Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
2021-ல் மக்களால் அதிகம் தேடப்பட்ட சில வீட்டு வைத்தியங்கள்!
2021 ஆம் ஆண்டின் இறுதி நாளில் உள்ளதால், இந்த 2021 ஆம் ஆண்டில் மக்களால் அதிகம் கூகுளில் தேடிப்பட்ட சில வீட்டு வைத்தியங்களை உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.
நாம் தற்போது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இந்த ஆண்டில் கொரோனா நம்மை தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது. அதே வேளையில் வேறு சில ஆரோக்கிய பிரச்சனைகளும் நம்மை குறிப்பிட்ட இடைவெளியில் தாக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. ஏற்கனவே கொரோனா பல உயிர்களைப் பறித்துள்ள நிலையில், பலரும் தங்கள் ஆரோக்கியத்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்கிறார்கள். நாம் அன்றாடம் அல்லது அடிக்கடி சந்திக்கும் சில ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு எடுத்த உடனேயே நாம் மருந்து மாத்திரைகளை எடுக்க விரும்புவதில்லை. மாறாக, இயற்கை வழிகளிலேயே சரிசெய்ய முயல்வோம்.

அந்த வகையில் 2021 ஆம் ஆண்டின் இறுதி நாளில் உள்ளதால், இந்த 2021 ஆம் ஆண்டில் மக்களால் அதிகம் கூகுளில் தேடிப்பட்ட சில வீட்டு வைத்தியங்களை உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். இதுவரை உங்களுக்கு இந்த சிறு பிரச்சனைகளுக்கான வீட்டு வைத்தியங்கள் தெரியாத என்றால், இனி தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் கொரோனா காலத்தில் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வீட்டு சமையலறை பொருட்கள் அதிகம் கொடுப்பதாக நம்புகின்றனர். இப்போது 2021 ஆம் ஆண்டில் கூகுளில் மக்களால் அதிகம் தேடப்பட்ட சில இயற்கை வைத்தியங்களைக் காண்போம்.

வயிற்றுப் போக்கிற்கான வீட்டு வைத்தியம்
2021 ஆம் ஆண்டில் மக்கள் வயிற்றுப் போக்கிற்கான வீட்டு வைத்தியங்களை இணையத்தில் அதிகம் தேடியுள்ளனர். வயிற்றுப்போக்கு ஒரு செரிமான பிரச்சனையாகும். இந்த வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரிசெய்வதற்கான சில சிறந்த வீட்டு வைத்தியங்கள் என்றால், அது நீரேற்றத்துடன் இருப்பது, வாழைப்பழம், தயிர் சாதம், ஆப்பிள் சாஸ் மற்றும் பிரட் டோஸ்ட் போன்றவற்றை உண்பது, கொழுப்பு நிறைந்த உணவுகள், காரமான உணவுகள், பொரித்த உணவுகள், செயற்கை சுவையூட்டிகள் போன்றவற்றைத் தவிர்ப்பது போன்றவை ஆகும்.

வயிற்று வலிக்கான வீட்டு வைத்தியம்
2021 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீட்டு வைத்தியங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது வயிற்று வலிக்கான வீட்டு வைத்தியம் ஆகும். வயிற்று வலி மிகவும் மோசமானவை. உங்களுக்கு வயிற்று வலி இருந்தால், உடனடியாக மருந்துகளை நாட வேண்டாம். . அதற்கு பதிலாக, நீங்கள் சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். வயிற்று வலியில் இருந்து நிவாரணம் பெற வேண்டுமெனில், தயிர் சாப்பிடுங்கள், பால் குடியுங்கள், காரமான உணவுகளைத் தவிர்த்திடுங்கள், இஞ்சி டீ குடியுங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள், வாய்வு உற்பத்தி செய்யும் காய்கறிகளை தவிர்த்திடுங்கள், சீமைச்சாமந்தி டீ குடியுங்கள்.

காய்ச்சலுக்கான வீட்டு வைத்தியம்
காய்ச்சலானது ஒருவரது உடல் வெப்பநிலை சாதாரண வரம்பிற்கு மேல் அதிகரிக்கும் போது ஏற்படும் நிலையாகும். இது ஒரு பொதுவான ஆரோக்கிய பிரச்சனை. அதுவும் கொரோனாவின் அறிகுறிகளுள் காய்ச்சலும் இருப்பதால், சாதாரண காய்ச்சல் வந்தால் கூட அச்சம் கொள்ள வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளோம். காய்ச்சல் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது இல்லை என்றாலும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இதற்கு உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும். காய்ச்சல் வந்தால், முதலில் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், குளிர்ச்சியான நீரில் நனைத்த துணியை நெற்றியில் வைத்து உலர வைத்து எடுக்க வேண்டும்.

பல் வலிக்கான வீட்டு வைத்தியம்
2021 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீட்டு வைத்தியங்களில் பல் வலிக்கான வீட்டு வைத்தியமும் ஒன்று. உங்களுக்க பற்களில் வலி ஏற்பட்டால் முதலில் செய்ய வேண்டியது பல் வலிக்கான மூல காரணத்தை அறிவதாகும். உங்களுக்கு பற்களில் சிறிய அசௌகரியம் இருந்தால், உப்பு நீரால் வாயைக் கொப்பளிக்கலாம், கிராம்பு, பூண்டு அல்லது கொய்யா இலைகளை வலியுள்ள இடத்தில் வைத்து கடித்துக் கொள்ளுங்கள். இருப்பினும், உங்களுக்கு கடுமையான பல் வலி இருந்தால், மருத்துவரை அணுகுங்கள்.

பைல்ஸ் பிரச்சனைக்கான வீட்டு வைத்திய உணவுகள்
பைல்ஸ் அல்லது மூல நோய் பல பிரச்சனைகளுடன் வருகிறது. இந்த பிரச்சனை இருந்தால், கூர்மையான வலி, இரத்தப்போக்கு மற்றும் குத அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்த, மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். 2021 ஆம் ஆண்டில் இந்த பைல்ஸ் பிரச்சனைக்கான வீட்டு வைத்திய உணவுகள் குறித்த மக்கள் அதிகம் கூகுளில் தேடியுள்ளனர். இந்த தேடலுக்கு பருப்பு வகைகள், முழு தானியங்கள், ப்ராக்கோலி, குடைமிளகாய், செலரி, வெள்ளரிக்காய், முலாம் பழம், பேரிக்காய், ஆப்பிள், ராஸ்ப்பெர்ரி, வாழைப்பழம் போன்ற உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கப்பட்டது.

வாய்வு பிரச்சனைக்கான வீட்டு வைத்தியம்
2021 ஆம் ஆண்டில் வயிற்று பிரச்சனைகளுக்கான வீட்டு வைத்தியம் குறித்து அதிகம் தேடப்பட்டுள்ளது. அதில் வாய்வு பிரச்சனைக்கான வீட்டு வைத்தியத்தை ஏராளமான மக்கள் தேடியுள்ளனர். உடலினுள் வாயு குமிழிகள் சேரும் போது, அது தாங்க முடியாத கடுமையான வலியை உண்டாக்கும். எனவே இப்பிரச்சனையில் இருந்து விடுபட தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், யோகா செய்ய வேண்டும், கார்போனேட்டட் இல்லாத பானங்கள், சில மூலிகைகள் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications