30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா?

மது அருந்துபவர்களில் 10 முதல் 20 சதவிகிதத்தினர் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

மது அருந்துபவர்களில் 10 முதல் 20 சதவிகிதத்தினர் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். இதில், 30 மில்லி கிராம் என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும். சிந்திப்பது, புரிந்து கொள்வது, மதிப்பிடும் தன்மை குறைவது போன்ற பிரச்சனைகள் சங்கிலித் தொடர்போல் வந்துகொண்டே இருக்கும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு அடிமையாகிவிடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும்கூட குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. சிலர் அதற்கு தீவிரமாக முயற்சி செய்வார்கள்.

what-happens-to-your-body-when-you-quit-alcohol-for-30-days

2020 புத்தாண்டில் பலர் "இனிமேல் நான் சத்தியாமாக குடிக்க மாட்டேன்" என உறுதிமொழி எடுத்து இருப்பீர்கள். அல்லது ஒரு மாதம் "30 நாட்கள் நான் மது அருந்தாமல் இருக்க போகிறேன்" என்று கூட உறுதி மொழி எடுத்து இருப்பீர்கள். மது அருந்துவது உடல் நலத்திற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. உடல்நலத்தை கருத்தில் கொண்ட சிலர் ஒரு 30 நாட்களுக்கு மது அருந்தாமல் இருந்தால், அது அவர்களது உடலில் என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என யாருக்காவது தெரியுமா? அதை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல்வேறு நோய்கள்

பல்வேறு நோய்கள்

கல்லீரல் பாதிப்பு, தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சினை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி குறைதல், புற்றுநோய் அபாயம், மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல் போன்ற பல்வேறு நோய்களை உருவாக்குகிறது ஆல்கஹால்.

கல்லீரலை பாதுகாக்கிறது

கல்லீரலை பாதுகாக்கிறது

அதிகப்படியாக மது குடிப்பவர்களுக்கு கல்லீரல் சுருக்கம் எனப்படும் சிரோசிஸ் காலப்போக்கில் ஏற்படலாம். இது ஒரு நாளில் ஏற்படாது. ஆனால் அதிகமாக குடிக்கும் ஆண், பெண் இருவருக்கும் கல்லீரலில் கொழுப்பு மாற்றங்கள் உருவாகின்றன. எனவே நீங்கள் குடிப்பதை நிறுத்தும்போது, அந்த மாற்றங்கள் மீளக்கூடியவை மற்றும் கல்லீரல் மீண்டும் இயல்பானதாக மாறிவிடும். கல்லீரல் ஒரு சகிப்புத்தன்மை கொண்ட உறுப்பு என்பதால், வறண்டு போன சில வாரங்களுக்குள் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படக்கூடும். கல்லீரல் அதன் பிற வேலைகளில் கவனம் செலுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இதய நோய் ஆபத்தைக் குறைக்கிறது

இதய நோய் ஆபத்தைக் குறைக்கிறது

குறைந்த அளவு ஆல்கஹால் இதயத்தை பாதுகாக்கிறது, ஆனால் அதிக அளவு ஆல்கஹால் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். ஆல்கஹால் அதிகளவு அருந்துபவர்களுக்கு கல்லீரலில் வளர்சிதைமாற்றம் ஏற்படுகிறது. டீஹைட்ரஜனேஸ்கள் எனப்படும் ஒரு நொதி உருவாகிறது. இருப்பினும், நீங்கள் அதிகமாக மது அருந்தும்போது, வேறு நொதியால் வளர்சிதை மாற்றப்படுகிறது. ஆல்கஹால் அருந்துவதைக் குறைக்கும்போது, மாரடைப்பு போன்று ஏற்படும் இதய நோய் ஆபத்துக்களைக் குறைக்கிறது. 30 நாட்களுக்கு ஆல்கஹால் அருந்துவதை நீங்கள் நிறுத்தும்போது, உங்கள் இதயத்தை மேலும் மேம்படுத்த, உடற்பயிற்சி செய்யுங்கள். இது நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. உடலுக்கும் நன்மை பயக்கிறது.

ஒயின்

ஒயின்

வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் ஒயின் குடிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, இது இருதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது என்று கூறப்படுகிறது. அதேபோன்று பெண்களுக்கும் இது பல நன்மைகளை அளிக்கிறது.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்

ஆல்கஹால் அருந்துகிறவர்கள் பலருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு நபருக்கு ஆல்கஹால் தொடர்பான புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து காலப்போக்கில் தவறாமல் குடிப்பதால் அதிகமாகும் என்று அறிக்கை கூறுகிறது. ஆல்கஹால் உட்கொள்வதற்கும் பின்வரும் வகை புற்றுநோயின் வளர்ச்சிக்கும் இடையே இணைப்புகள் காட்டப்படுகின்றன:

தலை மற்றும் கழுத்து

உணவுக்குழாய்

கல்லீரல்

மார்பகம்

பெருங்குடல்

எடை இழப்பு

எடை இழப்பு

ஆல்கஹால் கலோரிகளில் அதிகமாக இருக்கும்போது, மது, பீர் மற்றும் கலப்பு பானங்கள் ஒருவரின் உணவில் சர்க்கரையைச் சேர்க்கின்றன. எனவே, ஆல்கஹால் அருந்துவதை நிறுத்தும்போது, அது உடல் எடையை குறைக்க உதவக்கூடும். நீண்ட காலத்திற்கு ஆல்கஹால் அருந்தாமல் இருந்தால், எடை இழப்பு, உடல் அமைப்பில் முன்னேற்றம், வயிற்று கொழுப்பு குறைவாக, ட்ரைகிளிசரைட்களின் முன்னேற்றம் (இரத்தத்தில் உள்ள கொழுப்பு துகள்களில் ஒன்று) ஆகியவற்றை காணலாம். பல மோசமான உணவுகள் மற்றும் குடிப்பழக்கம் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

மூளை சக்தியை அதிகரிக்கும்

மூளை சக்தியை அதிகரிக்கும்

குடிப்பழக்கத்தின் சட்டபூர்வ வயது 21 ஆண்டுகள் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. டீனேஜ் மற்றும் கல்லூரி காலங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு குடிப்பழக்கம் ஒரு பெரிய பிரச்சினை. இது நினைவக இழப்பு மற்றும் மூளை வளர்ச்சியில் குறுக்கீடு ஏற்படுத்தும். மது அருந்துபவர்களுக்கு மூளையில் சில குறிப்பிட்ட கோளாறுகள் உள்ளன. அவை அதிகப்படியான ஆல்கஹால் காரணமாக இருக்கின்றன. மூளை பாதிப்பு நினைவாற்றலையும் செறிவையும் குறைக்கும். ஆல்கஹால் அருந்துவதை நிறுத்தும்போது, உங்கள் மூளை சக்தி அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, January 27, 2020, 17:30 [IST]
Desktop Bottom Promotion