Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
டிங்கா டிங்கா வைரஸ்: பெண்கள் மற்றும் குழந்தைகளை மட்டும் தாக்கும் இந்த வைரஸின் அறிகுறிகள் என்ன தெரியுமா?
கொரோனா அல்லது கோவிட்-19 என அழைக்கப்படும் வைரஸ் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்பு பெருமளவில் பாதிக்கப்பட்டது. பெரும்பாலானோர் அவர்களின் பெற்றோர், கணவன், மனைவி, மற்றும் குழந்தைகள் என பலரை இழந்த துயரமும் நடந்தது. ஏன் பல மருத்துவர்களும் கூட கொரோனாவிற்கு பலியாகினார்கள். கொரானாவை தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான வைரஸ் தொற்றுகள் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் பெண்கள் மற்றும் சிறுமிகளை தாக்கும் புதிய வைரஸ் ஒன்று உகாண்டாவில் பரவி வருகிறது. அதைப் பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உகாண்டாவில் உள்ள பூண்டிபுக்யோ மாவட்டத்தில் சுமார் 300-க்கும் அதிகமானவர்கள் "டிங்கா டிங்கா" என அவர்கள் நாட்டில் குறிப்பிடப்படும் மர்ம நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரபல செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ், பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து தாக்குகிறது. அதிகப்படியான உடல் நடுக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற சிக்கல்கள் இவற்றின் முதன்மையான அறிகுறிகளாக உள்ளன. இது உடல் இயக்கத்தையும் கடுமையாக பாதிக்கிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் இந்த நோயை சமூக சுகாதார குழுக்களால் வழங்கப்படும் ஆன்டிபையோடிக்ஸ்(நுண்ணுயிர் எதிர்ப்பிகள்) கொண்டு 1518 ஆம் ஆண்டு பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க்கில் "டான்சிங் பிளேக்" உடன் மருத்துவர்கள் ஒப்பிடுகிறார்கள், அங்கு மக்கள் கட்டுப்பாடில்லாமல் பல நாட்கள் நடனமாடினர், சில சமயங்களில் சோர்வு தொடர்பான இறப்புகளுக்கு வழிவகுத்தது.சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த உயிர் இழப்பும் ஏற்படவில்லை என ஆய்வுகள் கூறுகிறது.
மேலும் அவர் "இந்த வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் மூலிகை மருத்துவம் நல்ல பலன் தரும் என்பதற்கு அறிவியல் பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லை. நாங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட சிகிச்சை முறையின் மூலம் நோயாளிகள் வழக்கம் போல் ஒரு வாரத்தில் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள். உள்ளூர்வாசிகளை மாவட்டத்திற்குள்ளேயே இருக்கும் சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வலியுறுத்துகிறார்.
பூண்டிபுக்யோ மாவட்டத்திற்கு வெளியே இருக்கும் ஊர் பகுதிகளில் எந்த வழக்குகளும் கண்டறியப்பட்டதாக தகவல்கள் எதுவும் இல்லை என மருத்துவர் கூறுகிறார். இந்த வைரஸ் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சுகாதார அமைச்சகத்திடம் ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிட்டத் தக்கது.
வைரஸ் தொற்றால் ஏற்படும் இந்த நிகழ்வு பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க்கில் 1518 ஆம் ஆண்டு ஏற்பட்ட "டான்சிங் பிளேக்" என்ற வரலாற்று நிகழ்வுடன் ஒப்பிடக் கூடியதாக இருப்பதாகவும் கூறுகிறார். பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க்கில் மக்கள் கட்டுப்பாடின்றி பல நாட்கள் நடனமாட துவங்கியதாகவும், அவர்களை தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்டு நடனமாட துவங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சிலருக்கு பக்கவாதம், ஹார்ட் அட்டாக் மற்றும் தொடர்ந்து ஆடுவதால் ஏற்படும் சோர்வு இறப்புகளும் ஏற்பட்டது.
அதேசமயம், ஜனநாயக குடியரசான காங்கோவும் மர்மமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. அங்கு பன்சி சுகாதார மண்டலத்தில் குறைந்தது 400 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 394 பேர் சிகிச்சை பெறுவதாகவும், 30 பேர் அதீத பாதிப்பால் இறந்திருப்பதாகவும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது.
இதன் அறிகுறிகள் என்னவெனில் மூக்கு ஒழுகுதல், தலைவலி, இருமல், காய்ச்சல், மற்றும் உடல்வலி போன்றவை காணப்படுகின்றன. சுவாச நோய்க்கிருமிகளான கோவிட்-19, மலேரியா, தட்டம்மை அல்லது இன்ஃப்ளூயன்ஸா போன்றவை காரணமாக இருக்கலாமா என்பதை தீர்மானிக்க ஆய்வுகள் நடந்து வருகின்றது. ஆனால் நோய்க்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் ஆய்வக முடிவுகள் நிலுவையில் இருக்கின்றன.
தற்போதைய பருவநிலை மாற்றங்களால் பலரும் நோய்வாய்ப்படுவது சாதாரண ஒன்று என்றாலும், எதையும் வரும்முன் காப்பது சால சிறந்தது. வீட்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்ட தண்ணீர், வெதுவெதுப்பான உணவு வகைகளை கொடுக்கலாம். முடிந்தவரை நம்மையும் நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்வதன் மூலம் மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
