Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க உடல் பருமனாக இருக்கிறதா? அப்ப இந்த 13 புற்றுநோய்களில் ஒன்று உங்களுக்கு வாய்ப்பு ரொம்ப அதிகம்...!
உங்கள் உடல் பருமன் உங்களின் வெளித்தோற்றத்தை பாதிப்பதாக மட்டுமே ணெண்ங்கள் நினைக்கலாம், ஆனால் உடல் பருமன் உண்மையில் மிகவும் ஒரு தீவிரமான பிரச்சனையாகும்.
உங்கள் உடல் பருமன் உங்களின் வெளித்தோற்றத்தை பாதிப்பதாக மட்டுமே ணெண்ங்கள் நினைக்கலாம், ஆனால் உடல் பருமன் உண்மையில் மிகவும் ஒரு தீவிரமான பிரச்சனையாகும். கவனிக்கப்படாத எடை அதிகரிப்பு உங்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். அது உடனடியாக இல்லாவிட்டாலும், நீண்ட காலத்திற்கு அது உடலில் தீங்கு விளைவிக்கும், துரதிர்ஷ்டவசமாக சில சமயங்களில் அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீள்வது கடினமாகிறது.

மாரடைப்பு மற்றும் புற்றுநோய் உட்பட பல உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு உடல் பருமன் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் உலக உடல் பருமன் தினம் மார்ச் 4 ஆம் தேதி வருகிறது. இந்த வருட உடல் பருமன் தினத்தில், அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றால் என்னென்ன புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அறிந்து கொண்டு அதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முயலுங்கள்.

புற்றுநோய்களில் சுமார் 40% அதிக எடை மற்றும் உடல் பருமனுடன் தொடர்புடையது
ஆய்வுகளின் படி, உடல் பருமனாக இருப்பது பின்வரும் புற்றுநோய்களுடன் தொடர்புடையது. உணவுக்குழாயின் அடினோகார்சினோமா, மார்பக புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய், வயிற்று புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கணைய புற்றுநோய், தைராய்டு புற்றுநோய், மூளை புற்றுநோய் மல்டிபிள் மைலோமா என மொத்தம் 13 புற்றுநோய்கள் உடல் பருமனால் ஏற்பட வாய்ப்புள்ளது.

உடல் பருமன் எப்படி புற்றுநோய் வரும் ஆபத்தை அதிகரிக்கிறது?
கொழுப்பு திசுக்கள் அதிக அளவு ஈஸ்ட்ரோஜனை உருவாக்குகிறது, இது மார்பக, எண்டோமெட்ரியல் மற்றும் கருப்பையின் புற்றுநோய்களுடன் தொடர்புடையது. பருமனானவர்களுக்கு இரத்தத்தில் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணிகள் அதிக அளவு உள்ளது. ஹைப்பர் இன்சுலினீமியா எனப்படும் இந்த நிலை புற்றுநோய் அச்சுறுத்தலாகும். இது பெருங்குடல், சிறுநீரகம் மற்றும் புரோஸ்டேட்டில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். உடல் பருமன் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், டிஎன்ஏ சேதம் மற்றும் புற்றுநோய் உட்பட பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் அழற்சி நிலைகளுக்கு வழிவகுக்கிறது.

ஆபத்துக் காரணிகள்
பிறக்கும்போதே அதிக எடையுடன் இருப்பது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. வயது வந்தவுடன் எடை அதிகரிப்பது மற்றும் தொடர்ந்து எடை அதிகரித்துக் கொண்டே இருப்பது ஆகியவை எடை அதிகரிப்பதற்கான ஆபத்து காரணிகளாகும். எடை காலப்போக்கில் மாறலாம் மற்றும் சரிபார்க்கப்படாமல் இருந்தால் அல்லது மீண்டும் மீண்டும் ஏற்ற இறக்கம் ஏற்பட்டால் அது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஆரோக்கியமான BMI
ஒரு நபரின் எடை உடல் நிறை குறியீட்டெண் அல்லது பிஎம்ஐ மூலம் அளவிடப்படுகிறது. ஆரோக்கியமான பிஎம்ஐ 18.5 மற்றும் 24.9 க்கு இடையில் உள்ளது. 25க்கு மேல் உள்ள பிஎம்ஐ அதிக எடையாகவும், 30க்கு மேல் இருந்தால் உடல் பருமனாகவும் கருதப்படுகிறது. ஒருவர் இடுப்பு அளவீட்டைப் பயன்படுத்தி எடை மற்றும் ஆரோக்கியத்தையும் அளவிடலாம். ஆரோக்கியமான இடுப்பு அளவீடு ஆண்களுக்கு 40 அங்குலமாகவும், பெண்களுக்கு 35 அங்குலமாகவும் இருக்கும். பரந்த இடுப்பு உள்ளவர்களுக்கு பல நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகம்.

எடையை பராமரிப்பது எப்படி?
பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வதைக் குறைப்பது எடையைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்றாகும். கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் அடங்கிய ஒரு சீரான உணவு எடையை பராமரிக்கிறது. உடல் எடையை பராமரிக்க உடல் செயல்பாடும் முக்கியமானது. ஒரு வாரத்தில் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும், வீரியமான உடற்பயிற்சி என்றால் வாரத்தில் 75 நிமிடங்கள் செய்யலாம் என்றும் சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சுறுசுறுப்பான நடைபயிற்சி கூட எடை மேலாண்மைக்கு ஏற்றது மற்றும் பயனுள்ளதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications