Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆண்களே! மஞ்சள் நிற விந்தணுக்கள் வெளிப்பட்டால் உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது…!
ஆரோக்கியமான விந்து பொதுவாக வெள்ளை அல்லது வெள்ளை-சாம்பல் நிறத்தில் இருக்கும்.
ஆண்களின் உச்சநிலையின் போது வெளிவரும் திரவம்தான் விந்து. இந்த விந்தணு பெண்களின் கரு முட்டையுடன் இணைவதன் மூலமே கருவுறுதல் உருவாகிறது. விந்தணுவின் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், விந்தணுக்களின் ஆரோக்கியம் பற்றி ஆண்கள் பொதுவாக யோசிக்கிறீர்களா? என்றால் அந்த எண்ணிக்கை மிக குறைவுதான். ஒரு தம்பதியினருக்கு நீண்ட காலமாக குழந்தையில்லை என்றால், பெரும்பாலும் பெண்ணிடம்தான் குறைவுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், ஆண்களின் விந்துக்களின் ஆரோக்கியம் காரணமாகவும் குழந்தை உருவாகாமல் இருக்கலாம் என யாரும் இங்கு புரிந்துகொள்வதில்லை.

ஆரோக்கியமான விந்து பொதுவாக வெள்ளை அல்லது வெள்ளை-சாம்பல் நிறத்தில் இருக்கும். சில நேரங்களில் சிவப்பு, பச்சை, பழுப்பு, இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் போன்ற அசாதாரண வண்ண விந்தணுக்கள் வெளிப்படும். வெளிப்படும் விந்தின் நிறத்தை வைத்தும் ஒரு ஆணின் ஆரோக்கியம் பற்றி அறிய முடியும் என இங்கிலாந்தின் தேசிய ஆரோக்கிய சேவை மையம் எனப்படும் என்.எச்.எஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஆதலால், விந்து நிறத்தில் மாற்றத்தைக் கண்டால் அதற்கு என்ன காரணம் என்று அறியவேண்டும். இந்த கட்டுரையில், மஞ்சள் விந்துக்கு என்ன காரணம், எதனால் ஏற்படுகிறது என்று காணலாம்.

மஞ்சள் காமாலை
பொதுவாக மஞ்சள் காமாலை என்றால், தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். இருப்பினும், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் விந்தணுக்களும் மஞ்சள் நிறத்தில் வெளிவர வாய்ப்புள்ளது. கல்லீரல் ஒழுங்காகச் செயல்படாமல் இருப்பதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. மஞ்சள் காமாலையால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தால், இறப்பு கூட நேர வாய்ப்புள்ளது.

புரோஸ்டேட் தொற்று
ஆண்களே! உங்கள் விந்து நிறம் மஞ்சள்-பச்சை நிறத்தில் தோன்றினால், அது புரோஸ்டேட் நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரில் உள்ள பாக்டீரியாக்கள் புரோஸ்டேட்டில் கசியும்போது புரோஸ்டேட் தொற்று ஏற்படுகிறது. மேகமூட்டமான சிறுநீர், கீழ் முதுகில் வலி, விந்து வெளியேறும்போது வலி ஏற்படுதல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

சிறுநீரில் விந்தணு
சிறுநீர் மற்றும் விந்தணுக்களை உடலில் இருந்து வெளியேற்றும் சிறுநீர்க்குழாய் வழியாக விந்து பயணிக்கிறது. சில நேரங்களில் சிறுநீர் கழிக்கும் போது, விந்தணுக்கள் சிறுநீரில் வெளியேறக்கூடும். மேலும் அது ஆண்குறியிலிருந்து வெளியேறும்போது விந்துடன் இணைந்திருக்கும். சிறுநீர் மற்றும் விந்து கலந்தால் அது விந்து தோற்றமளிக்கும்.

லுகோசைட்டோஸ்பெர்மியா
விந்துகளில் வெள்ளை இரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தி செய்வதால் விந்து மஞ்சள் நிறத்தில் தோன்றும். இது லுகோசைட்டோஸ்பெர்மியா என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலை விந்தணுக்களைப் பலவீனப்படுத்தி அழிக்கக்கூடும், இது கருவுறாமைக்கு மேலும் வழிவகுக்கும். லுகோசைட்டோஸ்பெர்மியா மிகவும் பொதுவானதல்ல மற்றும் 5% க்கும் குறைவான மலட்டுத்தன்மையுள்ள ஆண்களையே இது பாதிக்கிறது.

பாலியல் நோய்த்தொற்றுகள்
கிளமிடியா, ஹெர்பெஸ் அல்லது கோனோரியா போன்ற பாலியலால் பரவும் நோய்த்தொற்றுகளால் (எஸ்.டி.ஐ) விந்து மஞ்சள் நிறத்தில் வெளிவர வாய்ப்புள்ளது. பாலியலால் பரவும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

வாழ்க்கை முறை மாற்றங்கள்
ஆல்கஹால் குடிப்பது, புகையிலை மற்றும் சில மருந்துகளை உட்கொள்வது உங்களின் விந்தணுக்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக மாற்றும். வெங்காயம், பூண்டு, சீவ்ஸ் போன்ற சல்பர் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதாலும் மஞ்சள் நிற விந்து வெளியேறலாம்.

மஞ்சள் விந்தின் அறிகுறிகள்
காய்ச்சல்
வலி
பாலியல் செயல்பாட்டில் சிக்கல்கள்
சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்
தரம் குறைந்த விந்து

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்
பொதுவாக ஆண்களுக்கு பெரும்பாலான சமயங்களில், மஞ்சள் நிற விந்து வெளிப்படும். பின்னர், அது தானாகவே போய்விடும். ஒரு வாரத்திற்கு மேலாக விந்து மஞ்சள் நிறத்திலிருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

சிகிச்சை
மஞ்சள் நிற விந்துக்கான அடிப்படை காரணத்தைப் பொறுத்து சிகிச்சை தொடங்க வேண்டும். பாலியலால் பரவும் நோய்த்தொற்றுகள் அல்லது புரோஸ்டேட் தொற்று மஞ்சள் நிற விந்துக்கு காரணமாக இருந்தால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படும். லுகோசைட்டோஸ்பெர்மியா காரணமாக மஞ்சள் விந்து இருந்தால், ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

நினைவில் கொள்ள வேண்டும்
ஆண்களே, உங்கள் விந்து நிறத்தில் மாற்றத்தை நீங்கள் கண்டால், அது முதலில் ஆபத்தானதாக இருக்கலாம். ஆனால் அது தற்காலிகமாகவும் இருக்கலாம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இருப்பினும், நீங்கள் மஞ்சள் நிற விந்து வெளிப்படுவதுடன் மற்ற அறிகுறிகள் ஏதேனும் எதிர்கொண்டால், உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்.



Click it and Unblock the Notifications