத் தோலை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு வாரம் வரை நன்றாக ஊற விடுங்கள். இந்த கலவை ஒரு நல்ல டின்சராக செயல்படுகிறது.
  • இதிலிருந்து 20 சொட்டுகளை நீங்கள் டானிக்காக எடுத்துக் கொண்டு வரலாம். ஒரு நாளைக்கு 2-3 முறை என 10 நாட்களுக்கு எடுத்துக் கொண்டு வாருங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Saturday, August 12, 2023, 21:30 [IST]
Desktop Bottom Promotion