Latest Updates
-
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
பெண்களுக்காக ஒரு அட்டகாசமான பீரியட் உள்ளாடையை அறிமுகப்படுத்தும் அன்மோடா!
என்.சி. ஜான் & சன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் ஒரு நிலையான ஃபேஷன் பிராண்ட் தான் அன்மோடா. இது பெண்களின் நிலையான மாதவிடாய்க்கான சிறந்த தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. அது தான் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பீரியட் உள்ளாடை.
என்.சி. ஜான் & சன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் ஒரு நிலையான ஃபேஷன் பிராண்ட் தான் அன்மோடா. இது பெண்களின் நிலையான மாதவிடாய்க்கான சிறந்த தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. அது தான் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பீரியட் உள்ளாடை. இந்த உள்ளாடை வசதியான, நீடித்த மற்றும் நெறிமுறையானவை. இது 4 அடுக்குகளால் ஆனது மற்றும் இது கறைகள் இல்லாத, கசிவுகள் இல்லாத, துர்நாற்றம் இல்லாத மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பாதுகாப்பை வழங்குகிறது.
பெண்களின் மாதவிடாய்க்கான நிலையான தீர்வுகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த பிராண்ட் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து நகராட்சி கழிவுகளில் 6 சதவீதத்திற்கு மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் பங்களிக்கின்றன. மாதந்தோறும் பெண்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1 மில்லியன் சானிட்டரி பேடுகள் உருவாக்கப்படுகின்றன. இதன் விளைவாக இந்தியாவில் மட்டும் வருடந்தோறும் 12 பில்லியன் சானிட்டரி பேடுகள் உற்பத்தி செய்யப்பட்டு அகற்றப்படுகின்றன. இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், ஒரு சானிட்டரி பேடு சிதைவடைவதற்கு 800 ஆண்டுகள் வரை ஆகலாம். எனவே சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத ஒரு தயாரிப்பை தயாரிக்க அன்மோடா பாடுபடுகிறது.

"நமது நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் செயலில் பங்கு வகிக்க வேண்டும்" என்று என்.சி. ஜான் & சன்ஸ் ஆடை பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியும், அன்மோடாவின் நிறுவனருமான அலெக்சாண்டர் நெரோத் கூறுகிறார். மேலும் தனிநபருக்கும், நாட்டிற்கும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆடைகளை உருவாக்குவதில் கவனத்தை செலுத்தவே அன்மோடா விரும்புகிறது. பீரியட் உள்ளாடை என்பது நாகரீகமான, நிலையான மற்றும் ஒரு மாற்றத்துக்கான தொடக்க புள்ளியாகும்.
மக்களின் உணர்வு மற்றும் நடந்து கொள்ளும் விதத்தை சாதகமாக பாதிக்கும் ஒரு சக்தி வாய்ந்த வழி என்றால் அது ஒருவரால் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்குவது என்று அன்மோடா நம்புகிறது. மாதவிடாய் காலத்தில் பீரியட் உள்ளாடைப் பயன்படுத்துவது, ஒரு பெண்ணின் சௌகரியத்தை அதிகரிக்கிறது. அதே சமயம் சுற்றுச்சூழலை பாதிக்காமலும் இருக்கிறது.
அன்மோடா, ஒரு சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருப்பவர்களின் குரலாக இருப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. அன்மோடா பிராண்டு, அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு துண்டும் வெறும் துணியாக மட்டும் இல்லாமல், சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. அதாவது இது மக்களிடம் நேர்மறையான தாக்கத்தை உண்டாக்கும் விதத்தில் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று இதன் தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள்.
அன்மோடா பற்றி
அன்மோடா என்பது ஒரு நிலையான ஃபேஷன் மற்றும் ஆடை பிராண்ட் ஆகும். இது ஒரு மாற்றத்திற்கான ஊக்கியாக உள்ளது. இயற்கையோடு இணக்கமாக வாழக்கூடிய ஒரு உலகத்தை உருவாக்க உதவுவதே இதன் நோக்கமாகும். மோடா என்றால் ஸ்பானிஷ் மற்றும் பிற 20 க்கும் மேற்பட்ட மொழிகளில் ஃபேஷன் என்று பொருள். ஆனால் நாங்கள் அன்மோடாவை விரும்புகிறோம். ஃபேஷன் துறையில் பல்வேறு மாற்றங்களும், வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளன. நாமும் அதற்கேற்ப மாறி வருகிறோம். அப்படி மாதவிடாய் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் போது, வலிமையானவர்களாக இருக்க பீரியட் உள்ளாடைகள் சிறந்த ஒன்றாக இருக்கும். இருப்பினும், எதிர்காலத்தில் அன்மோடா நிலையான மற்றும் ஃபேஷனான எல்லாவற்றையும் கொண்டிருக்கும்.
மேலும் விவரங்களுக்கு..
https://www.unmodaglobal.com/
என்.சி ஜான் பற்றி
என்.சி ஜான் அண்ட் சன்ஸ் 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குடும்பத்தால் நடத்தப்படும் வணிகமாகும். கடந்த 29 ஆண்டுகளாக ஆடை வணிகத்தில் உள்ளோம். நாங்கள் ஒரு தரமான மற்றும் நிலையான ஆடைகளை உருவாக்குகிறோம். மேலும் நாங்கள் பலவிதமான நிலையான மற்றும் புவிக்கு கேடு விளைவிக்காத பொருட்களாலான ஆடைகளைத் தயாரிக்கும் 100% நிலையான உற்பத்தியாளர்களில் ஒருவராக இருக்கிறோம். எங்களின் குறிக்கோள் "இயற்கையோடு இணக்கமானது" என்பதோடு, எங்களின் நோக்கம் புவியை மதித்து ஆதரிப்பதை உறுதி செய்வது ஆகும். இதை அடைவதற்கு, நாங்கள் எங்கள் நிறுவனத்தை United Nations Sustainable Development உடன் இணைத்துள்ளோம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











